05
Nov
இயக்கம் - ஜொலோ ஷாவோ (Chloé Zhao) நடிகர்கள் - ஜெம்மா சான், ரிச்சர்ட் மேடன், குமாயில் நஞ்சியானி, லியா மெக்ஹுக், பிரையன் டைரி ஹென்றி, லாரன் ரிட்லாஃப், பேரி கியோகன், டான் லீ, கிட் ஹரிங்டனுடன், சல்மா ஹெய்க், ஏஞ்சலினா ஜோலி பல்லாயிரம் வருடங்கள் முன்பு பூமியில் மனிதர்களை வேட்டையாடும் டீவியண்ட் மிருகங்களை அழிக்க, நட்சத்திர கூட்டத்தின் பின்னணியிலிருந்து Eternals சூப்பர் ஹீரோக்களை பூமிக்கு அனுப்புகிறது ஒரு சக்தி. மனிதர்களின் எந்த விசயத்திலும் தலையிடக்கூடாது என உத்தரவும் அவர்களுக்கு இருக்கிறது. 5000 வருடங்களாக மறைந்து வாழும் அவர்கள் அழிந்து போன டீவியண்ட் திரும்பவும் வரவே மறைவிலிருந்து மீண்டும் வந்து ஒன்று சேர்கிறார்கள். டீவியண்ட் மீண்டும் வந்தது எப்படி உலகத்திற்கு வரும் அழிவின் பின்னால் இருக்கும் உண்மை என்ன எனபது தான் Eternals படத்தின் கதை. உலகம் முழுக்க பல்லாயிரணக்கில் மார்வல் திரை உலகத்தில் Phase 4 பிரிவில் அடுத்ததாக 10 சூப்பர்…