எம்.ஜி.ஆரையே அசர வைத்த ‘அன்பே வா’ தயாரான சுவையான கதை!

எம்.ஜி.ஆரையே அசர வைத்த ‘அன்பே வா’ தயாரான சுவையான கதை!

வெள்ளித்திரையில் கொடிகட்டிப் பறந்தவர்களை வைத்துப் படமெடுத்த பிரமாண்ட நிறுவனம் ஏவிஎம் தயாரிச்ச படம் ‘அன்பே வா’. பொதுவாக இந்த நிறுவனத்தில் நடித்தாலே, அவர்கள் கொடி இன்னும் உயர ஆரம்பித்துவிடும். சிவாஜியை வைத்தும் ஜெமினியை வைத்தும் ஜெய்சங்கரை வைத்தும் எஸ்.எஸ்.ஆரை வைத்தும் ரவிச்சந்திரனை வைத்தும் என படங்கள் எடுத்த ஏவிஎம்... முதன் முறையாக எம்ஜிஆரைக் கொண்டு எடுத்த படம்தான் அன்பே வா. இதன் கதை உருவானதே அலாதியாக்கும்.. அதாவ்து 1961 ஆம் வருசம் வெளியான அமெரிக்க காதல் நகைச்சுவைத் திரைப்படமான கம் செப்டம்பர் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் குறிப்பாக மெட்ராஸில் சூப்பர் ஹிட் ஆனது. இதன் உள்ளாக்கத்தை ஏ.வி.எம் புரொடக்ஷன்ஸில் இருந்த ஏ.சி.திருலோக்சந்தர், தழுவி தனி ஒரு கதை பிடித்தார், ஆனால் ஏ.வி.எம் அப்படத்தைத் தழுவுவதற்கான உரிமையை வாங்கவில்லை என்பது தனிக் கதை. இந்த படத்துக்காக திருலோக்சந்தரின் சம்பளம் 70,000 ஆகும். ஆரூர் தாஸ் படத்தின் வசனங்களை எழுதினார், மற்றும் எஸ்.பி.முத்துராமன் உதவி…
Read More