ஆனந்தம் விளையாடும் வீடு – வீட்டில் ஆனந்தமில்லை !

ஆனந்தம் விளையாடும் வீடு – வீட்டில் ஆனந்தமில்லை !

இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கதில் சேரன், கௌதம் கார்த்தி, சரவணன் உட்பட கணக்கிலடங்கா நட்சத்திரங்கள் நடித்திருக்கும் படம் ஆனந்தம் விளையாடும் வீடு. ஒரு குடும்ப காவியம் என விளம்பரம் செய்யப்பட்டது, ஒன்றாக இருக்கும் சேரன் மற்றும் சரவணன் ஆகிய இரண்டு பங்காளி குடும்பம், அவர்களை பிரிக்க நினைக்கும் வில்லன், இரு குடும்பம் ஒன்று சேர்ந்து கட்டும் பிரமாண்ட வீடு, அதில் சேரனின் தம்பிகளால் வரும் குளறுபடி அதனால் பிரியும் குடும்பம், சேர்ந்ததா? பாதியில் நின்ற வீடு முடிக்கப்பட்டதா என்பதே கதை. குடும்ப உறவுகள் அதனுள் இருக்கும் உணர்வுகள் அவற்றை பற்றிய படங்கள், தமிழ் சினிமாவில் குடும்ப படங்கள் வருவது குறைந்து விட்டது. ஆனால் தமிழகமெங்கும் எல்லா திரையரங்குகளிலும் கூட்டத்தை வர வைக்கும் சக்தி குடும்ப படங்களுக்கு உண்டு. ஆனால் தமிழ் சினிமா ஏனோ அதை கண்டு கொள்வதில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு அந்த ஏக்கத்தை போக்க எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் படம் தான்…
Read More
விரைவில் திரைக்கு வரவிருக்கும் கௌதம் கார்த்திக், சேரன் இணைந்து நடிக்கும், “ஆனந்தம் விளையாடும் வீடு” !

விரைவில் திரைக்கு வரவிருக்கும் கௌதம் கார்த்திக், சேரன் இணைந்து நடிக்கும், “ஆனந்தம் விளையாடும் வீடு” !

கௌதம் கார்த்திக், சேரன் இணைந்து நடிக்கும், “ஆனந்தம் விளையாடும் வீடு” விரைவில் திரையில் ! நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் இணைந்து நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” தமிழில் நீண்ட இடைவேலைக்கு பிறகு பெரும் நடசத்திரங்கள் இணைந்து நடிக்க குடும்ப படமாக இப்படம் உருவாகியுள்ளது. இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கியுள்ள இப்படத்தை ஶ்ரீ வாரி ஃபிலிம் தயாரிப்பாளர் P.ரங்கநாதன் இப்படத்தை பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாரித்துள்ளார். தற்போது இப்படத்தின் முழு பணிகளும் முடிவடைந்து, படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இயக்குநர் நந்தா பெரியசாமி, ஶ்ரீ வாரி ஃபிலிம் தயாரிப்பாளர் P.ரங்கநாதன் இருவரும் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். இந்நிகழ்வில் ஶ்ரீ வாரி ஃபிலிம் சார்பில் தயாரிப்பாளர் P. ரங்கநாதன் கூறியதாவது… தர்மபிரபு படத்திற்கு பிறகு இது எனது இரண்டாவது படம். இயக்குநர் நந்தா பெரியசாமி முதலில் வேறோரு கதை தான் சொன்னார், ஆனால் அது எனக்கு சரிவரும் என தோணாததால் வேறொரு…
Read More