08
Oct
பிரைம் வீடியோவின் முதல் தெலுங்கு ஒரிஜினல் திரைப்படமான அம்மு, ஒரு அழுத்தமான, உணர்ச்சிகரமான த்ரில்லர், அக்டோபர் 19 ஆம் தேதி பார்வையாளர்களை கவர தயாராக உள்ளது. கிரியேட்டிவ் தயாரிப்பாளராக கார்த்திக் சுப்பராஜ் , எழுத்தும், இயக்கமும் சாருகேஷ் சேகர் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் இந்த டிராமா த்ரில்லரில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி, நவீன் சந்திரா மற்றும் சிம்ஹா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தியா மற்றும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பிரைம் உறுப்பினர்கள் அக்டோபர் 19, 2022 முதல் பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் அம்முவை ஸ்ட்ரீம் செய்யலாம் செப்டம்பர் 23 முதல் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2022க்கான பிரைம் வீடியோவின் பண்டிகை வரிசையின் ஒரு பகுதியாக அம்மு உள்ளது. பிரைம் வீடியோ சேனல்கள் மூலம் கூட்டாளர்களிடமிருந்து கவர்ச்சிகரமான "தீபாவளி சிறப்பு தள்ளுபடிகள்" கூடவே, பல மொழிகளிலும் பல அசல் தொடர்கள்…