25
Mar
இயக்கம் - எஸ்.எஸ். ராஜமெளலி நடிகர்கள் - ராம்சரண், ஜூனியர் என்.டிஆர், ராம்சரண், அஜய் தேவகன், ஆலியா பட் பாகுபலி மூலம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த, எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம்தான் ஆர்ஆர்ஆர். கோரோனா போராட்டங்களை தாண்டி பல தடைகளை கடந்து வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களை திருப்தி படுத்தியதா என்றால் கண்டிப்பாக திருப்திபடுத்தியுள்ளது. ரசிகர்கள் திரையரங்குகளில் கூச்சலிடுகிறார்கள் ஆனால் படமாக திரைக்கதையாக படம் அசத்துகிறதா என்றால் அது கேள்விக்குறி தான். 1920களில் சுதந்திரப் போராட்டகாலத்தில், வாழ்ந்த இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களை வைத்து கற்பனையாக ஒரு கதையினை உருவாக்கியிருக்கிறார் ராஜமெளலி. காட்டுக்குள் இருந்து கடத்தப்பட்ட தங்கை மல்லியைத் தேடும் பீம், அவரை பிடிக்க நியமிக்கப்படும் ராம ராஜூ. இருவரும் ஒன்றிணைந்து திரையில் நிகழ்த்தும் மாயாஜாலங்கள் தான் RRR. பீமா ஜீனியர் என் டி ஆர், படிக்காத தற்குறி, அடங்கிபோகும் நீரின் பிரதிபலிப்பு ஆனால் பொங்கும்போது மிரட்டுகிறார். பல இடங்களில்…