10
Aug
Zee Studios & Wayfarer Films பெருமையுடன் வழங்கும் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில், “கிங் ஆஃப் கொத்தா” திரைப்படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் இப்படத்தின் டிரெய்லரை இந்திய சினிமாவின் ஜாம்பவான்கள் ஷாருக்கான், மோகன்லால், சூர்யா, நாகார்ஜுனா ஆகியோர் சமூக வலைத்தளம் வழியே வெளியிட்டனர். முன்னணி நட்சத்திர நாயகன் துல்கர் சல்மான் நடிப்பில் அதிகாரம், லட்சியம் மற்றும் வஞ்சகம் நிரம்பிய சாம்ராஜ்யத்திற்கு கொண்டு செல்லும் இந்த அதிரடி ஆக்ஷன் திரைப்படம், ஓணம் பண்டிகை கொண்டாட்டமாகப் ஆகஸ்ட் 24, 2023 அன்று பார்வையாளர்களை மகிழ்விக்க வருகிறது. 'கிங் ஆஃப் கொத்தா' உலகம் வித்தியாசமானது, விசுவாசம் ஒரு அபாயகரமான சூதாட்டமாகவும், அரியணைக்கான பந்தயம் இடைவிடாத முயற்சியாகவும் இருக்கும் இந்த உலகில் கோதாவிற்கு ராஜாவாகும் ஒரு கவர்ச்சியான கதையை இப்படம் சொல்கிறது. ஆதிக்கத்தை நிலைநாட்டும் முயற்சியில் ஒரு வல்லமை மிக்க போட்டியாளராக துல்கர் சல்மான் முதன்மை வேடத்தில் பிரகாசிக்கிறார், புதிதாக வெளியிடப்பட்ட…