12
Sep
ஆஹா தமிழ் தளத்தின் முதல் ரியாலிட்டி ஷோ “சர்க்கார் வித் ஜீவா” 16 செப்டம்பர் முதல் ப்ரீமியர் ஆகிறது !!! ஒவ்வொரு வாரமும் நான்கு பிரபலங்கள் கலந்துகொள்ளும் நேர்த்தியான இந்த ‘நோ ரூல்ஸ்’ கேம்ஸ் ஷோவினை நடிகர் ஜீவா தொகுத்து வழங்குகிறார். 100% தமிழ் பொழுதுபோக்கு OTT தளமான ஆஹா தமிழ் பக்கம் அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது. ஆஹா தமிழின் முதல் ரியாலிட்டி கேம் ஷோவான 'சர்கார் வித் ஜீவா' செப்டம்பர் 16 ஆம் தேதி வெளியாகிறது. தமிழுக்கென பிரத்யேகமாக மிகப்பெரிய ரியாலிட்டி ஷோக்களை ஆஹா உருவாக்கி வருவது பார்வையாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. தெலுங்கு இந்தியன் ஐடல் நந்தமூரி பாலகிருஷ்ணா வழங்கும் தெலுங்கில் அன்ஸ்டாப்பபிள்ஸ் வித் NBK, சமந்தாவுடன் SAMJAM போன்ற பிரமாண்ட ஷோ வை போல், இந்த ஷோவும் பிரமாண்டமானதாக இருக்கும். தெலுங்கில் இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வரும் ஆஹா, 100% உள்ளூர் பொழுதுபோக்கு OTT இயங்குதளம் என்கிற…