ஆஹா ஒரிஜினலாக வந்து இருக்கும் ” பேட்டைக்காளி” எப்படி இருக்கு?

ஆஹா ஒரிஜினலாக வந்து இருக்கும் ” பேட்டைக்காளி” எப்படி இருக்கு?

பேட்டைக்காளி இயக்கம் - ராஜ்குமார் நடிப்பு - கலையரசன், லீலா அண்ணனுக்கு ஜே மூலம் கவனம் ஈர்த்த ராஜ்குமார் பேட்டைக்காளி எடுத்திருக்கிறார். ஒரு படமாக வந்திருக்க வேண்டியது கதையின் டீடெயில்களால் வெப் சீரிஸாக மாறியிருக்கலாம். ஜல்லிக்கட்டு அதன் பின்னணி அதிலுள்ள வன்மம் அன்பு நடைமுறை பழக்க வழக்கம் இதெல்லாம் இணைந்தது தான் இந்த சீரிஸ். பண்ணை குடும்பத்திற்கும், அங்கு பணியாற்றிய பணியாளர்களுக்கும் இடையே ஏற்படும் பிரச்னையில் இருந்து தொடங்குகிறது கதை. நிலம் கேட்ட கூலிப்பணியாளர்களை விரட்டியடிக்கும் பண்ணையாரின் பகை, தலைமுறைகளாக தொடர்கிறது. நிலமின்றி, பணியின்றி அகதிகளாக தனித்து வாழும் விவசாய கூலிகளுக்கு தலைமை ஏற்கிறார் கிஷோர். மலைகாட்டில் வசிக்கும் அவர்களுக்கு காட்டு மாடுகளின் தலைவன் மாடு கிடைக்கிறது. அதை கட்டிப் போடும் போது, அதை தேடி வரும் மாட்டுக் கூட்டத்தை வைத்து தங்கள் தொழிலை தொடங்குகிறார்கள் விவசாய கூலிகள்.   இதெல்லாம் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், மற்றொரு புறம், கவுரவம், ஆதிக்கம்…
Read More