’ஏலே’ படத்தை பொருத்தவரை நான் தனியாக பணியாற்றிய படம் அல்ல -ஹலிதா சமீம்!

’ஏலே’ படத்தை பொருத்தவரை நான் தனியாக பணியாற்றிய படம் அல்ல -ஹலிதா சமீம்!

ஒய் நாட் ஸ்டுடியோஸ் (Y Not Studios) மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் (Reliance Entertainment) நிறுவனங்கள் இணைந்து வழங்க, எஸ்.சசிகாந்த் தயாரித்துள்ள படம் ‘ஏலே’. இயக்குநர்கள் புஷ்கர் & காயத்ரி, தங்களது வால்வாட்ச்சர் பிலிம்ஸ் (Wallwatcher Films) சார்பில் முதல் படைப்பாக இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடக்‌ஷன் பணியை மேற்கொண்டுள்ளனர். ‘பூவரசன் பீப்பி’, ‘சில்லுக் கருப்பட்டி’ ஆகிய படங்களை இயக்கிய ஹலிதா சமீம் இயக்கியிருக்கும் இப்படத்தில் இயக்குநர் சமுத்திரக்கனி மற்றும் மணிகண்டன் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். கேபர் வாசுகி மற்றும் அருள்தாஸ் ஆகியோர் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் இயக்குநர் சமுத்திரக்கனி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் பேசிய சமுத்திரக்கனி, “பள்ளி மாணவியாக இயக்குநர் ஹலிதாவை 15 வருடங்களுக்கு முன்பு பார்த்தேன். இன்று இவ்வளவு பெரிய இயக்குநராக வளர்ந்து நிற்கிறார். ’ஏலே’ தான் அவருடைய முதல் கதை. இந்த கதையை 8…
Read More
ஏலே பட விளம்பரத்துக்காக நிஜமாக குச்சி ஐஸ் விற்ற சமுத்திரகனி!

ஏலே பட விளம்பரத்துக்காக நிஜமாக குச்சி ஐஸ் விற்ற சமுத்திரகனி!

28 ஜனவரி 2021 : ஹலிதா சமீம் இயக்கத்தில் வெளிவரவுள்ள “ஏலே” படத்தில் நடிகர் சமுத்திரகனி கிராமப்புறத்தில் குச்சி ஐஸ் விற்பனை செய்யும் “முத்துகுட்டி” எனும் கலகலப்பான மனிதராக நடிக்கிறார். படத்திற்கான விளம்பர முன்னோட்டமாக படத்தில் வரும் முதுகுட்டி கதாப்பாத்திர தோரணையில், மக்கள் புழங்கும் திருத்தணி முருகன் கோவில் முன்னால் ஏலே ஐஸ் வண்டியில் ( ஐஸ் நிறைந்த குளிரூட்டப்பட்ட வண்டி ) “குச்சி ஐஸ்” விற்பனை செய்துள்ளார். நகரம் முழுதும் முருக கடவுளின் தைப்பூச திருவிழா கொண்டாட்டத்தில் குழுமியிருக்க, மக்களுக்கு படத்தை பற்றிய அறிமுகத்தை கொண்டு செல்லும் பொருட்டு படக்குழு இவ்விடத்தை தேர்ந்தெடுத்து இந்த விளம்பரத்தினை செய்துள்ளது. சமுத்திரகனி ஐஸ் விற்பதை கண்டு ஆச்சர்யத்தில் ரசிகர்கள் பெரும் கூட்டமாக கூடிவிட்டனர். நடிகர் சமுத்திரகனி மக்களுடன் இயல்பாக உரையாடி மகிழ்ந்து, அவர்களுக்கு குச்சி ஐஸ் தந்தார். அங்கிருந்த ரசிகர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளுடன் கலந்துரையாடி அவர்களை மகிழ்வித்தார். இதனை தொடர்ந்து இதே மாதிரியான…
Read More