03
Mar
ZEE5 மற்றும் ZEE தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான “சங்கராந்திகி வஸ்துனம்” திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது. இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானபோது, அற்புதமான காமெடி, பழைய நினைவுகள், ஞாபகங்கள் மற்றும் குடும்ப உறவுகளை கொண்டாடும் அருமையான கதை ஆகியவற்றிற்காக பெரும் பாராட்டுக்களைக் குவித்தது. இயக்குநர் அனில் ரவிபுடியின் இயக்கத்தில், வெங்கடேஷ் டகுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சௌத்திரி மற்றும் உபெந்திரா லிமாயே ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்கள் பெற்றது. இந்தத் திரைப்படம் ஒரு குடும்பத்தில் நிகழும் சம்பவங்களை அழுத்தமான காமெடியுடன் பரபரப்பான ரோலர் கோஸ்டராக சொல்லியது. “YD ராஜு” என்ற ஓய்வு பெற்ற காவலர் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் டகுபதி, “பாக்யலக்ஷ்மி” (ஐஸ்வர்யா ராஜேஷ்) மற்றும் அவரது முந்தைய காதலியாக “மீனாட்சி” (மீனாட்சி சௌத்திரி) கதையின் மைய கதாப்பாத்திரங்களாக நடித்துள்ளனர். ஒரு பிரபல…