31
May
இயக்குநர் கிரண்ராஜ் K இயக்கத்தில், ரக்ஷித் ஷெட்டி நடித்துள்ள திரைப்படம் '777 சார்லி' 'சார்லி' என்ற நாய்க்குட்டி மற்றும் அதன் நண்பன் தர்மாவின் அன்பான கதையை விவரிக்கும் சாகசம் நிறைந்த நகைச்சுவை திரைப்படமே 777 சார்லி. அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, ஜூன் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர், பத்திரிக்கை ஊடக நண்பர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வினில் 'அவனே ஸ்ரீமன்நாராயணா' என்ற பன்மொழி திரைப்படத்தில் கடைசியாக நடித்த ரக்ஷித், தற்போது தனது தயாரிப்பு நிறுவனமான பரம்வா ஸ்டுடியோஸின் சார்பில் 777 சார்லியை தயாரித்துள்ளதோடு தர்மாவாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சக்தி பிலிம்ஸ், சக்தி வேலன் கூறியதாவது கார்த்திக் சுப்ராஜ் இந்த படத்தை எனக்கு போட்டு காட்டி, இதை வெளியிட வேண்டும் என்றார். இந்த படத்தில் நடித்த நாய்க்கு சிறந்த விலங்கு நடிகருக்கான விருது வழங்க வேண்டும். இந்த…