தமிழ் சினிமா இசையின் புதிய திறவுகோல்.’அன்னக்கிளி’ ரிலீஸான தினம்!

தமிழ் சினிமா இசையின் புதிய திறவுகோல்.’அன்னக்கிளி’ ரிலீஸான தினம்!

தமிழ் சினிமாவின் இசையை, அ.மு., - அ.பி. என்று, அதாவது அன்னக் கிளிக்கு முன்பு, அன்னக்கிளிக்கு பின்பு என்று பிரித்துப் பார்ப்பதுதான் சாமான்ய இசை ரசிகனின் அளவுகோல். அந்தப் படத்தின் மூலமாக வந்தது, தமிழ் சினிமா இசையின் புதிய திறவுகோல். கொஞ்சம் விளக்கமாக பஞ்சு அருணாசலம் சொன்னதைக் கேட்டு விட்டு தொடரலாமா? இப்போதெல்லாம் படம் ஒரு வாரம் ஓடினாலே மாபெரும் வெற்றி என்கிறார்கள். அப்போது 50-வது நாளை கடந்தால்தான் அந்தப் படம் ஓரளவுக்கேனும் வெற்றிபெற்றது என அர்த்தம். வெற்றி விழாக்களை அப்போது வெவ்வேறு ஊர்களில் நடத்துவார்கள். டீமாக அந்த விழாக்களுக்குச் செல்வோம். அப்போது, `எவ்வளவுக்கு வாங்குனீங்க... எவ்வளவு லாபம்?’ என்று தியேட்டர்காரர்களிடம் விசாரிப்பேன். `நல்ல ஷேர் சார். ஒன்றரை லட்சம் வந்துச்சு... ரெண்டைத் தாண்டிடும்’ என்பார்கள். `அடேங்கப்பா... என்னா லாபம்’ என நினைத்துக் கொள்வேன். ஆனால், அதே பகுதியில் வெவ்வேறு தியேட்டர்களின் போஸ்டர்களில் `ஆராதனா’ வெற்றிகரமான 20-வது வாரம்’ என்று ஒட்டியிருக்கும்.…
Read More