28
Oct
ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் ‘2.0’ மற்றும் பா.இரஞ்சித்தின் ‘காலா’ ஆகிய 2 படங்கள் உள்ளது. இதில் ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகம் என்று இது நாள் வரை பலராலும் நம்பப்பட்டு வந்த் ‘2.0’வை ‘லைகா புரொடக்ஷன்’ நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்து வருகிறார். சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் டூயட் பாடி ஆடியுள்ளார். பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு மிரட்டலான வில்லன் கதாபாத்திரமாம். ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். சமீபத்தில், படக்குழுவால் டிவிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் மற்றும் 2 மேக்கிங் வீடியோக்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இதன் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இப்படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த், அக்ஷய்…