31
Oct
1931-ம் ஆண்டு அக்டோபர் 31-ந்தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். எம். ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. ஜி. வெங்கடேசன், டி. பி. ராஜலட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இது சம்ஸ்கிருத கவிஞர் காளிதாசாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது. இப்படத்தில் பி.ஜி.வெங்கடேசன் முக்கிய வேடத்திலும், டி.பி.ராஜலக்ஷ்மி முக்கிய பெண் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். எல்.வி.பிரசாத், தேவாரம் ராஜாம்பாள், டி.சுஷீலா தேவி, ஜே.சுஷீலா மற்றும் எம்.எஸ்.சந்தானலட்சுமி ஆகியோர் துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இத்திரைப்படம்தான் தமிழில் வெளிவந்த முதலாவது பேசும் படமாகும். இந்தப் படத்தின் பாடல்கள் மதுரகவி பாஸ்கரதாஸ் எழுதி, நாடக மேடைகளில் பாடப்பட்டு வந்தவை. முதல் தமிழ்ப் படத்தின் பாடலாசிரியர் எனும் பெயர் பாஸ்கரதாசுக்கு கிடைத்தது. அதுவரை ஊமைப்படம் என்று சொல்லப்பட்ட மவுனப்படங்களையே பார்த்து ரசித்துக் கொண்டிருந்தவர்களுக்கு திரையில் பேசும் பாத்திரங்களைக் கண்டதுமே, படத்திலிருந்த சிறுசிறு குறைகளையும் தாண்டி கொண்டாடித் தள்ளிவிட்டார்கள். இந்தியாவின் முதல் பேசும் படமான ‘ஆலம் ஆரா’ (1931) தயாரித்த…