08
Jul
எண்பதுகளில் ஒரு பெண்ணை அழகானவளாகச் சொல்லவேண்டுமென்றால் 'ஸ்ரீதேவி போல...' என்பார்கள். நடிகைகளிலோ ஸ்ரீதேவி போல் அழகானவர் எவருமில்லை என்றிருந்தது ஒரு காலம். ஆனால், அதே காலம் எத்தனை குரூரமானது. அப்படிப்பட்ட அழகி மணமாகி பாலிவுட் போய் மூக்கு ஆபரேஷன் செய்து கொண்டு மைக்கேல் ஜாக்ஸன் தங்கை போல் ஆனதைத்தான் சொல்கிறேன். (உடனே 'எம்ஜே' அழகனில்லையா..? என்றோ, இது கருப்பின மக்கள் மீதான வன்முறை என்றோ சண்டைக்கு வந்து விடாதீர்கள். நானே கருப்பன்தான்..! அந்த 'டெவில் லைக்' மூக்குக்காக அப்படி ஒரு ஒப்புமை.) அப்போதிலிருந்து அவ்வப்போது மும்பையிலிருந்து வரும் ஸ்ரீதேவியின் புகைப்படங்கள் பார்த்து பெருமூச்சு விட்டு 'காண்டான' மனதை 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' ஓரளவு பதப்படுத்தியது. முகம் மாறினாலும், 'மூக்கு' சப்பாணியானாலும் அந்த அப்பிராணியான நடிப்பில் 'மயிலு' உயிர்ப்புடன் இருப்பது புரிந்தது. முகம் முழுதும் மாவு பூசி மறைத்த 'புலி' வில்லியை விட்டுவிடுங்கள்..! இப்போது அதே ஸ்ரீதேவி நடித்த 'மாம்' திரைக்கு வந்திருக்கிறது. இப்போது…