விக்ரம் வேதா கண்டிப்பாக பார்க்க வேண்டிய படைப்பு.

விக்ரம் வேதா கண்டிப்பாக பார்க்க வேண்டிய படைப்பு.

விக்ரமாதித்தன் வேதாளம் இதிகாசத்தை அட்டகாசமாக போலிஸ், ரௌடி கதையாக மாற்றியிருக்கிறார்கள். அந்த புதுமை தான் படத்தின் மிகப்பெரும்பலம். ஓரம்போ , குவாட்டர் கட்டிங் என்ற இரு படங்களுக்குப் பிறகு 7 வருட உழைப்பில் வந்திருக்கும் புஷ்கர் காய்த்திரியின் படம் விக்ரம் வேதா. படத்தின் ஒரு ஃபிரேம் கூட வீணாக்காமல் அத்தனை அழகாக திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். ஒரு படத்தின் பாதி வெற்றி அந்தப்படத்தின் நடிகர்கள் தேர்வில் இருக்கிறது. மாதவன், விஜய் சேதுபதி மட்டுமல்லாது படத்தில் வரும் ஒவ்வொரு சிறு கதாப்பாத்திரமும் அழகாக தேர்ந்தெடுத்து கையாளப்பட்டிருக்கிறது. தனக்கு சரியென்பதை துணிச்சலாக செய்யும் போலீஸ் அதிகாரி ஒரு ரௌடியை என்கவுண்டர் பண்ண அலைகிறார்கள். ரௌடி கூட்டதின் ஒரு என்கவுண்டருக்குப் பின் தானே போலிஸைத் தேடி வரும் ரௌடி பொலீஸ் மாதவனிடம் விளையாடும் வேதாள விளையாட்டுத்தான் விக்ரம் வேதா. சமீப காலத்தில் இத்தனை தெளிவாக, இவ்வளவு துல்லிய விவரங்களுடன் வந்திருக்கும் திரைக்கதை இது தான். விஜய் சேதுபதி சொல்லும்…
Read More