வெட்டி ஆபீசர்களை வி. ஐ. பி. – 2 ஆக்கிய தனுஷ் & கோ!

வெட்டி ஆபீசர்களை வி. ஐ. பி. – 2 ஆக்கிய தனுஷ் & கோ!

முன்னொரு காலத்தில் வெட்டி ஆபீசர் என்ற கிண்டலுக்கு ஆளான அததனை யூத்களுக்கு விமோசன்ம வந்து மூன்று வருடமாகிறது, ஆம. வேலையில்லா இளைஞர்கள் இப்போது தங்களை விஐபி என்று கம்பீரமாக சொல்லிக் கொள்வது வாடிக்கையாகி விட்டது. பொதுவாக ஒரு திரைப்படம் மக்களுக்கு பிடிப்பதற்கும், அது ஒரு மாற்றதை தருவதற்குமான வித்தியாசங்கள் எக்கச்சக்கம் உள்ளன. படு கேஷூவலாக லோ பட்ஜெட்டில் தனுஷை தவிர மிகப்பெரிய நட்சத்திரங்கள் யாருமில்லாமல் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி மக்கள் மனதில் இடம்பிடிக்கவும், ஒரு தரப்பின் அடையாளமாகவுமே மாறிப்போனதற்கான காரணங்கள் ஏராளம் உண்டு !! அதன் மிகப் பெரிய வெற்றிக்கு முதல் காரணம் அதன் திரைக்கதை, வேலையில்லா பட்டதாரி படத்தின் கதை மிகவும் எளிமையான ஒன்று, ஒரு வகையில் அதுவே அதை மக்களிடம் சென்று சேர மிகப்பெரிய கருவியாக இருந்திருக்கிறது எனறுதான் சொல்ல வேண்டும். மூன்று வீட்டை எடுத்துக் கொண்டால் ஒரு ஹவுஸில் இருக்கும் வேலையில்லாத மிடில் கிளாஸ் இளைஞன், அவன்…
Read More