மறக்க முடியாத மலேசியா வாசுதேவன்!

மறக்க முடியாத மலேசியா வாசுதேவன்!

வாசுதேவன் என்றால் யார் என்றுதான் கேட்பார்கள்... மலேசியா வாசுதேவன் என்றால் அடடே அவரா? என்பீர்கள்.. மலேசிய ரப்பர் தோட்ட தமிழரான இந்த வாசுதேவன் கடல் கடந்து வந்து தமிழகத்தை கட்டிப்போட்ட ஞான வித்தகன்.. இன்று அவரது நினைவுதினம்.. சாகாவரம் பெற்ற இந்த கலைஞனை நினைவுகூர்வதில் " ஆந்தை சினிமா  பிரஸ் கிளப்” பெருமை கொள்கிறது!!🙏 லாங்க் ட்ராவலில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருக்கும்போது, வீசும் எதிர்காற்றைப்போல இதமானதுதான் அந்தக் குரல். ஹீரோ இன்ட்ரோவில் திரை தீப்பிடிக்காத காலகட்டத்தின் நாயகர்களின் அறிமுகப் பாடல் மூலம் ரசிகர்களுக்கு தீயைக் கடத்தியதும் அந்தக் குரல்தான். இப்படி இருவேறு தொனிகளில் ஜாலங்களை நிகழ்த்தி, பலரது மனங்களை மயக்கிய அந்த மாயக்குரல் மலேசியா வாசுதேவனுடையது. 16 வயதினிலே’ படத்தில் ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு’ பாடலை மாறுபட்ட குரலில் பாட வேண்டும். அப்போது எஸ்பிபிக்கு தொண்டை கட்டி குரல் கம்மி போயிருந்தது.. "என்னய்யா இது.. பாலுக்கு இப்பப் போய் உடம்பு சரியில்லையாமே..என்ன செய்ய"…
Read More