20
Jul
ஆக்ஷன் கிங்'அர்ஜுனின் 150வது படமான 'நிபுணன்' வரும் ஜூலை 28அன்று வெளி வர உள்ளது. நடிகர் அர்ஜுனின் சினிமா வாழ்க்கையில் மைல் கல்லான 'நிபுணன்' திரைப்படத்தில் அவருடன் வரலக்ஷ்மி சரத்குமார், பிரசன்னா மற்றும் சுருதி ஹரிஹரன் ஆகியோர் நடித்துள்ளார். இப்படத்தின் டீஸர் மற்றும் ட்ரைலர் வெளி ஆகி, அதற்கு மக்களிடையேயும் சினிமா வட்டாரத்திலும் பெருமளவு வரவேற்பு கிடைக்க பெற்றதால் 'நிபுணன்' திரைப்படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பும் ஆவலும் உருவாகியுள்ளது . மிக மிக வித்தியாசமான கதை பிண்ணனியில் உருவாகும் 'நிபுணன்" திரைப்படத்தை அருண் வைத்தியநாதன் இயக்கியுள்ளார். அச்சமுண்டு அச்சமுண்டு' மற்றும் 'கல்யாண சமையல் சாதம்' ஆகிய தமிழ் படங்களையும், 'பெருச்சாளி' என்ற மலையாள படத்தையும் இயக்கியவர் அருண் வைத்தியநாதன். ”நிபுணன்” என்பது இந்தப் படத்தின் கதாநாயகனை குறிப்பிடுவது.கற்பனைக்கும் எட்டாத விதத்தில் தன்னுடைய பணியில் அறிவாற்றலினாலும், கடும் உழைப்பினாலும் உயர பறக்கும் ஒரு சாதனை யாளனின் கதை தான் நிபுணன். ஹோலி வுட் படங்களை…