ஓவியா ஃப்ரீதான் – ஆனா அவர் படங்கள் ஸ்பீடா ரெடியாகுது!

ஓவியா ஃப்ரீதான் – ஆனா அவர் படங்கள் ஸ்பீடா ரெடியாகுது!

தனியார் சேனல்  ஒன்று  தன் வளர்ச்சிக்காக தயாரித்து வழங்கி  ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலிருந்து நடிகை ஓவியா வெளிவந்ததிலிருந்து அந்நிகழ்ச்சியின் டி.ஆர்.வி. குறைந்து விட்டதாம். அதே சமயம் ஓவியாவுக்கு அடுத்தடுத்து  பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. ஆனாலும், அவர் எந்தப் படங்களிலும் கமிட் ஆகாமல்  தவிர்த்து வருகிறார். இதனிடையே  பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு அவர் நடித்த படங்கள் கிடப்பில் இருந்தன. தற்போது அவர் நடித்த படங்களை வெளியிட திட்டமிட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாது, மலையாளத்தில் அவர் நடித்த படங்களைத் தமிழில் டப் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் முதற்கட்டமாக அவர் நடித்த ‘மனுஷ்ய மிருகம்’ என்ற திரைப்படம் தமிழில் வெளிவரவிருக்கிறது. அப்படத்தின் டீசர் ஆகஸ்ட் 26ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போதே ‘ஓவியா ஆர்மி’ என அவரது ரசிகர்கள் எக்கச்சக்கமானோர் ஆதரவு தெரிவித்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகும் நடிகை ஓவியாவுக்கு…
Read More