19
Jul
ராஜமெளலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி 2' திரைப்படம் தமிழகத்தில் தற்போது பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது. 75 நாட்களைக் கடந்துவிட்டாலும், தற்போது வெளியாகும் சில புதிய படங்களூக்கு நிகராக கூட்டமிருப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்தார்கள். தமிழக விநியோகத்தில் இதற்கு முன்பு வெளியான அனைத்து படங்களின் வியாபார சாதனைகளையும் முறியடித்ததுள்ளது. இனிமேல் வெளியாகவுள்ள படங்கள், 'பாகுபலி 2' செய்துள்ள சாதனையை முறியடிப்பது மிகவும் கடினம் என்று விநியோகஸ்தர்கள் குறிப்பிட்டார்கள். இதனிடையே பாகுபலி நாயகன் பிரபாஸ் அனுப்பிய ஓர் அறிக்கையில், “இன்றோடு பாகுபலி-1 திரையிடப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. என் வாழ்வின் பொன்னான, மிக சிறந்த அந்த நாளின் நினைவுகளை ஆழமான நன்றியோடு நினைவு கூறுகிறேன். பாகுபலி குழுவினர் அனைவரும் ஒருமித்த எண்ணத்துடனும் மிகப் பெரிய ஆர்வத்துடனும், ஒற்றுமையாக பணியாற்றிய அந்த நாட்களின் நினைவுகள் என்னை சிலிர்ப்போடுத் திரும்பிப் பார்க்க வைக்கின்றன. என்னை இவ்வளவு பெரிய உயரத்தில் வைத்து அழகு பார்க்கும் ரசிகர்களுக்கும், நான்…