23
Apr
‘என் ஆளோட செருப்பக் காணோம்’ என்ற தலைப்பில் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த போஸ்டர்கள் நிச்சயம் தமிழ் திரைப்பட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும். அது என்ன ? , இப்படி ஒரு தலைப்பு என இயக்குனர் ஜெகன்நாத்திடம் கேட்ட போது, “ஒரு செருப்பு கூட நம் வாழ்க்கையில் சில திருப்பங்களை ஏற்படுத்திவிடும். ஒரு சமயம் ஒரு தெலுங்குத் தயாரிப்பாளருக்குக் கதை சொல்ல போன போது, நான் அணிந்து கொண்டிருந்த ஒரு ஷு, அவரைச் சந்திக்க சென்ற ஹோட்டலுக்கருகில் தனித் தனியாக வந்துவிட்டது. என்ன செய்வதென்று தெரியாமல், அவருக்கு போன் செய்து வேறு ஒரு காரணத்தைச் சொல்லி மாலை சந்திப்பதாகச் சொன்னேன். அந்த ஷு பிரச்சனை இல்லாமல் இருந்து, நான் அவரைச் சந்தித்து, அந்தப் படத்தை எடுத்திருந்தால் தெலுங்கில் ஒரு பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்திருக்கலாம். ஆனால், அவரைச் சந்திக்க முடியாமல் போனதால் அப்படி எதுவும் நடக்கவில்லை. சென்னையில் மழை, வெள்ளம் வந்த போது எத்தனையோ…