பாட்டுக் கோட்டை கட்டிய பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்!

பாட்டுக் கோட்டை கட்டிய பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்!

ஒருமுறை மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் அவரது சகோதரர் கணபதி சுந்தரமும் பெண்பார்க்க, பக்கத்து கிராமமான ஆத்திக்கோட்டைக்கு சென்றிருக்கிறார்கள். கிராம வழக்கப்படி பெண் பார்த்து முடித்துவிட்டு தம்பியும் தமையனும் குதிரை வண்டியில் வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார்கள். வரும் வழியில், கவிஞரின் தமையனார், தம்பி பெண் நன்றாயி ருக்கிறாளா?  என்று வினைவியிருக்கிறார். அதற்குக் கவிஞர், அழகான பெண்ணண்ணே என்றிருக்கிறார். வீட்டுக்கு வந்ததும், தம்பி பெண் எனக்கல்ல உனக்குத் தான் என்றிருக்கிறார் கவிஞரின் தமையனார். உடனே கவிஞர் சந்தோஷ மிகுதியால் ஏட்டில் ஒரு நான்கு வரிகளை எழுதி வைத்துக் கொண்டார். அவர் அவ்வாறு எழுதி வைத்திருந்த வரிகளைத் தான் பிறகு அமுதவல்லி திரைப்படத்துக்குப் பாடலாக வழங்கினார். அந்தப் பாடல், “ஆடை கட்டி வந்த நிலலோ கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ குளிர் ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள் காடு விட்டு வந்த மயிலோ நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ!” முதலில்…
Read More