விஜய் யேசுதாஸுக்காக தனுஷ் பாடினார்!

விஜய் யேசுதாஸுக்காக தனுஷ் பாடினார்!

மணிரத்னத்திடம் துணை இயக்குனராக பணிபுரிந்த தனா இயக்கும் படம் ‘படை வீரன்’. இந்த படத்தில் பின்னணிப் பாடகர் விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக நடிக்க, அம்ரிதா ஐயர் கதாநாயகி யாக அறிமுகமாகிறார். இவர்களுடன் முக்கிய பாத்திரம் ஒன்றில் இயக்குனர் பாரதிராஜா நடிக்க, இயக்குனர்கள் மனோஜ் குமார், கவிதாபாரதி மற்றும் நிதிஷ் வீரா, கலையரசன், சுரேஷ் ஏகா, சாரா ஜோசஃப், கன்யா பாரதி ஆகியோரும் நடிக்கிறார்கள். தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ள இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தை பார்த்த தனுஷ் படத்தை பாராட்டியிருப்பதுடன் இந்த படத்தில் தன்னுடைய பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று கூறி, ‘லோக்கல் சர்க்கா… ஃபாரின் சர்க்கா…’ என்று துவங்கும் பாடலை கார்த்திக் ராஜா இசையில் பாடியுள்ளார். ஒரு பின்னணிப் பாடகர் நடிக்கும் படத்திற்கு ஒரு பிரபல நடிகர் பாடல் பாடுவது இதுதான் முதல் முறை என்கின்றனர் இப்படக்குழுவினர்.…
Read More
சிம்பு மியூசிக்கில் உருவான  சக்க போடு போடு ராஜா’ பட பாடல் க்ளிம்ப்ஸ்

சிம்பு மியூசிக்கில் உருவான சக்க போடு போடு ராஜா’ பட பாடல் க்ளிம்ப்ஸ்

சந்தானம் நடிப்பில் சிம்பு இசையமைக்கும் படம் 'சக்க போடு போடு ராஜா'. இந்தப் படத்தை நடிகரும் தயாரிப்பாளருமான வி.டி.வி.கணேஷ் தயாரித்துள்ளார்.  சந்தானத்திற்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா டூயட் பாடி ஆடி வருகிறார்.மேலும், முக்கிய வேடங்களில் விவேக், ரோபோ ஷங்கர், விடிவி கணேஷ், சம்பத், சஞ்சனா சிங் ஆகியோர் நடிக்கின்றனர். நடிகர் ‘யங் சூப்பர் ஸ்டார்’ சிம்பு இசையமைத்து வரும் இதற்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்து வருகிறார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘விடிவி புரொடக்ஷன்’ நிறுவனம் சார்பில் விடிவி கணேஷ் தயாரித்து வருகிறார். தற்போது இப்படத்தின் `கலக்கு மச்சா தௌலாத்துல' பாடல் யூடியூபில் நேற்று(செப்டம்பர் 8) வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார்.`பீப்' பாடல் பாடி பெரும் சர்ச்சைக்கு உள்ளானன, அனிருத்-சிம்பு கூட்டணி 'சக்க போடு போடு ராஜா' படத்துக்காக மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தில் அறிமுக பாடலாக வரவிருக்கும் `கலக்கு மச்சா தௌலாத்துல' பாடலை அனிருத் பாடியுள்ளார். இந்தப் பாடலின்…
Read More
கூத்தன் படத்தில் ரம்யா நம்பீசன் பாடல்!

கூத்தன் படத்தில் ரம்யா நம்பீசன் பாடல்!

"பை பை பை கலாச்சி பை என்ற பாடலை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது இந்த பாடலை பாடிய நடிகை "ரம்யா நம்சபீன்" பாண்டிய நாடு படத்திற்கு பிறகு "கூத்தன்" என்ற திரைப்படத்தில் மீண்டும் பாடியுள்ளார். நீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட் தற்போது "கூத்தன்" இத்திரைப்படம் ஒரு நடன கலைஞர்கள் வாழ்க்கையும் துணை நடிகர்கள் வாழ்க்கையில் நடக்கும் பின்னணியில் எடுக்கபடுகின்ற திரைப்படமாகும். ஹீரோவாக களம் இறங்கும் நடிகர் "ராஜ்குமார்" இவருக்கு வில்லனாக (பிரபுதேவா தம்பி) "நாகேந்திர பிரசாத்" நடிக்கிறார். ஹீரோயினாக "ஸ்ரீஜீதா", "கிரா" மற்றும் "சோனா" புதுமுக நாயகிகள் நடிக்கின்றனர்கள், இதை எழுதி இயக்குகிறார் இயக்குனர் "AL.வெங்கி" "சூரன்" மற்றும் பல கன்னட படங்களில் இசையமைப்பாளரான "பாலாஜி" இசையமைக்க துள்ளவைக்கும் குத்து கலந்த கவிஞர் "விவேகா" வரிகளில் "ஓடு ஓடு காதல் காட்டு மிராண்டி" என்ற பாடலை நடிகை மற்றும் பாடகியான "ரம்யா நம்பீசன்" நேற்று பாடினார். "ரம்யா நம்பீசன்" அவரது…
Read More
’எப்படி இருந்த’ சினிமா  “இப்படி ஆயிடுச்சு!” – 1

’எப்படி இருந்த’ சினிமா “இப்படி ஆயிடுச்சு!” – 1

திரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டைரக்ஷன் என்பன ஒரு படத்தை உச்ச நிலைக்கு உயர்த்துகின்றன. ஆரம்பகால தமிழ்த்திரைப்படங்களைப் பாடல்களே ஆக்கிரமித்தன 85 சங்கீதங்கள் நிறைந்த படம் எனறே அறிமுகப்படுத்துவார்கள். ஹரிதாஸ், சிந்தாமணி போன்ற படங்களின் பாடல்களை அந்த காலத்து ரசிகர்கள் இன்றும் …கித்துப் பேசுவார்கள். பாடல்களுக்கிடையே ஒரு சில வசனங்கள் பேசப்படும் அன்பே, சுவாமி, கண்ணே, நாதா, ஆரமுதே, பிராணநாதா போன்ற சொற்கள் அடிக்கடி உச்சரிக்கப்படும் நாயகனும் நாயகியும் எட்ட நின்றே உரையாடுவார்கள். கையைப் பிடிப்பார்கள் கட்டிப்பிடிக்கமாட்டார்கள். 1935 ஆம் அண்டு வெளிவந்த மேனகா என்ற படம் இந்தக் கட்டுப்பாடுகளை உடைத்தெரிந்தது. முத்தம், கற்பழிப்பு என்பன இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகியது. முத்தம் என்றதும் கன்னாபின்னாவென்று கற்பனை செய்ய வேண்டாம். கை, கன்னம் உச்சியென்பனவற்றிலே தான். நாயகன் முத்தமிட்டான் இப்படத்தைப்பற்றிய விமர்சனங்கள் கடுமையாக…
Read More