நாச்சியார் ஷூட்டிங்-கில் ஜி வி பிரகாஷ் கமிட்மெண்ட் முடிஞ்சிடுச்சு!!

நாச்சியார் ஷூட்டிங்-கில் ஜி வி பிரகாஷ் கமிட்மெண்ட் முடிஞ்சிடுச்சு!!

புரூஸ் லீ' படத்திற்கு பிறகு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக சண்முகம் முத்துசாமியின் ‘அடங்காதே’, வெங்கட் பக்கரின் ‘4ஜி’, வள்ளிகாந்தின் ‘செம’, பாபா பாஸ்கரின் ‘குப்பத்து ராஜா',பாலாவின் ‘நாச்சியார்’, ரவி அரசுவின் ‘ஐங்கரன்’ ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இது தவிர கைவசம் ராஜீவ் மேனனின் ‘சர்வம் தாள மயம்’, எழிலின் ‘எக்கடிக்கி போதவு சின்னவாட’ ரீமேக், வெற்றிமாறன் படம், சந்திரமௌலியின் ‘100% காதல்’ ரீமேக், சீமானின் ‘கோபம்’ ஆகியவை உள்ளது. இவற்றில் ‘நாச்ச்சியா’  நீண்ட இடைவெளிக்குப்பின் பாலா இயக்கி வரும் படம் ‘ இந்தப் படத்தில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. இத்தகவலை ஜி.வி. பிரகாஷ் ட் விட்டரில் தெரிவித்துள்ளார்.இந்தப் படத்தை பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து சூர்யாவின் 2டி நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்த  ‘நாச்சியார்’ படத்தில் ‘விர்ஜின் பசங்கத் தலைவர்’ ஜி.வி.பிர காஷ் குமார் திருடனாக…
Read More
பாலா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் & ஜோதிகா நடிக்கும் “நாச்சியார்” பட பூஜை ஆல்பம்!

பாலா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் & ஜோதிகா நடிக்கும் “நாச்சியார்” பட பூஜை ஆல்பம்!

ஜோதிகா-ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் பாலா இயக்கும் ‘நாச்சியார்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நேற்று வெளியாகி, சமூக வலைத்தளங்களை பரபரப்புக்கு ஆளாக்கியது. இந்நிலையில்,  நேற்று இப்படத்தின் படப்பிடிப்பை பூஜையுடன் தொடங்கியுள்ளனர்.  படப்பிடிப்பு தொடங்கியுள்ளதை யடுத்து, இப்படத்தை வருகிற செப்டம்பரில் வெளியிட முடிவு செய்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்தில் ‘நாச்சியார்’ என்ற கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்க விருக்கிறாராம். முழுக்க முழுக்க அவரை மையப்படுத்தியே இந்த கதை நகரவுள்ளதாம். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார். பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. விரைவில், இப்படத்தில் நடிக்கவுள்ள மேலும் நடிகர், நடிகையர் விவரங்கள் வெளியிடப்படும் என தெரிகிறது.
Read More