‘பப்ளிக் ஸ்டார்’  துரை சுதாகர் நடிக்கும் ‘தப்பாட்டம்’.

‘பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர் நடிக்கும் ‘தப்பாட்டம்’.

தமிழகத் தோல் இசைக் கருவிகளில் மிக முக்கியமானது பறை. பறை ஆட்டம், தப்பாட்டம் என இரு பெயர் தாங்கிய பறை இசை, வடிவ மாற்றங்களால் உரு மாறினாலும் சங்க காலம் முதல் சம காலம் வரை அழிவின்றி அதிரோசை எழுப்பிக்கொண்டிருக்கிறது.  தப்பு என்ற இசைக்கருவியை இசைத்துக்  கொண்டு ஆடப்படும் ஆட்டம் என்பதால், தப்பாட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கலையைப் ‘பறையாட்டம்’ என்றும் அழைக்கிறார்கள். ‘பறை’ என்ற இசைக் கருவியைத்தான் ‘தப்பு’ என்றார்கள். இதை மாட்டுத்தோலில் செய்கிறார்கள். மரக் கட்டையால் செய்யப்பட்ட வட்ட வடிவ சட்டத்தில் பதப்படுத்தப்பட்ட மாட்டுத்தோலை ஒட்டி பறை செய்யப்படுகிறது. இவ்வாறு ஒட்டு வதற்குப் புளியங்கொட்டையிலிருந்து தயாரிக்கப்படும் பசையைப் பயன்படுத்துகி றார்கள். இந்தக் கலையை நடத்துகிறவர்களே பறையைத் தயார் செய்து கொள்கிறார்கள். பறையை அடிப்பதற்கு மூங்கில் குச்சியைப் பயன்படுத்துகிறார்கள். இதைச் சிம்புகுச்சி அல்லது சிம்படி குச்சி என்று அழைக்கிறார்கள். தப்பு அடிக்கும் கலைஞர்கள் இந்தக் குச்சியை இடது கையில் வைத்திருப்பார்கள். பூவரசு…
Read More