டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையை படமாக்கி நடிக்கிறார் எஸ். ஏ. சந்திரசேகர்!

டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையை படமாக்கி நடிக்கிறார் எஸ். ஏ. சந்திரசேகர்!

சக பத்திரிகை நண்பர்  ஒருவர் குறிப்பிட்டது போல், ‘எந்த முக்கியத்துவமும் கோர முடியாத முகத்தோற்றம், ஐந்தடி உயரம், சாதாரண உடல்வாகு, சட்டைப்பையில் கற்றை கற்றையாக பேப்பர்கள்; இவை பெரும்பாலும் வழக்கு குறித்த மனுக்கள். விறுவிறுப்பான நடை, நினைத்ததைத் தயக்கமின்றிப் பேசும் தன்மை, அதில் வெளிப்படும் உறுதியான தொனி... இடையிடையே கொஞ்சம் சிரி¢ப்பு... இவைதாம் 82 வயதாகும் கே.ஆர். ராமசாமி என்ற ‘டிராபிக்’ ராமசாமியின் அடையா ளங்கள். பிறப்பால் பிராமணர், செயல்பாடுகளில் போர்க் குணமிக்க க்ஷத்திரியன் என்று தயங்காமல் சொல்லலாம். மக்கள் சந்திக்கின்ற தெரு பிரச்சினைகள் தொடங்கி சிக்கலான அரசியல் பிரச்சினைகள்வரை 500க்கும் மேற்பட்ட பொது வழக்குகள் தொடுத்தவர்’ இந்த ‘டிராபிக்’ ராமசாமிக்கு தமிழகம் முழுக்க மட்டுமின்றி வெளிநாடுகளிலும்கூட ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகியிருக்கிறது. காரணம் கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஒன்றையடுத்து ஒன்று எனத் தொடுக்கும் பொதுநல வழக்குகள் அவருக்கு ஊடக ஆதரவைத் தேடிக்கொடுத்தன. அவரைப்பற்றிய சிறப்புக் கட்டுரைகள் அநேகமாக அனைத்து தமிழ்…
Read More