04
Jul
2008-ம் ஆண்டு இதே ஜூலை 4-ம் தேதி வெளியான படம் 'சுப்ரமணியபுரம்'. சசிகுமார் டைரக்ட் & நடிச்சு, தயாரிச்சு இருந்தார். ஜெய், சமுத்திரக்கனி, ஸ்வாதி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் சசிகுமாருடன் நடித்திருந்தனர். ஜேம்ஸ் வசந்தன் இசையமைப்பில் உருவான படத்துக்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்திருந்தார். எண்பதுகளின் மதுரையில் சுப்ரமணிபுரம் என்ற பகுதியில் நடப்பதாக சித்தரிக்கப்பட்ட திரைப்படம் சசிகுமாரின் ‘சுப்ரமணியபுரம்’. அதன் காட்சியாக்கம், கலை இயக்கம், நடிப்பு, இசை ஆகியவற்றுக்காக மட்டுமல்ல; திரைக்கதைக்காகவும் பெரிதும் கொண்டாடப்பட்டது. இப்படம் உருவாக்கிய சலனமும் தாக்கமும் தமிழ் சினிமாவைக் கொஞ்சம் நிமிர்ந்து பார்க்க வச்சது என்னவோ நிஜம்.இந்தப் படத்தை முடிச்சு வச்சிப்புட்டு ரிலீஸ் செய்ய அவர் பட்டப்பாடை விட சசிகுமாரிம் நண்பனாக இருந்த வீ.கே.சுந்தர் பட்ட மெனக்கெடல் இன்றைக்கும் நினைவில் உள்ளது.. இப்ப கொஞ்சம் பிகு பண்ணும் ஆர்டிஸ்ட் லிஸ்டில் சேர்ந்து விட்ட சசிகுமாரிடம் முன்னொரு காலம் நம்ம கட்டிங் கண்ணையா அடிக்கடி பேசுவது உண்டு. அந்த…