25
May
கவுண்டமணி’ எனும் பெயர் இல்லாமல் தமிழ் சினிமாவின் நகைச்சுவை பக்கங்களை நிரப்ப முடியாது. 70களில் நடிக்கத் தொடங்கினாலும் 2கே கிட்ஸையும் 2.1கே கிட்ஸையும் கவரும் காலத்தால் அழிக்க முடியா நகைச்சுவைக் காட்சிகளையும் தமிழ் மக்களின் அன்றாடப் பேச்சு வழக்கின் தவிர்க்க முடியா அங்கமாகிவிட்ட வசனங்களையும் கொடுத்த நடிகர் கவுண்டமணி. அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் சகாப்தம் படைத்தவர் கவுண்டமணி. அவர் இன்று தனது 85-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்💐 உடுமலைப்பேட்டை அருகில் உள்ள வல்லக்கொண்டபுரம் பகுதியில் பிறந்தவரின் நிஜப் பெயர் சுப்ரமணி. திரையில் தலைகாட்டத் தொடங்குவதற்கு முன்பே திருமணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்டனர். 1970இல் வெளியான 'ராமன் எத்தனை ராமனடி' கவுண்ட மணியின் முதல் படமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பே 'சர்வர் சுந்தரம்', 'ஆயிரத்தில் ஒருவன்' போன்ற படங்களில் அவர் கூட்டத்தில் ஒருவராகத் திரையில் தோன்றியிருக்கிறார். ஆனால் திரையுலகில் இயக்குனர் பாரதிராஜாவால் 16 வயதினிலே படத்தின் மூலம் கவுண்டமணியாக அறிமுகம்…