என்னை ஏன் சந்தித்தார் கெஜ்ரிவால்? – கமல் பேட்டி!

என்னை ஏன் சந்தித்தார் கெஜ்ரிவால்? – கமல் பேட்டி!

நடிகர் கமல்ஹாசன் அண்மை காலமாக ட்விட்டர் மூலம் அன்றாட அரசியல் நடப்புகள் குறித்து கமெண்ட் போடும் சில வார்த்தைகளே தமிழக ஊடகங்களின் விவாதப் பொருளாக மாறி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கேரளாவில் பினராயி விஜயனைச் சந்தித்த கமல், அரசியல் கற்றுக்கொள்ள வந்ததாகக் கூறியதையடுத்து, கமல் மார்க்சிஸ்ட்டில் சேரப் போகிறார் என்று தகவல் வெளியாகியது. ஆனால், அதை கமல் மறுத்துவிட்டார். தொடர்ந்து கட்சி ஆரம்பிப்பது குறித்துச் சிந்தித்து வருவதாகவும் தனியார் இணையதளத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். இதற்கிடையே டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலும், கமல்ஹாசனும் சந்திக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியது. அதன்படி ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று (செப்டம்பர் 21) சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் மகள் அக்ஷராஹாசன், கெஜ்ரிவாலை வரவேற்றார். பின்னர் ஆழ்வார்பேட்டை யிலுள்ள கமல்ஹாசன் இல்லத்தில் அவரை சந்தித்தார். ஒரு மணி நேரத்துக்கு மேலாக இருவரும் ஆலோசனை நடத்தினர். அதன்பின்…
Read More