ஜூன் 2ம் தேதி ரிலீஸாகும் ‘முன்னோடி’ படத்தில் என்ன ஸ்பெஷல்?

ஜூன் 2ம் தேதி ரிலீஸாகும் ‘முன்னோடி’ படத்தில் என்ன ஸ்பெஷல்?

யாரை முன்னோடியாகக் கொண்டு பின்பற்றுகிறானோ அதைப் பொறுத்தே அவனது வாழ்வு உயர்வாகவோ தாழ்வாகவோ அமையும் என்ற கருத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ள படம் ‘முன்னோடி’ எஸ்.பி.டி.ஏ.ராஜசேகர், சோஹம் அகர்வால் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். 'கங்காரு' படத்தின் நாயகன் அர்ஜுனா, இன்னொருவர் 'குற்றம் கடிதல்' படத்தில் குணச்சித்திர நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த பாவல் நவநீதன் இருவரும் மிக முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பவர் எஸ்.பி.டி.ஏ.குமார். தொழிலதிபரான இவர் சினிமா மீது கொண்ட காதலால் யாரிடமும் அசிஸ்டெண்டாக பணிபுரியாமல் இயக்குனர் ஆகியிருக்கிறார். இதற்கும் முன் ஷூட்டிங்கைக் கூட வேடிக்கைப் பார்த்தது இல்லையாம். படத்தின் டைட்டிலுக்கேற்ப இயக்குனர், தயாரிப்பாளர் இருவரும் தங்கள் முன்னோடிகளான தாத்தா, கொள்ளு தாத்தா பெயர்களையும் தங்கள் இனிஷியலில் சேர்த்திருக்கிறார்கள். அறிமுக இயக்குனராக இருந்தாலும் படத்தில் ஒரு பாடல் காட்சியை மட்டும் முழுக்க முழுக்க கிராபிக்ஸ் காட்சிகளால் எடுத்து தன் திறமையைக் காட்டியிருக்கிறார்…
Read More