17
Oct
‘’ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் ஓடப்பர் உதையப்பர் எல்லாம் மாறி ஒப்பொப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ!’’ -ஒவ்வொரு வார்த்தையாக திரையில் ஒலிக்க.. ஒலிக்க.. தமிழ்நாடே கையை தூக்கி இரண்டு இளைஞர்களிடம் சரண்டர் ஆனது. ஒவ்வொரு வசனத்தையும் திருக்குறளைப்போல மனப்பாடம் செய்து ஒப்பித்தது. தமிழகம் முழுக்க மிகப்பெரிய அதிர்வலைகளை அந்த திரைப்படம் உருவாக்கியது. அந்த வசனங்கள் அரை நூற்றாண்டுகளுக்கு பின்னும் தமிழகமெங்கும் அன்றாடம் எங்காவது நினைவு கூறப்படுகிறது. பராசக்தி படத்துக்கு இந்த நாளோடு எழுபத்து இரண்டு வயதாகிவிட்டது. 1952ஆம் ஆண்டின் தீபாவளி தினம் அன்று. சிவாஜி கணேசனுக்கு அதுதான் முதல் படம். வசனம் எழுதியிருந்த மு. கருணாநிதிக்கு அது ஏழாவது படம். தமிழ்நாட்டில் படம் வெளியான திரையரங்குகளில் எல்லாம் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்காக அந்த நேரத்தில் கருதப்பட்ட மதுரை தங்கம் திரையரங்கத்தில் முழுமையாகக்கூட கட்டுமானப் பணிகள் முடிவடையவில்லை. முதல் படமாக பராசக்தி வெளியானது. சுமார் 2,500 பேர் அமரக்கூடிய…