18
Jul
கமல்ஹாசன் இயக்கத்தில் கமல், ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, ராதாரவி ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் சபாஷ் நாயுடு. இப்படம் தசாவதாரம் படத்தின் பல்ராம் நாயுடு கதாபாத்திரத்தை மட்டும் மையமாக வைத்து உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பிஸியாக இருப்பதால், நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த சபாஷ் நாயுடு வெளிவராது என்று செய்திகள் வெளியாவதை கமல் தரப்பு மறுத்து உள்ளது. . முன்னதாக இந்த சபாஷ் நாயுடு திரைப்படம் ஒரு குறுகில கால தயாரிப்புக்கு திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த படத்தின் இயக்குனர் ராஜீவ் குமார் அமெரிக்க படப்பிடிப்பின்போது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் படத்தில் இருந்து விலகினார். இதனையடுத்து கமல்ஹாசனே இந்த படத்தை இயக்கினார். இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ஜேம்ஸ் ஜோசப் தனது மனைவிக்கு விபத்து நேர்ந்ததால் அவரும் படத்தில் இருந்து விலகினார். மேலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்கு…