02
Nov
மீஞ்சூர் கோபி இயக்கத்தில் தண்ணீர் பிரச்சனை குறித்து பேசும் படம் தான் “அறம்”. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இப்படத்தில் நயன்தாரா நடித்து இருக்கிறார். இப்போதெல்லாம் லேடி சூப்பர்ஸ்டார் என்ற அடைமொழியை புன்னகையோடு ஏற்றுக் கொள்ளும் நயன் நடிக்க வந்து 13 வருடங்கள் ஆகிவிட்டது. நயன்தாராவிற்கு 55-வது படமான “அறம்” திரைப்படம் இதில் நயன்தாரா கலெக்டராக நடிக்கிறார். இப்படத்தில் ‘காக்கா முட்டை’ விக்னேஷ், ரமேஷ், எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி, ஈ. ராமதாஸ், சுனுலட்சுமி, ராம்ஸ் உட்பட பலர் நடித்து உள்ளனர். இந்த படத்திற்கு ‘U’ சான்றிதழ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.. ‘அறம்’ படத்தின் ட்ரெய்லர் நேற்று (நவம்பர் 1) மாலை வெளியாகியது.. சமூகப் பிரச்னைகளுள் ஒன்றான குடிநீர் பஞ்சத்தை மையமாகக்கொண்டு உருவாகியுள்ள இதில் மாவட்ட கலெக்டராக அரசியல்வாதிகளை எதிர்க்கும் கேரக்டரில் நயன்தாரா நடித்திருக்கிறார். “அஞ்சாறு மாசமா மழை இல்லாம இருந்தப்பகூட தண்ணீர் பஞ்சம் இல்ல… என்னிக்கு இந்த வாட்டர் பாட்டில் வந்ததோ அன்னிக்கே…