தஞ்சையில் கமல் அரசியல் அறிவிப்பு கூட்டத்திற்கு ஆயத்தம் செய்யும் பப்ளிக் ஸ்டார்!

தஞ்சையில் கமல் அரசியல் அறிவிப்பு கூட்டத்திற்கு ஆயத்தம் செய்யும் பப்ளிக் ஸ்டார்!

நடிகர் கமல்ஹாசன் அரசியல் விமர்சனங்களை தன்னுடைய ட்விட்டர் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது என்று நடிகர் கமல்ஹாசன் கூறியதற்கு ஆளும் தரப்பில் இருந்து கடும் விமர்சனங்கள் எழுந்தது. எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து வரவேற்கப்பட்டது. தமிழக அரசை மறைமுகமாக விமர்சனம் செய்து வந்த கமல்ஹாசன் இப்போது நேரடியாக விமர்சனம் செய்து வருகிறார். ஜல்லிக்கட்டு, நீட் தேர்வு உள்ளிட்ட சமூக பிரச்சினைகள் குறித்தும் தொடர்ந்து டுவிட்டரில் கருத்துகள் பதிவிட்டு வருகிறார். நான் அரசியலுக்கு வந்து விட்டேன். கோட்டை நோக்கிய எனது பயணம் தொடங்கி விட்டது என்றும் பகிரங்கமாக அறிவித்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். புதிய கட்சிக்கு பெயர் தேர்வு செய்வது, கொடியை உருவாக்குவது போன்ற வேலைகளும் விறுவிறுப்பாக நடக்கின்றன. விரைவில் கட்சி பெயரை அறிவித்து அரசியல் களத்தில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசன் பிறந்த நாள் அடுத்த மாதம் (நவம்பர்) 7-ந் தேதி கொண்டாடப்படுகிறது.அப்போது ரசிகர்களை…
Read More
சர்ச்சை நாயகன் வாராகி இயக்கி, தயாரித்து நடித்த சிவா மனசில புஷ்பா ஷூட்டிங் ஓவர்!

சர்ச்சை நாயகன் வாராகி இயக்கி, தயாரித்து நடித்த சிவா மனசில புஷ்பா ஷூட்டிங் ஓவர்!

சர்ச்சை நாயகன் வாராகி இயக்கி, தயாரித்து நடித்த சிவா மனசில புஷ்பா படப்பிடிப்பு திட்டமிட்டபடி கச்சிதமாக முடிவடைந்தது. அரசியல் களத்தை மையப்படுத்தி வாராகி உருவாக்கியுள்ள சிவா மனசில புஷ்பா படத்தில் ஷிவானி குரோவர், ஜிஸ்மி என இரண்டு நாயகிகள். இருவரும் வாராகியின் ஜோடியாக வருகின்றனர். ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏவுக்கும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகரான பெண்ணுக்கும் இடையிலான தனிப்பட்ட உறவு, சண்டைதான் இந்தப் படத்தின் கதை. ஒரு அரசியல்வாதி எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதைச் சொல்லும் படம் இது என்கிறார் வாராகி. இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த மே மாதம் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து 40 நாட்களில் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்தது. படத்தின் இறுதிக் காட்சிகள் சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்தது. படப்பிடிப்பில் செய்தியாளர்களை வாராகி மற்றும் நாயகிகள் ஷிவானி குரோவர், ஜிஸ்மி ஆகியோர் சந்தித்தனர். வாராகி கூறுகையில், "இது ஒரு அரசியல் படம். ஆனால் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்.…
Read More
நான் அரசியலுக்கு இன்னும் வரலை.. ஆனா வர வச்சிடாதீங்க! – கமல் பேட்டி முழு விபரம்!

நான் அரசியலுக்கு இன்னும் வரலை.. ஆனா வர வச்சிடாதீங்க! – கமல் பேட்டி முழு விபரம்!

அண்மைக் காலமாக பல்வேறு அரசியல் கருத்துகளை நடிகர் கமல்ஹாசன் கூறி வருவதால் மீடியாக்கள் மூலம்  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக ஒரு பிம்பம் கிளப்பப்படு வருகிறது. இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி  யான தந்தி டிவிக்கு  அவர் அளித்த பேட்டியில் , “நான் எனக்குள் தோன்றிய நல்ல கருத்துக்களை சொல்கிறேன். இன்றைய நிலையில் நடைபெறும் அரசியல் பற்றிய எனது கருத்துக்கள் பொதுவானவை. பொது வாழ்வில் ஊழல் நடைபெறக் கூடாது என்பதால் அதை சுட்டிக் காட்டுகிறேன்.னது கருத்து அரசியல் தொடர்பானது, அதிமுக பற்றிய கருத்து அல்ல. மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காக சொல்லப்படும் கருத்துக்கள். அதற்காக என்னை அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்று வற்புறுத்த வேண்டாம். அரசியல் கட்சி தொடங்கினால் அதற்கு எவ்வளவு பணம் தேவை என்று எனக்கு தெரியும் என்றார். மேலும்  அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் இதோ:-  கமல்ஹாசன் எப்போது புரட்சியாளராக மாறினார்? பதில்:-…
Read More
ச்சிச்சீ.. இந்த கமல் வேஸ்ட்! – நடிகர் ரித்திஷ் ரியாக்‌ஷன்!

ச்சிச்சீ.. இந்த கமல் வேஸ்ட்! – நடிகர் ரித்திஷ் ரியாக்‌ஷன்!

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கிடப்பதாக நடிகர் கமலஹாசன் பேட்டி அளித்திருந்தார். இதற்கு எதிராக அமைச்சர்கள் அன்பழகன், ஜெயக்குமார், சண்முகம் மற்றும் சிலர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். பா.ஜனதா தலைவர்களும் கமலஹாசனை விமர்சித்து உள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்க கமல் ரசிகர்கள் முடிவு செய்தனர். அதன்படி மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பல்வேறு கண்டன சுவரொட்டிகளை ரசிகர்கள் ஒட்டி வருகிறார்கள். மதுரை நகரிலும் கமல் ரசிகர் மன்ற சுவரொட்டிகள் ஒட்பப்பட்டு இருந்தன.அதில், “தோற்றால் போராளி, முடிவெடுத்தால் முதல்வர். இனி உலக நாயகனின் அரசியல் விஸ்வரூபம் ஆட்டம் ஆரம்பம்” என்றும், “எங்களின் முதல்வா, தமிழகம் தலை நிமிர வா...வா..., எம் தலைவன் அல்ல கோழை. தலைவனை தவறாக பேசும் முட்டாள் அரசியல்வாதிகளே நீங்கள் கட்ட வேண்டியது 8 முழ சேலை” என்றும் குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. ஜே.கே.ரித்தீஷ்…
Read More
நான் வயதுக்கு வராத அரசியல்வாதி ! – கமல் ஓப்பன் லட்டர்!

நான் வயதுக்கு வராத அரசியல்வாதி ! – கமல் ஓப்பன் லட்டர்!

தமிழக மக்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில், “வணக்கம், இந்த விளி, நம் நற்பணி இயக்கத்தார்க்கு மட்டும் அல்ல. அதில் இல்லாத ரசிகர்களுக்கும், முக்கியமாகக் காசுக்கு விலை போகாத தமிழக வாக்களாருக்கும் கூட. ஊரே கூடி ஊழல் ஊழல் என்று ஓலமிட்டதை ஊடகத்தில் கண்டபின்பு, சாட்சி உண்டா? ஆதாரம் உண்டா? என கேட்கும் குணாதிசயம், கல்லுளிமங்கர் போன்ற ஊழலார்க்கே உரித்தான குணாதிசயம். ஆதாரத்துடன் வா, அரசியலுக்கு வா என்று அறைகூவல் விடும் தம்பி மாண்புமிகு. ஜெயகுமாரோ அல்லது எலும்பு வல்லுனர் தம்பி எச்.ராஜாவோ, நான் அரசியலுக்கு வந்துவிட்டதை உணராத வர்கள். தெரிந்தோ தெரியாமலோ என்று இந்தித் திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்தேனோ, அன்றே நான் வயதுக்கு வராத அரசியல்வாதி தான். நாற்காலி மோகத்தில் பத்தையும் பறக்கவிட்டு அடுக்கு மொழியில் அறிவுரைகளை அள்ளி வீசுபவர்கள்.. ஊர் அறிய கைக்கூலி வாங்கி கடமை செய்ய மறந்தவர்கள். என்னை வரி…
Read More
வெள்ளைப் பன்றியை வைத்து சர்வதேச அரசியலை சொல்லும் ‘ஜெட்லி’

வெள்ளைப் பன்றியை வைத்து சர்வதேச அரசியலை சொல்லும் ‘ஜெட்லி’

ஸ்ரீ சிவாஜி சினிமாஸ் என்ற பட நிறுவனம் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கும் படம் “ ஜெட்லி “ வாயில்லா ஜீவன்களின் சாகசங்கள் எப்போதுமே  மனித மனங்களைக் கவர்ந்து விடும். அதனடிப்படையில் ஆடு,மாடு, கோழி, நாய், ஈ, குரங்கு, பூனை, யானை, கழுதை என எல்லா ஜீவன்களுமே திரையுலகின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கிறன. அந்த வரிசையில் விடுபட்டு போன வெள்ளைப் பன்றியை மையப் படுத்தி உருவாகி உள்ள படமே “ ஜெட்லி “ உலகளவில் பிரபலமான தொழில்நுட்ப கலைஞர்களைக் கொண்டு வித்தியாசமான படமாக “ ஜெட்லி “ உருவாகிக் கொண்டிருக்கிறது. முக்கிய நாயகர்களாக கண்ணன் பொன்னையா, ஜெகன்சாய் இருவரும் நடிக்கிறார்கள். மலையாளத்தின் முக்கிய நடிகரும் தேசிய விருது பெற்ற நடிகர் சலீம்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். எத்திராஜ்பவன் கனமான வேடத்தில் நடிக்கிறார். மற்றும் நைப் நரேன், நிப்பு, ஆகியோரும் நடிக்கிறார்கள். கதாநாயகிகள் யார் என்பதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார் இயக்குனர்..இசை வெளியீட்டு விழாவன்று…
Read More
ஆட்சியை கலைத்து விட்டு உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் ! – கமல் பேட்டி

ஆட்சியை கலைத்து விட்டு உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் ! – கமல் பேட்டி

தனியார் தமிழ் தொலைகாட்சி ஒன்றிற்கு நேற்று கமல் அளித்த பேட்டியில், நிகழ்கால அரசியலில் ஏற்படும் அநியாயங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்காமல் வெறும் கலைஞனாக மட்டுமே என்னால் இருக்க முடியாது என்று கூறிய கமல்ஹாசன் அநீதிகள் அதிகரிக்கும் போது மக்களிடம் கொந்தளிப்பு ஏற்படும் என்றார். அரசியல் வர்த்தகமாகிவிட்டது. எளிமையான அணுகுமுறையுடன் கூடிய தலைவர்கள் தற்போது தேவைப்படுகிறார்கள். அரசியல் பேசுவதற்கு குடிமகன் என்பது தான் தனது முதல் தகுதி என்றும் குறிப்பிட்டார். ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது எரிமலையின் ஒரு நுனிதான். நான் வரி கட்டுகிறேன். ஊழலில் ஒருபோதும் ஈடுபட்டதில்லை. அதை தைரியமாக சொல்வேன். ஊழல் என்பது வாக்காளர்களிடமிருந்தே தொடங்குவதாகக் கூறிய கமல்ஹாசன், வாக்குகளை விலைபேசும்போது கேள்விகளை எழுப்ப முடியாது என்றும் தெரிவித்தார். பண மதிப்பு நீக்க நடவடிக்கையை ஏற்றுக்கொள்கிறேன். நிகழ்கால அரசியலுக்கு எதிராக தான் குரல் கொடுப்பேன். காலத்தின் தேவைக்கேற்ப அரசியல் இயக்கங்கள் மாற வேண்டும். மக்களின் தேவைக்கேற்ப பழைய சட்டங்களை நீக்கிவிட்டு புதிய…
Read More