’பரமசிவன் பாத்திமா’ படம் எப்படி இருக்கு ?

’பரமசிவன் பாத்திமா’ படம் எப்படி இருக்கு ?

  இயக்கம். - இசக்கி கார்வண்ணன் நடிகர்கள். - விமல் , எம் எஸ் பாஸ்கர், சயா தேவி, கூல் சுரேஷ் இசை - தீபன் சக்கரவர்த்தி தயாரிப்பு - லக்ஷ்மி கிரியேஷன் - இசக்கி கார்வண்ணன்   திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் மலை கிராமம் ஒன்று மதம் மாற்றத்தால் மூன்று கிராமங்களாக பிரிந்து விடுகிறது. இதில், கிறிஸ்தவர்கள் வாழும் கிராமத்திற்கும், இந்துக்கள் வாழும் கிராமத்திற்கும் இடையே அவ்வபோது மோதல்கள் ஏற்படுகிறது. இதற்கிடையே, இந்த இரண்டு கிராமங்களை சேர்ந்த இரண்டு இளைஞர்களை அந்த ஊரைச் சேர்ந்த காதலர்கள் இணைந்து கொலை செய்வதோடு, மேலும் சிலரை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறது. மறுபக்கம் கிராமங்களுக்கு இடையே நடக்கும் மோதல் தொடர்கிறது. இருவரும், எதற்காக கொலை செய்கிறார்கள்? கொலை செய்யப்பட்டவர்களுக்கும் அவர்களுக்கும் என்ன பகை? என்பதை இந்து மதத்திற்கான பிரச்சாரமாக சொல்வதே ‘பரமசிவன் பாத்திமா’.…
Read More
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்பட வெற்றி விழா !!

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்பட வெற்றி விழா !!

பஸ்லியான் நசரேத், மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் தயாரிப்பில், நடிகை சிம்ரன்- நடிகர் சசிகுமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக வெற்றி பெற்றுள்ளது ' டூரிஸ்ட் ஃபேமிலி '. கடந்த மே 1 ஆம் தேதி வெளியான இப்படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில், பெரும் வரவேற்பைக் குவித்து, பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது.   திரையரங்குகளை திருவிழாக்கோலமாக்கியுள்ள இப்படத்தின் வெற்றி விழா படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்…. குழந்தை நட்சத்திரம் கமலேஷ் பேசியதாவது... எல்லாருக்கும் வணக்கம். எப்படி சொல்றதுன்னு தெரியவில்லை, ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த படத்துக்கு வாய்ப்பு கொடுத்த அபி அண்ணாக்கு ரொம்ப நன்றி. அதுக்கப்புறம் ப்ரொடியூசர்ஸ் யுவராஜ் அண்ணாவிற்கு நன்றி. சசிகுமார் அங்கிள், என்னிடம் ரொம்ப பாசமா இருந்தார், ரொம்ப சந்தோஷம். நன்றி அங்கிள். அப்பறம் சிம்ரன் மேம், உங்க கூட…
Read More
’ரெட்ரோ’ திரை விமர்சனம் !!

’ரெட்ரோ’ திரை விமர்சனம் !!

இயக்குநர் - கார்த்திக் சுப்புராஜ் நடிகர்கள் - சூர்யா , பூஜா ஹெட்கே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர் இசை - சந்தோஷ் நாராயணன் தயாரிப்பு - 2D எண்டர்டெயின்மெண்ட் - ஜோதிகா, சூர்யா. மாறுபட்ட களங்களில் நல்ல படைப்புகளை தொடர்ந்து தரும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம். கங்குவாவின் தோல்வியில் இருந்து அவரை மீட்டெடுத்துள்ளதா? பார்க்கலாம் காதலுக்காக வன்முறை அனைத்தையும் விட்டுவிட்டு அமைதியாக வாழ நினைக்கும் ஒருவனை, அந்த வன்முறை துரத்தி கொண்டே இருக்கிறது. அந்த வன்முறை தனக்குள் ஏன் இருக்கிறது என்பதை அவன் கண்டுபிடிப்பதும் அதில் இருந்து விலகுவதும் தான் ரெட்ரோ. ஒரு கேங்க்ஸ்டர் கதையாக ஆரம்பித்த ஒரு கதை, அடிமை மீட்பு என்ற புள்ளியில் முடிகிறது. வித்தியாசமான கதையை கட்டமைத்த கார்த்திக் சுப்புராஜ், முதல் ஆக்ட்டில் சிறப்பான தொடக்கத்தை கொடுத்து, இரண்டாவது ஆக்ட்டில் குழப்பத்திற்குள் சென்று, மூன்றாவது ஆக்ட்-ல் பாதி நிறைவோடு வெளியேறுகிறார். சிறப்பான…
Read More
டூரிஸ்ட் ஃபேமிலி எப்படி இருக்கிறது ?

டூரிஸ்ட் ஃபேமிலி எப்படி இருக்கிறது ?

இயக்கம் - அபிஷன் ஜீவிந்த் நடிகர்கள் - சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய் ஷங்கர் , கமலேஷ் இசை - ஷான் ரோல்டன் தயாரிப்பு - மில்லியன் டாலர் ஸ்டுடியோ - பசிலியன் நசீரத், மகேஷ் ராஜ் பசீலன் சமீபத்தில் வந்த டீசர்களிலேயே அதிக பரபரப்பை கிளப்பியது இந்தப்பட டீசர் தான். அத்தனை எமோசன் நகைச்சுவை என எல்லாம் கலந்து அசத்தியிருந்தார்கள் ஆனால் இந்தப்படத்திலும் பிரச்சனை இருக்கிறது. ஆனால் அது அவ்வளவு முக்கியமில்லை. டீசர் டிரெய்லர் பார்த்து நிறைய எதிர்பார்த்திருந்தீர்கள் என்றால் முதலில் அதை மறந்து விடுங்கள். அந்தளவு படமில்லை… ஆனால் அதற்காக மோசமுமில்லை.. பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இலங்கையில் மிகவும் வறுமையில் வாடி வரும் சசிகுமாரின் குடும்பம் ராமேஸ்வரம் வழியாக திருட்டுத்தனமாக தப்பித்து தமிழ்நாட்டுக்கு வந்துவிடுகின்றனர். ஆரம்பத்திலேயே அவர்கள் போலீஸ் ஒருவரிடம் மாட்டிக் கொள்கின்றனர். ஆனால், அந்த குடும்பத்தின் இயல்பை பார்த்த அந்த காவல் அதிகாரி அவர்களை தப்பித்துப் போக…
Read More
நானியின் வயலண்ட் ஃபிலிம் ’ஹிட் – தி தேர்ட் கேஸ்’ எப்படி இருக்கிறது ?

நானியின் வயலண்ட் ஃபிலிம் ’ஹிட் – தி தேர்ட் கேஸ்’ எப்படி இருக்கிறது ?

  இயக்குனர் - சைலேஷ் கோலனு நடிகர்கள் - நானி , ஶ்ரீநிதி ஷெட்டி, சூர்யா ஶ்ரீநிவாஸ், சமுத்திரக்கனி இசை - மிக்கி ஜே மேயர் தயாரிப்பு - வால் போஸ்டர் சினிமா - பிரசாந்தி தி ்பிரிபநனி - நானி நானி தயாரிப்பில், உருவான ஹிட் திரைப்படம் படுபயங்கர ஹிட்டாக, அது தொடர் திரைப்படமாக உருவாக ஆரம்பித்தது. இப்போது மூன்றாவது படத்தில், அவரே நாயகனாக நடித்துள்ளார். தற்போதைய சீசனில் வயலன்ஸ் அதிகம் இருப்பது மாதிரி படங்கள் அதிகம் வர ஆரம்பித்துள்ளது, இந்த கதைத் தொடரின் மையமே வலன்ஸ் என்பதால் அது சரியாக பொருந்தியுள்ளது. நானி அடுத்த வீட்டு பையன் ரோலில் இருந்து மாறி தன் கேரியரிலேயே மிக வயலன்டான படத்தில் நடித்துள்ளார். அது ரசிகர்களுக்கு பிடித்தும் இருக்கிறது. முந்தைய இரண்டு பாகங்களில் தொடர் கொலைகளை செய்வது யார் என்பதை கண்டுபிடிப்பது தான் படமாக இருக்கும் ஆனால் இந்த பாகம், கொலைகள்…
Read More
வாழ்த்துப் பாடல் பாடி படக்குழுவினரை வாழ்த்திய கங்கை அமரன்!

வாழ்த்துப் பாடல் பாடி படக்குழுவினரை வாழ்த்திய கங்கை அமரன்!

  ஸ்ரீசாய் சைந்தவி கிரியேஷன்ஸ் சார்பில் பாண்டுரங்கன் தயாரிப்பில், கஜேந்திரா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'குற்றம் தவிர்'.இப்படத்தில் ரிஷி ரித்விக் நாயகனாகவும் ஆராதியா நாயகியாகவும் நடிக்க,சித்தப்பு சரவணன், வினோதினி, ஆனந்த் பாபு,செண்ட்ராயன், ஜார்ஜ் விஜய்,சாய்தீனா , மீசை ராஜேந்திரன் ,ராணுவ வீரர் காமராஜ்,குழந்தை சாய் சைந்தவி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ரோவின் பாஸ்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.எடிட்டிங் ரஞ்சித். பாடல்கள் கு.கார்த்திக். இந்த 'குற்றம் தவிர் 'படத்தின் முன்னோட்டம், பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. 'குற்றம் தவிர் ' படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்களை கங்கை அமரன் வெளியிட்டார். விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அதிமுக கட்சியை சேர்ந்த ஈ. . புகழேந்தி, ஆன்மீகவாதி ஜெய்பிரகாஷ் குருஜி,தொழிலதிபர் பிரகாஷ் பழனி ,இயக்குநர்கள் ஆர்.அரவிந்தராஜ், பேரரசு,பவித்ரன், ராஜகுமாரன், நடிகர் சித்தப்பு சரவணன் மற்றும் படக்குழுவினர் இணைந்து பெற்றுக் கொண்டனர். படத்தின் தயாரிப்பாளர் பாண்டுரங்கன்…
Read More
அன்டில் டான் (Until Dawn) ஹாரர் ரசிகர்களுக்கு விருந்து !!

அன்டில் டான் (Until Dawn) ஹாரர் ரசிகர்களுக்கு விருந்து !!

‘அன்டில் டான்’ என்பது சோனி கம்ப்யூட்டர் என்டர்டெயின்மென்ட் வெளியிட்ட ஒரு சுவாரசியமான திகில் விளையாட்டாகும். இந்த விளையாட்டு ஒரு பட்டாம்பூச்சி விளைவு முறையைப் பின்பற்றுகிறது. இதில் வீரர்கள் அவர்கள் எடுக்கும் தேர்வுகளைப் பொறுத்து உயிர்வாழ்வார்கள் அல்லது இறப்பார்கள். வீரர்கள் தங்கள் செயல்களை மூன்றாவது நபரின் கோணத்தில் செய்ய வேண்டும். அப்படியான செயல்கள், மர்மத்தைத் தீர்க்க அவர்களுக்கு உதவும். இப்படம், அந்த விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ‘லைட்ஸ் அவுட்’, ‘அன்னாபெல் கிரியேஷன்’ போன்ற படங்களைத் தயாரித்த டேவிட் F. சாண்ட்பெர்க் இந்த திகில் படத்தை இயக்கியுள்ளார். விடியும் வரை உயிரோடு இருந்தால் தப்பிக்கலாம் என்ற ஒற்றை வரியில் கட்டமைக்கப்பட்டது தான் இந்த படம். வீடியோ கேம் ஆக வந்து பிரசிதி பெற்ற UNTIL DAWN-யை திரைப்படமாக்கும் முயற்சியில் படக்குழு வெற்றி பெற்று இருக்கிறது. Slasher மற்றும் Horror என்ற இரு ஜேனரை இணைத்து ஒரு திரைக்கதையை படத்தை கட்டமைத்து இருக்கிறார்கள். ஆனால்…
Read More

டென் ஹவர்ஸ் திரை விமர்சனம் !!

இயக்கம் - இளையராஜா கலியபெருமாள் நடிப்பு - சிபி ராஜ், நிரஞ்சனா பரபர திரில்லர் வந்து பல காலம் ஆகிவிட்டது. டென் ஹவர்ஸ் திரைப்படம் டிரெய்லர் வந்தபோதே மிக நன்றாக இருந்த நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகி விட்டது. 10 மணி நேரத்தில் என்ன நடக்கிறது என்பது தான் கதை. கள்ளக்குறிச்சி அருகே இளம்பெண் ஒருவர் காணாமல் போனதாக அவரது குடும்பத்தார் போலீசில் புகார் அளிக்கின்றனர். அந்த புகாரின் பேரில் விசாரணையை தொடங்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிபி சத்யராஜ், அந்த பெண் கடத்தப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பதோடு, அப்பெண்ணை மீட்பதற்கான முயற்சியில் இறங்குகிறார். அப்போது, சென்னையில் இருந்து கோவை நோக்கி செல்லும் தனியார் பேருந்து ஒன்றில் பெண் ஒருவர் தாக்கப்படுவதாகவும், அந்த பேருந்து கள்ளக்குறிச்சி அருகே சென்றுக் கொண்டிருப்பதாகவும் போலீஸுக்கு தகவல் வருகிறது. இதனால், அந்த பேருந்தை தடுத்து நிறுத்தி போலீஸ் சோதனை செய்யும் போது, புகார் அளித்த இளைஞர் அதே பேருந்தில்…
Read More
நாங்கள் திரைப்பட விமர்சனம் !!

நாங்கள் திரைப்பட விமர்சனம் !!

நாங்கள் திரைப்பட விமர்சனம் !! இயக்கம் - அவினாஷ் பிரகாஷ் இசை - வேத் சங்கர் தயாரிப்பாளர்- ஜுவிஎஸ் ராஜு அறிமுக இயக்குநர் அவினாஷ் பிரகாஷ் இயக்கதில் புதுமுகங்கள் நடிப்பில் வந்துள்ள திரைப்படம் நாங்கள். பாலுமகேந்திரா, மகேந்திரன் வகையாறா படங்கள் என ஒரு ஜானர் உண்டு. வாழ்க்கையையும் மனிரகளையும் பற்றிப் பேசும் படங்கள் அந்த வகையறாவில் வந்துள்ள படம் தான் நாங்கள். மனைவியுடன் பிரிந்து வாழும் ஒருவன் தன் மூன்று மகன்களுடன் வாழ்கிறார். பணக்கார அப்பாவுக்கு தொழில் ரீதியாக ஏற்பட்ட தோல்வியால், தங்களது சிறுவயது பருவத்தை தொலைத்துவிட்டு, வீட்டு பொறுப்புகளில் மூழ்கும் மூன்று சகோதரர்களும், எத்தகைய இன்னல்கள் வந்தாலும் அவற்றை சமாளித்து, பள்ளி பாடத்துடன் வாழ்க்கை பாடத்தையும் எப்படி கற்றுக்கொள்கிறார்கள், அவர்கள் எப்படி நகர்கிறது என்பதை, தந்தைக்கும் மகன்களுக்கும் உள்ள உறவுச்சிக்கலை பேசும் படம் தான் இது.   அப்துல் ரஃபே, தந்தையாக நடித்திருக்கிறார் சிறுவர்களிடம் கண்டிப்பாக இருக்கிறார் ஆனால் அவரது…
Read More
வெகு மோசமான திரைப்படம் குட் பேட் அக்லி !!

வெகு மோசமான திரைப்படம் குட் பேட் அக்லி !!

இயக்குநர் ஆதிக் ரசிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்திருக்கும் படம். ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் படம் ஆனால் ஒரு திரைப்படமாக இப்படம் எப்படி இருக்கிறது? ஆதிக் ரவிச்சந்திரன் கிரேஸியான ஐடியாக்களை வைத்துக் கொண்டு, அந்த அந்த நடிகர்களின் பழைய படங்களின் சீன்களை தொகுத்து, தனக்கு பிடித்த பழைய பாடல்களை போட்டுவிட்டு ஒரு கதம்பமாக, இந்தக்கால இன்ஸ்டா குருவிகள் கத்துவதற்கு மட்டுமே படமெடுக்கக் கூடியவர். இதிலும் அதே வகை தான். ஆதிக் இயக்கிய மார்க் ஆண்டனி படத்தில் எதுவெல்லாம் பாராட்டு வாங்கியதோ, அதை பல மடங்கு கூட்டி, அஜித்தை நடக்க விட்டு, அவரை பல வித கெட்ட்ப போட வைத்து, ஒப்பேத்தி படம் என ஏமாத்தியிருக்கிறார். குடும்பத்திற்காக வயலன்ஸை விட்ட ஒரு முன்னாள் கேங்ஸ்டர், தனது மகனுக்காக மீண்டும் வயலன்ஸை கையிலெடுக்கிறார் இது தான் கதையாம். ஆனால் கதைக்காக சீனுக்காகவெல்லாம் படக்குழு உழைக்கவில்லை. அஜித்தின் ஹிட்டான எல்லாப்பட கேரக்டரையும் மிக்ஸியில் அடித்து குழப்பி,…
Read More