’டெஸ்ட்’ எப்படி இருக்கிறது ?

’டெஸ்ட்’ எப்படி இருக்கிறது ?

  இயக்குனர் - எஸ் சசிகாந்த் நடிகர்கள் - மாதவன் , நயன்தாரா , சித்தார்த் , மீரா ஜாஸ்மின் இசை - சக்தி ஶ்ரீ கோபாலன் தயாரிப்பு - சக்கரவர்த்தி ராமசந்திரன் & சசிகாந்த் தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்குநராக மாறிய படம். மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் என நடிப்பில் திறமையானவர்கள் ஒன்றிணைந்திருக்கும் படம். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக கொண்டாடப்பட்ட ஒருவரை அணியில் இருந்து நீக்கிவிட்டு புதியவருக்கு வாய்ப்பு கொடுக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்கிறது. அதனால் அவர் தனது ஓய்வு அறிவிப்பை அறிவிக்க வேண்டும் என்று அவரை வற்புறுத்துகிறது. ஆனால், தோல்வியுடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்க விரும்பாத அவர், இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற இருக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி தனது திறமையை நிரூபித்த பிறகே ஓய்வு குறித்து அறிவிக்க நினைக்கிறார். இதனால், அந்த டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும்…
Read More
குளோபல் ஸ்டார் ராம்சரணின் “பெத்தி” பட படப்பிடிப்பு துவங்கியது !!

குளோபல் ஸ்டார் ராம்சரணின் “பெத்தி” பட படப்பிடிப்பு துவங்கியது !!

தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் புச்சி பாபு சனா, குளோபல் ஸ்டார் ராம் சரணின் கூட்டணியில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்தியா படமான, “பெத்தி” ஏற்கனவே அதன் டைட்டில் மற்றும் இரண்டு கவர்ச்சிகரமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மூலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புகழ்பெற்ற பான்-இந்தியா தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸுடன் இணைந்து வழங்கும், “பெத்தி” இந்திய திரைப்படத் துறையில் ஒரு புதிய திருப்புமுனை படமாக இருக்கும். தொலைநோக்கு மிக்க படைப்பாளி வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் இந்தப் படத்தைப் பிரமாண்டமாகத் தயாரிக்கிறார். ஸ்ரீ ராம நவமியின் புனிதமான சந்தர்ப்பத்தில், தயாரிப்பாளர்கள் முதல் ஷாட் வீடியோவை வெளியிட்டனர், மேலும் படத்தின் வெளியீட்டுத் தேதியையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். படத்தின் முதல் ஷாட் ஒரு அற்புதமான சூழ்நிலையுடன் தொடங்குகிறது, மிகப்பெரிய கூட்டம் பெத்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கிறது. ராம் சரண் ஒரு அற்புதமான, சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில்…
Read More
எல் 2 எம்புரான் எப்படி இருக்கு ?

எல் 2 எம்புரான் எப்படி இருக்கு ?

இயக்குனர் - பிரித்விராஜ் சுகுமாரன் நடிகர்கள் - மோகன்லால் , பிரித்விராஜ் , மஞ்சு வாரியர் , டோவினோ தாமஸ் , சுராஜ் இசை - தீபக் தேவ் தயாரிப்பு - ஆசீர்வாத் சினிமாஸ், கோகுலம் , லைகா பிக்சர்ஸ் நடிகராக இருந்து இயக்குநராகி லூசிஃபர் மூலம் இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த பிரித்திவிராஜ் இயக்கத்தில் அதன் அடுத்த பாகமாக வந்துள்ள படம் தான் எம்புரான் மோகன் லாலை மையமாக வைத்து ஒரு பாகுபலி ல், கேஜிஎஃப் பாணி படத்தை தர முயன்றுள்ளார்கள். லூசிஃபர் படம் ஒரு ஆச்சரியம் கேரள அரசியலை மையமாக வைத்து அதில் அழகாக மோகன்லாலின் ஹீரோயிசத்தை நுழைத்து அசர வைத்த படம். இந்த முறை அதை உலக அளவில் சொல்ல முயற்சி செய்துள்ளார்கள். கேரளாவில் முதல்வர் மறைவுக்குப் பிறகு மாநிலத்தில் ஏற்படும் அரசியல் குழப்பங்களை தீர்த்து வைக்கும் நாயகன் , முதல்வரின் மற்றொறு மகனை புதிய முதல்வராக்கிவிட்டு…
Read More
வீர தீர சூரன் பாகம்-2 விக்ரமுக்கு கம்பேக்கா?

வீர தீர சூரன் பாகம்-2 விக்ரமுக்கு கம்பேக்கா?

இயக்குனர் - அருண் குமார் நடிகர்கள் - விக்ரம் , எஸ் ஜே சூர்யா, சுராஜ், துஷாரா இசை - ஜி வி பிரகாஷ் குமார் தயாரிப்பு - ரியா ஷிபு-  ஹெச் ஆர் பிக்சர்ஸ் தொடர் தோல்வியில் சிக்கித் தவிக்கும் சீயான் விக்ரமுக்கு நிம்மதி தரும் வகையில், ரசிகர்களுக்கு ஆக்சன் விருந்தாக வந்துள்ளது வீர தீர சூரன். சித்தா படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் அருண் குமார் விக்ரமை இயக்குகிறார் என்றவுடனே இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு கூடிவிட்டது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை மிகச்சரியாக புரிந்துகொண்டு, அவர்களுக்கு விருந்து வைத்துள்ளது படக்குழு! வழக்கமாக முதல் பாகம் வெளியான பின்னரே இரண்டாம் பாகம் வெளியாகும். ஆனால், வீர தீர சூரனை பொறுத்தவரை புது முயற்சியாக இரண்டாம் பாகத்தை முதலில் வெளியிடுகிறார்கள். இதனாலேயே இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. மதுரையைச் சேர்ந்த பெரிய குடும்பத்துக்கு ஒரு பிரச்சனை வருகிறது. அந்த பிரச்சனையை காரணமாக…
Read More
வில்லங்கமான காமெடிப் படம் – ’பெருசு’ !!

வில்லங்கமான காமெடிப் படம் – ’பெருசு’ !!

இயக்குநர் - இளங்கோ ராம் , நடிகர்கள் - வைபவ் , சுனில், நிஹாரிகா, சாந்தினி ,பாலா சரவணன், முணிஷ்காந்த், VTV கணேஷ் இசை - அருண் ராஜ் தயாரிப்பு - ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ், கார்த்திகேயன் தமிழில் அடல்ட் காமெடி, சிலாப்ஸ்டிக் காமெடி படங்கள் வருவதேயில்லை அந்தக்குறையைப் போக்கும் வகையில் வந்துள்ளது இந்த பெருசு படம். இலங்கையில உருவாகி உலகத் திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்த்த இப்படம், தமிழில் ரீமேக்காகியுள்ளது. ஊரில் மதிப்பும், மரியாதையும் உள்ள பெருசு ஒருத்தர் திடீரென இறந்து விடுகிறார். மகன்கள் ஒரு நாள் ஆற்றில் குளித்துவிட்டு வீட்டுக்கு வந்து பார்க்கும்போது டிவி பார்க்கும் பெருசு இறந்து கிடக்கிறார். ஆனால் அவரது மர்ம உறுப்பு ஸ்டாராங்காக நிற்கிறது, அந்த உடலை மற்றவர்களுக்கு காட்ட முடியாத சிக்கல் ஏற்படுகிறது. சடலத்தை காட்டாமல் இருக்கவும் முடியாது, அதே சமயம் அதில் இருக்கும் சிக்கலை மறைக்கவும் முடியாமல் திணறும் குடும்பத்தார், எப்படி…
Read More
’ராபர்’ – குற்ற உலகின் சைக்காலஜி !!

’ராபர்’ – குற்ற உலகின் சைக்காலஜி !!

இயக்குனர் - எஸ் எம் பாண்டி நடிகர்கள் - சத்யா , டேனியல், ஜெய பிரகாஷ், தீபா இசை - ஜோஹன் சிவனாத் தயாரிப்பு - இம்ப்ரெஸ் ஃபிலிம்ஸ் - கவிதா மெட்ரோ என ஒரு படம் வந்தது சென்னையின் செயின்பறிப்பின் பின்னணி ஒரு பகுதியாக அப்படத்தில் சொல்லப்பட்டிருந்தது, மெட்ரோ திரைப்படத்தில் ஒரு பகுதியாக இருந்த அந்த செயின் பறிப்பு சம்பவத்தை, முழு திரைக்கதையாக்கி இத்திரைப்படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள். செயின் பறிப்பில் யாரெல்லாம் ஈடுபடுகிறார்கள், அவர்களின் பின்னணி என்ன?, அவர்களின் சைக்காலஜி எப்படி வேலை செய்கிறது ? என்பது தான் படத்தின் மையம். மெட்ரோ இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார், அறிமுக இயக்குனர் எஸ் எம் பாண்டி இயக்கியுள்ளார். ஐடியில் வேலை இருந்தாலும், பெண்களைக் கவர பணம் தேவைப்படும் இளைஞன் அதற்கு செயின் பறிப்பில் ஈடுபடுகிறான், அவன் எப்படி எல்லாம் கொள்ளை அடிக்கிறான், அந்த நகை எங்கு போகிறது,…
Read More
வருணன் திரைப்பட விமர்சனம் !!

வருணன் திரைப்பட விமர்சனம் !!

இயக்கம்: ஜெயவேல் முருகன் தயாரிப்பு: யாக்கை பிலிம்ஸ் மற்றும் யான் புரோடக்சன் நடிகர்கள் : துஷ்யந்த் ஜெயபிரகாஷ், கேப்ரில்லா, ராதாரவி, சரண்ராஜ், ஜீவா ரவி, மகேஸ்வரி இசை: போபோ சசி நகரத்தில் தண்ணீர் என்பது கடவுள், அப்படிபட்ட்ட குடி தண்ணீர் பற்றிய பின்னணியில் உருவாகியுள்ள படம் வருணன் சென்னையில் , ராயபுரம் மற்றும் பகுதியில், தண்ணீர் கேன் விற்பனை செய்யும் இரண்டு தரப்ப்புக்கிடையே போட்டி ஏற்படுகிறது. நிறுவனத்தின் உரிமையாளர்கள் மோதல் இல்லாமல் தொழில் செய்து வந்தாலும், அவர்களிடம் வேலை செய்யும் இளைஞர்கள் அடிக்கடி மோதலில் ஈடுபடுகிறார்கள். மறுப்பக்கம் காவல்துறை அதிகாரி தண்ணீர் கேன் நிறுவனத்தில் முதலீடு செய்து சம்பாதிக்க முயற்சிக்கிறார். இதன் காரணமாக, இரு தரப்பினருக்குமான தொழில் போட்டி, பெரும் பகையாக உருவெடுக்க, அதனால் அவர்களது வாழ்க்கை எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறது என்பது தான் ‘வருணன்’ படத்தின் கதை.   தண்ணீர் கேன் நிறுவனம் நடத்துபவர்களாக ராதாரவி மற்றும் சரண்ராஜ் நடித்திருக்கிறார்கள்,…
Read More
கமலுக்கு வெளி வேலை இல்லை- ராதாதவி

கமலுக்கு வெளி வேலை இல்லை- ராதாதவி

டர்ம் புரொடக்ஷன்ஸ் பேனரில் எஸ். உமா மகேஸ்வரி தயாரிப்பில் உருவாகியுள்ள 'ட்ராமா' திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் கே. பாக்யராஜ் படத்தின் இசையை வெளியிட, படக்குழுவினருடன் நடிகர் 'டத்தோ' ராதா ரவி மற்றும் தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி ஆகியோர் இணைந்து பெற்றுக்கொண்டனர். அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விவேக் பிரசன்னா, பூர்ணிமா ரவி, ஆனந்த் நாக், சாந்தினி தமிழரசன், நிழல்கள் ரவி, மாரிமுத்து, பிரதோஷ், வையாபுரி, ரமா, நமோ நாராயணன், பிரதீப் கே. விஜயன், 'ஸ்மைல்' செல்வா, மதனகோபால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அஜித் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவை கவனிக்க. ராஜ் பிரதாப் இசையமைத்திருக்கிறார் . படத்தொகுப்பு பணிகளை முகன்வேல் கையாள, கலை இயக்கத்தை முஜிபுர் ரகுமான் மேற்கொண்டிருக்கிறார். மெடிக்கல் கிரைம் திரில்லராக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆல்பா 3 என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வழங்குகிறது. வரும் 21ம் தேதியன்று…
Read More
ஆச்சரியங்களை அள்ளித் தெளிக்கும் ’ஜென்டில்வுமன்’ திரைப்படம் !!

ஆச்சரியங்களை அள்ளித் தெளிக்கும் ’ஜென்டில்வுமன்’ திரைப்படம் !!

இயக்குனர் - ஜோஷ்வா சேதுராமன் நடிகர்கள் - லிஜோ மோல் ஜோஸ், ஹரி கிருஷ்ணன், லாஸ்லியா இசை - கோவிந்த் வசந்தா தயாரிப்பு - கோமளா ஹரி பிக்சர்ஸ் - கோமளா ஹரி , ஹரி பாஸ்கரன் அறிமுக இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்கத்தில் முழுக்க பெண்களை மையமாக வைத்து வந்திருக்கும் படம். ஒரு மலையாள பட சாயல் அதிகமாக தெரிந்தாலும், படம் முழுக்க ஆச்சரியங்களை அள்ளித் தெளித்து கொண்டிருக்கிறது இந்த ஜெண்டில்வுமன்.   சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு தம்பதியர் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர், தன் மீது கணவர் அளவுக்கு அதிகமான பாசத்தோடு இருக்கிறார் என்று நினைக்கும் போது, கணவரின் செல்போன் மூலம் அவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை தெரிந்துக் கொள்கிறார். இதனால் கடும் கோபமடையும் அப்பெண் எதிர்பாராமல் கணவரை கொலை செய்து விடுகிறார். இரத்த வெள்ளத்தில் கணவர் இறந்ததை பார்த்து சற்றும் கலங்காதவர்,…
Read More
மனிதர்களின் நிறத்தை தோலுரிக்கும் படம் – நிறம் மாறும் உலகில் !!

மனிதர்களின் நிறத்தை தோலுரிக்கும் படம் – நிறம் மாறும் உலகில் !!

  இயக்கம் - பிரிட்டோ ஜெ பி நடிகர்கள் - பாரதிராஜா , சாண்டி மாஸ்டர், யோகி பாபு, வடிவுக்கரசி இசை - தேவ்பிரகாஷ் தயாரிப்பு - சிக்மா புரோடக்சன் பல கதைகளை தனித்தனியாக ஆந்தாலஜி வடிவில் ஒரு கருவை மையமாக வைத்து வந்திருக்கும் படம் தான் நிறம் மாறும் உலகில். நிமிடத்துக்கு நிமிடன் நிறம் மாறும் உலகில், தாயின் பாசம் மட்டும் மாறுவதில்லை இது தான் படத்தின் கரு. அம்மாவிடம் கோபப்பட்டு பிறந்தநாளில் ரயிலேறும் இளம்பெண், அவளிடன் அம்மாவின் அருமை பற்றி புரிய வைக்க தான் சந்தித்த மனிதர்களின் கதை சொல்கிறார் டிடிஆர். அப்படியே நான்கு கதைகள் விரிகிறது. ஒரு காதல் ஜோடி குடும்பத்திற்காக பயந்து ஊரை விட்டு ஓடிப்போய், மும்பை தாதா ஒருவரிடம் சிக்குகிறார்கள். தாதா கை காட்டுகிற ஒருவரை கொலை செய்தால்தான் அங்கிருந்து அவர்களால் தப்பிக்க முடியும் என்கிற கட்டாயத்தில் இருக்கின்றனர், இது ஒரு கதை தன்…
Read More