தி ராஜா சாப்
இயக்கம்: மாருதி
நடிகர்கள்: பிரபாஸ், சஞ்சய் தத், நிதி அகர்வால், மாளவிகா மோகனன், ரித்தி குமார்
இசை: தமன்
தயாரிப்பு: People Media Factory
பாகுபலி மூலம் பான்-இந்திய சினிமாவின் உச்சத்தில் நின்ற பிரபாஸ், அதன்பிறகு ஒவ்வொரு படத்திலும் முற்றிலும் வித்யாசமான கதை தேர்வுகளைச் செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார். அந்த வரிசையில், “தி ராஜா சாப்” அவருடைய திரைப் பயணத்தில் இன்னொரு புதுமையான முயற்சி.
ஆனால் அவரின் ஆவி கலந்த ஹாரர் காமெடி ரசிகர்களைக் கவர்ந்ததா?
கதை மிக எளிமையானது தான்
அல்சைமர் பாதிக்கப்பட்ட ஒரு பாட்டி, மர்மமான முறையில் காணாமல் போன தாத்தா, நர்சாபூர் காட்டுக்குள் அமைந்துள்ள அச்சம் நிறைந்த பழமையான கோட்டை—இந்த மூன்று கூறுகளையும் மையமாக வைத்து, ஹாரர் + காமெடி ஜானரில் கதை நகர்கிறது. பயமுறுத்தும் தருணங்களும், அதே நேரத்தில் சிரிப்பை வரவழைக்கும் காமெடி காட்சிகளும் சரியான அளவில் கலந்திருக்கின்றன.
பான் இந்திய அளவில் கலக்கும் ஹீரோ இந்த மாதிரியான ஹாரர் காமெடி கதையில் பிரபாஸ் நடித்திருப்பதே படத்தின் முதல் பெரிய ஆச்சரியம். ஸ்டைலிஷ் லுக், துடிப்பு, எனர்ஜி—எல்லாமே அவரிடம் நிறைவாக இருக்கிறது. “இப்படியான ஜானரில் பிரபாஸ் எப்படி ஒத்துக்கொண்டார்?” என்ற கேள்வி ரசிகர்களின் மனதில் எழுவது இயல்பே. குறிப்பாக கல்கி போன்ற பிரம்மாண்டமான படத்திற்குப் பிறகு, இப்படியொரு லைட்-ஹாரர் காமெடி முயற்சி யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
தமன் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ஹாரர் சூழலுக்கு நன்றாக பொருந்துகிறது. சில சீன்களில் BGM தான் பயத்தை தூக்கும் முக்கிய காரணியாக அமைகிறது. ஒளிப்பதிவிலும் எந்த பெரிய குறையும் இல்லை; கோட்டை, காடு, இருட்டான காட்சிகள்—all visually effective.

மூன்று காதாநாயகிகள் ஆனால் மூவரும் வெறும் கவர்ச்சிக்கும் பாடலுக்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். பிராபாஸ் என்றாலே ஆக்சன் படம் என்றாகிவிட்ட நிலையில் இந்தப்படம் இளைப்பாறலாக இருந்திருக்க வேண்டும் ஆனால் திரைக்கதை ஓரிடத்தை விட்டு நகரவே இல்லை. ஆனால், திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெடல் காட்டியிருந்தால் படம் இன்னும் அதிக வரவேற்பை பெற்றிருக்கும்.
சில இடங்களில் கதை வேகம் சைக்கிள் வேகமாக இருந்து விடுகிறது. அதைத்தவிர, பொழுதுபோக்கு அம்சத்தில் படம் தன் இலக்கை ஓரளவு எட்டியுள்ளது.
மொத்தத்தில், “தி ராஜா சாப்” என்பது ஒரு முழுமையான மாஸ்-எண்டர்டெய்னர். ஹாரர், காமெடி, ஸ்டைல்—மூன்றையும் ஒரே இடத்தில் ரசிக்க விரும்பும் ரசிகர்களுக்கு இது ஒரு “சூப்பர் சாப்” தான். 👻🔥
