21
Dec
உலக மயமாக்கலுக்குப் பின்னர், எல்லா வகையான செயல்களும் உலகளவில் நிலைப்படுத்தப் பட்டு வருகின்றன. தரப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் கல்வித்துறை மட்டும் நமது நாட்டில் பின்தங்கியே இருக்கிறது என்பது வேதனைதான். ஏகப்பட்ட வேறுபாடுகளும், சூழல்களும் நிறைந்த நம் நாட்டில் உள்ள மாநில அரசுகளின் முரண்பட்ட கல்விக்கொள்கைகள் ஒரு விசித்திரமான சூழலையே ஏற்படுத்தியுள்ளது. கலாச்சார மாற்றம் கல்வியோடு இணைந்தே சமுதாயத்திலும் உணவிலிருந்து உடை வரை பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அதற்கேற்றவாறு மாணவர் களைத் தயார்படுத்த வேண்டியது கல்வித் துறையில் பெரிய சவாலாக உள்ளது. கற்றுத்தரும் முறைகளில் பழங்கால முறை பொருந்தாத ஒன்றாகும். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும், தொலைக்காட்சி, கணினியின் வளர்ச்சியும் பயன்பாடெல்லாம் கல்விச் சாலைக்குள் நுழைவதே செய்தியாகும் அளவுக்குத்தான் இருக்கிறது. ஆனாலும் இந்தியாவில் கல்வி கற்றுக் கொடுக்கும் முறைகளில் மாற்றம் வேண்டும் என்று ஏகப்பட்ட பேர்கள் எழுதியும், பேசியும் ஓய்ந்து போன நிலையில் இந்த கல்வி பிரச்னையை வைத்து ஹீரோ என்றொரு சினிமாவே எடுத்து விட்டார்கள்.…
