‘ராக்கி’ – விமர்சனம்!

‘ராக்கி’ – விமர்சனம்!

உங்களுக்கு நாய் பிடிக்குமா? அதிலும் தமிழ் சினிமா நாயகன் மாதிரி சாகசம் செய்யும் நாய்களைப் பிடிக்குமா? ஆம் எனில் ஒரு எட்டு போய் திரையரங்கில் ராக்கி படத்தைப் பாருங்கள்..ஒரு நாய் தனது எஜமான் மீது வைத்துள்ள கட்டற்ற அன்பையும், அந்த எஜமானையே இழந்த நாய் பதறிப் போய் செய்யும் அதிரடி வீர தீர சாகசமும் தான் ராக்கி படக் கதை. இப்போதெல்லாம் பெரும்பாலான வீடுகளில் தங்கள் வீட்டு குழந்தைகளை போல் நாய்களை பராமரிக்கின்றனர். பாலூட்டிகளில் நன்றியுள்ள ஜீவன்களில் முதலிடத்தில் இருப்பது நாய்கள் மட்டுமே. பல வீடுகளில் தனது எஜமானர் ஒரு வார்த்தை ஏதாவது திட்டிவிட்டாலோ அல்லது கோபத்தில் அடித்து விட்டாலோ குழந்தைகளை போல் கோபித்துக்கொண்டு நாள் கணக்கில் பாராமுகம் காட்டுவதை காணமுடியும். ஆனால் அப்படி குழைந்து வாலாட்டும் நாயின் குணத்தை மாற்றி வேட்டை நாய்கள்,காவல்நாய்கள்,செல்ல நாய்கள், மோப்ப நாய்கள் என தேவைகளுக்கேற்ப பயன் படுத்தும் மனிதர்கள் அதிகரித்து விட்டார்கள். அதிலும் இந்த…
Read More
சூப்பர் டீலக்ஸ் – ரிவியூ – ஹைடெக்கான கழிவறை வாகனம்!

சூப்பர் டீலக்ஸ் – ரிவியூ – ஹைடெக்கான கழிவறை வாகனம்!

பாயிண்ட் நம்பர் 1 கள்ளக் காதல் – இந்த வார்த்தை அன்றாடம் நாளிதழில் இடம் பெறும் சமாச்சாரம்தான். இந்த கள்ளக் காதலால் கொலை அல்லது தற்கொலை நடந்தது என்ற செய்தியும் இத்துடன் இணைந்தே வருவதையும் கவனிக்கலாம்.. பாயிண்ட் நம்பர் 2 உலகளவில் போர்னோ எனப்படும் பலான படங்களை பார்ப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. அதிலும் பல ட்ரிபிள் எக்ஸ் ஆல்பங்களில் தொடக்கத்தில் எச்சரிக்கை.. இதில் உங்களுக்கு அறிமுகமானவர் படம் கூட இருக்கலாம் என்ற வாசகம் இடம் பெற்றிருப்பதையும் கவனிக்கலாம். பாயிண்ட் நம்பர் 3 நம் நாட்டில் வாழுவோரின் மதம் என்பது அவரவர் தனிப்பட்ட எண்ணமும், உரிமையும் ஆகும்.. அதே சமயம் தான் சார்ந்த மதத்தை உயர்த்தி பிற மதத்தை இழிவுப் படுத்த சட்டம் கூட அனுமதிக்க வில்லை என்பது கவனிக்கலாம். பாயிண்ட் நம்பர் 4 மனித குலத் தோன்றலின் போதே ஆணுமில்லாமல், பெண்ணுமில்லாமல் வாழ்ந்து வரும் மனிதப் பிறவிகள்தான் அரவானிகள்.…
Read More
அக்னி தேவி – விமர்சனம்!

அக்னி தேவி – விமர்சனம்!

சில சினிமாக்களில் கதையே இருக்காது.. சில சினிமாக்களில் சொல்லும் கதை புரியாது, சில சினிமாக்களில் நமக்கு தெரிந்த கதையை சொல்லி இருப்பார்கள் இல்லையா? அந்த டைப்பிலான கதை கொண்ட படம்தான் , ‘அக்னிதேவி’. நம்மில் பலரும் மறக்க முடியாத நுங்கம்பாக்கம் ஸ்வாதி கொலை., கருப்பு பணம், மோடியின் பண மதிப்பிழப்பு அறிவிப்பு, கண்டெய்னர் விவகாரம், நேர்மையான போலீஸ் ஆபீசர் (பொன்.மாணிக்கவேல்?)., அடாவடி அமைச்சர் (சசிகலா?) ஆகியோரை மனதில் கொண்டு பின்னி பிசையப் பட்ட கதைதான் இது. அதாவது நேர்மையான போலீஸ் அதிகாரி பாபி சிம்ஹா. இவரின் காதலி ஒரு நியூஸ் ரீடர் (ரம்யா நம்பீசன்) வற்புறுத்தலின் பேரில் ஒரு எக்ஸ்குளூசிவ் இண்டர்வியூ எடுக்க வரும் லேடி நிருபர், பஸ் ஸ்டாண்டில் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்படுவதோடு, அவரது அண்ணனும் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். இந்த வழக்கை நேரடியாக பாபி சிம்ஹா விசாரிக்க, அவருக்கு மேலதிகாரிகள் அழுத்தம் கொடுப்பதோடு, கொலை நடந்த போது…
Read More
ஜூலைகாற்றில் விமர்சனம்!

ஜூலைகாற்றில் விமர்சனம்!

மனித வாழ்வின் ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும் ஓர் அர்த்தம் உள்ளது. அதன் விளைவால் இன்பம் உள்ளது. ‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்’ என்று ஓஷோ ஒரு குட்டிக் கதை மூலம் விளக்கி இருக்கிறார். “நகரத்தின் மிகப்பெரிய பணக்காரன் ஒருவனுக்கு ஆனந்தம் இல்லாமல் வாழ்ந்து வந்தான். நாட்கள் செல்லச் செல்ல கவலை அவனை ஆட்கொள்ளத் துவங்கியது. ஒரு நாள் அவன், தன்னுடைய வீட்டில் வசிப்பவர்களை அழைத்து, “எனக்கு ஆனந்தம் கிடைக்கும் என்று பல நாள் எதிர்பார்த்தேன் ஆனால் கிடைக்கவில்லை, இனி நானே ஊர் ஊராகச் சென்று ஆனந்தத்தைத் தேடப்போகிறேன்” என்று கூறிவிட்டு, தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு வெளியேறினான். ஒவ்வொரு ஊராகச் சென்று, எதிரே வரும் மக்கள் அனைவரிடத்திலும் ஐயா ஆனந்தம் எங்கே கிடைக்கும்? ஆனந்தம் இந்த ஊரில் கிடைக்குமா? என்று கேட்டான். “நாங்களும் அதைத்தான் தேடுகின்றோம். உங்களுக்குத் தெரிந்தால் கூறுங்கள்.” “உங்களைப் போல நாங்களும் ஊர் ஊராகத் தேடுகின்றோம் ,…
Read More
நெடுநல் வாடை விமர்சனம்!

நெடுநல் வாடை விமர்சனம்!

தமிழ் சினிமாவில் கதைக்கு மட்டுமின்றி தலைப்புக்கும் பஞ்சம் வந்து ரொம்ப நாளாகிறது. அதனால் தான் முன்னொருக் காலத்தில் ஹிட் அடித்த படங்களின் பெயரை மறுபடியும் உபயோகிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் புது முயற்சியாக தூய தமிழில் அதுவும் பழந்தமிழ் இலக்கியப் படைப்பான பத்துப்பாட்டில் ஒன்றான நெடுநல்வாடை என்னும் தலைபில் ஒரு படம் வந்துள்ளது. அதுவும் நெல்லையின் மண் மனம், மணம், குணம், நிறம், காரம், இனிப்பு, புளிப்பு என்ற பல்வேறு சுவைகளை கொஞ்சம் கூட மா(ற்)றாமல் ஒரு சினிமாவாகக் கொடுத்துள்ளார்கள். படத்துக்குள் நுழைவதற்கு முன் சில தகவல்களை தெரிந்து கொள்வது நல்லது. இந்த நெடுநல் வாடை-யைப் பாடியவர் மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரனார் ஆவார். இப்பாடலானது பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடுவதாக உள்ளது. அதில் கூதிர்காலப் பாசறை அமைத்துப் போர் புரியச் சென்ற தலைவனை எதிர்பார்த்து அவன் வராததால் தனிமைத் துயரில் தவிக்கும் தலைவி யின் காதலை அழகுபட எடுத்துரைக்கிறார். அவளுக்கு…
Read More
பூமராங் – திரைப்பட விமர்சனம்!

பூமராங் – திரைப்பட விமர்சனம்!

சினிமாக்களில் எக்கச்சக்கமான வெரைட்டி உண்டு.. அந்த கால படங்களை விடுங்கள்.., இன்றைய சூழ்நிலையில் காதல் படம், குடும்பப் படம், பேய் படம்,சிரிப்புப் படம், அடல்ட் படம், யூத் படம் என்ற வரிசையில் யூஸ்ஃபுல் மெசெஜ் சொல்லும் சினிமா என்றொரு வகை உண்டு. அது என்ன என்று தெரிந்து கொள்ள இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத் தில் அதர்வா, மேகா ஆகாஷ், RJ பாலாஜி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள பூமராங் படத்தைப் பாருங்கள்.  உண்மைதான் இன்னொரு உலகப் போரை உருவாக்க வாய்ப்புள்ள தண்ணீர் பிரச்னைக் குறித்து இன்றைய இளைஞர் களும் ரசிக்கும் விதத்தில் படமாகி இருக்கிறது பூமராங். அதாவது நாட்டில் ஆங்காங்கே உள்ள நதிகளை இணைத்தால் வறண்ட இடங்களையும் விவசாயம் செழிக்கும் இடங்களாக மாற்றலாம் என்ற கருத்து நீண்டகாலமாக ஏட்டளவில் (இணைய அளவில் என்றும் கொள்ளலாம்) அலசப்பட்டும் விஷயம்தான், ஆனால் இந்த நதி நீர் இணைப்பிற்காக அரசாங்கம் கொஞ்சம் கூடஎதுவும் செய்ததில்லை. மக்கள் நலனுக்கான…
Read More
90 ML மூவி ரிவியூ!

90 ML மூவி ரிவியூ!

ஆச்சரியமாக இருக்கிறது.. கொஞ்சம் ஆயாசமாகவும் இருக்கிறது.. நாட்டில் பாகிஸ்தானுடன் யுத்தம் வந்து விடுமோ என்றொருப் பக்கம் பதட்டமான சூழல்., கூடவே விரைவில் வந்து விடும் என்று நம்பப்படுகிற பார்லிமெண்ட் தேர்தலில் யார் யாரோடு கூட்டணி என்பதை கவனிக்க வேண்டிய தொழில்.. இதையெல்லாம் தாண்டி இன்றைய பிழைப்புக்காக இந்த வாரம் ரிலீஸான  90 எம்.எல். சினிமா எப்படி இருக்கிறது என்று கொஞ்சம் அலசி ஆராய்ந்து எழுத வேண்டிய சூழ்நிலையை நினைத்தால் வேதனை மற்றும் வெட்கத்தையும் தாண்டி கடமையுணர்வை நிறைவேற்ற வேண்டியது அவசியம் என்றும் தோன்றுகிறது. இந்த மேற்கண்ட பேராவை எழுத வேண்டிய சூழலை விவரிக்கும் முன்னர் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி .. அது கூட என்னிடம் மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் கேட்ட கேள்வி. அதாவது நான் ஜூ.வி. என்னும் வார இதழில் இணைந் திருந்த போது ஃபுளூ பிலிம் குறித்து ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட் எழுத (இது 1987 என்பதை நினைவு…
Read More
சேரனின் திருமணம் – விமர்சனம்!

சேரனின் திருமணம் – விமர்சனம்!

நம்மில் எல்லோர் இல்ல திருமணங்களில் வண்ணமும், வாசமும் நிறைந்திருக்கும். பல்வேறு சடங்குகளுக்கும் குறைவிருக்காது. மணமக்கள் மகிழ்ச்சியாக நீடுழி வாழ வேண்டும் என்பதே அதற்கு அடிப்படை. இதையொட்டி சில திருமண நிகழ்வுகள் நான்கு நாட்கள் வரை நீடிக்கும். ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பர். அத்தனை பேருக்கும் அறு சுவை விருந்து. அதற்கான செலவைச் சத்தமாகச் சொல்லி விட முடியாது. இந்த ஒற்றைத் திருமணத்திற்காக, வாழ் நாள் சேமிப்பைச் செலவிடத் தயங்குவதில்லை பாசமிக்க தந்தையர் பலர். அண்மையில் சினிமா பிரபலம் ஒருவரின் மகளுக்கு இரண்டாம் திருமணம். செலவு எவ்வளவு தெரியுமா? அது சரி.. அது எதற்கு இப்போது? ஆனால் இந்த போக்கால் கவரப்பட்டு அவரது ரசிகர் ஒருவர் தன் மகளுக்கு கடன் வாங்கி இதே பாணியில் மேரேஜ் நடத்த ஆசைப் பட்டு அதற்கு வழியில்லாததால் சூசைட் செய்து கொண்டார் என்றொரு செய்தி சென்னை நாளிதழ்களில் இடம் பெற வில்லை என்பதுதான் சோகம். பெரும்பாலும் இந்த திருமண கோலாகல…
Read More
ஒரு அடார் லவ் – விமர்சனம்!

ஒரு அடார் லவ் – விமர்சனம்!

மனிதர்கள் அது ஆணோ, பெண்ணோ.. ஒவ்வொருவருக்குள்ளும் பூக்கும் ஓர் மென்மையான உணர்வே காதல். இது இனிமை யானது, இளமையானது, அழகானது, ஆழமானது, மென்மை யானது, ஆனாலும் இந்த காதல் பல தரப்பிலும் பல வயதிலும் பல்வேறு காரணங்களால் வருவது இயல்பே. அந்த வகையில், பள்ளிப் பருவக் காதல் பலருக்கும் வந்த உணர்வு. அதை ‘இன்பாச்சு வேஷன்’ என்னும் ‘இனக் கவர்ச்சி’ என்றெல்லாம் மன நல மருத்துவர்கள் குறிப்பிட்டாலும் அந்த வயசில் வருவதை யாராலும் தடுக்கவும் முடியாது., மறைக்க அல்லது மறுக்கவும் முடியாது. அப்படியான ஒரு அடல்ட் லவ் ஸ்டோரி தான் -ஒரு அடார் லவ் படம். ஒரு பள்ளியில் 11-வது படிக்கும் ரோஷனுக்கும், நூரின் ஷெரிப்புக்கும் ஜஸ்ட் ப்ரண்ட்ஷிப் ஏற்படுகிறது. இந்த நிலையில், அதே பள்ளியில் வந்து சேருகிறார் பிரியா வாரியர். வந்த அந்த புது கேர்ளை பார்த்தவுடன் ரோஷனுக்கு காதல் மயக்கம் வந்து விடுகிறது. ஒரு கட்டத்தில் இருவருமே காதலிக்க…
Read More
தேவ் – திரை விமர்சனம்!

தேவ் – திரை விமர்சனம்!

காதல் என்பது ஆழமானது, தெய்வீகமானது.,கண்டவுடன் வருவதே காதல்.,அந்த காதலுக்கு கண் கள் கூட கிடையாது என்றெல்லாம் உரக்க சொல்லும் நபர்கள் எத்தனையோ பேர்களை பார்த்தி ருக்கிறோம். ஆனால் மேற்கண்ட விஷயத்தை லாஜிக், கதை, திரைக்கதை அல்லது ஈர்ப்பு எதுவுமே இல்லாமல் சுமார் இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக சினிமாவாகவே எடுத்துக் காட்டி நம்ப வைத்திருக்கிறார்கள். ஆம். அறிமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர்  டைரக்‌ஷனில்  கார்த்தி – ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள தேவ் படம்தான் அது. விட்டேத்தியாக பொழுது போக்கிக் கொண்டு  ஹாபி, என்ஜாய்,  காதல் &  இசை, அது , இது என்று  எதையதையோ பேசித் திரிவதை விரும்பும் இன்றைய சில இளைஞர்களின் கனவுப் படம்தான் இந்த தேவ்.  அதாவது அட்வெஞ்சர் (என்ற சொல்லை மட்டும்) விரும்பும் ஹீரோ கார்த்தி. இவர் எங்கே போனாலும் தனது நண்பர்களான விக்னேஷ் காந்த் மற்றும் அம்ருதாவை கூடவே கூட்டிச் செல்கிறார். கார்த்தியின்…
Read More