‘மதிமாறன்’ – திரை விமர்சனம்

‘மதிமாறன்’ – திரை விமர்சனம்

  உடலில் என்ன வேண்டுமானாலும் குறை இருக்கலாம் ஆனால் அது மனிதனின் தரத்த்தை நிர்ணயம் செய்து விடாது. உடலில் குறை கொண்டவர்களும் மனிதர்களே .. அவர்கள் சரிசமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை சொல்லும் படம் தான் மதிமாறன். திருநெல்வேலியில் உள்ள கிராமத்தில் தபால்காரராக இருக்கும்  எம் எஸ் பாஸ்கருக்கு இரட்டைக் குழந்தைகள். அதில் ஒருவர்  வெங்கட் செங்குட்டுவன் (நெடுமாறன்), மற்றொருவர் இவானா (மதி). இதில்  வெங்கட் உயரத்தில் வளர்ச்சி குறைவாக இருக்கிறார்.  அப்பா போல தபால்காராக  ஆக வேண்டும் என்பது  இவரது ஆசை.ஊரில் உள்ளவர்கள் கேலியும் கிண்டலும் செய்ய எதை பற்றியும்  கவலைப்படாமல் தனது திறமையை படிப்பிலும், அறிவிலும் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே அக்காவின் ஆதரவில் வளர்ந்து வருகிறார். ஒருநாள், இவானா தனது கல்லூரி பேராசிரியரோடு ஓடி போய்விட்டார் என்ற செய்தியறிந்து   எம் எஸ் பாஸ்கரும் அவரது மனைவியும் தூக்கு மாட்டிக் கொண்டு இறந்து விடுகிறார்கள். இதன் பிறகு அக்காவைத்…
Read More
’வட்டார வழக்கு’ – கிராமத்து கொண்டாட்டம் !

’வட்டார வழக்கு’ – கிராமத்து கொண்டாட்டம் !

கிராம வாழ்வியலை சொல்லும் படங்கள் எதுவும் இப்போது வருவதில்லை. அந்த வகையில் கிராமத்துக்குள் வாழும் மனிதர்கள் அவர்களின் பழக்க வழக்கம் எல்லாவற்றையும் இரத்தமும் சதையுமாக கண்முன் நிறுத்தும்படியாக உருவாகியுள்ளது வட்டார வழக்கு. 1980 கால கட்டத்தில்  மதுரையில் உள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் கதை. இரு பங்காளி குடும்பங்களிடையே பல வருடமாக நிலவும் நிலப்பிரச்சனை, இது தான் படத்தின் மையம். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நாயகன் சந்தோஷ  மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த சிலரை கொலை செய்து விடுகிறார். அந்த குடும்பம் அவரை கொலை செய்ய முயல்கிறது. பங்காளி சண்டை ஒருபுறம்.இருந்தாலும் காதலில் விழும் சந்தோஷ் ரவீனா மீது காதல் கொள்கிறார். பகை தீர்ந்ததா? சந்தோஷின் காதல் நிறைவேறியதா என்பதே   ’வட்டார வழக்கு’  படத்தின் கதை. டூலெட் படத்தில்  நாயகனாக அறிமுகமான  சந்தோஷ் நம்பீராஜன் இப்படத்தில் முரட்டு கிராமத்து வேடமேற்றுள்ளார். எதற்கெடுத்தாலும் கோபத்தோடு அருவா தூக்குவதும், காதலில் உருகுவதும் என அச்சு…
Read More
ஹாட்ரிக் அடித்தாரா ஷாருக் !!

ஹாட்ரிக் அடித்தாரா ஷாருக் !!

2023-ம் ஆண்டு மிகவும் கொண்டாடப்பட்ட நடிகர் என்றால் அது ஷாருக்கான் தான். அவர் நடிப்பில் இந்த ஆண்டு ஏற்கனவே பதான், ஜவான் என இரண்டு திரைப்படங்கள் வெளியாகின. அந்த இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்டதோடு ரூ.1000 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது. இந்த நிலையில், அவர் நடிப்பில் இந்த ஆண்டு மூன்றாவது படமாக டங்கி இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. டங்கி திரைப்படத்தை பாலிவுட்டின் முன்னணி இயக்குனரான ராஜ்குமார் ஹிரானி இயக்கி உள்ளார். இப்படத்தில் ஷாருக்கான் உடன் டாப்ஸி, விக்கி கவுஷல் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மனு ரன்தாவா (டாப்ஸி) அங்கிருந்து தப்பிக்கிறார். 25 வருடங்களாக லண்டனில் இருக்கும் அவருக்கு, நண்பர்கள் புக்கு லகன்பால் (விக்ரம் கோச்சார்), பாலி கக்கார் (அனில் குரோவர்) ஆகியோருடன் இந்தியா திரும்ப வேண்டும் என்று ஆசை. ஆனால் அவர்களுக்கு பிரிட்டிஷ் தூதரகம் விசா வழங்காது.…
Read More
சலார் தெறிக்கும் இரத்த ஆறு !!

சலார் தெறிக்கும் இரத்த ஆறு !!

  கேஜிஎஃப் வெற்றிக்குப்பிறகு இயக்குநர் பிரசாந்த் இயக்கத்தில் நீல் பாகுபலி பிரபாஸ் நடித்திருக்கும் படம். பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் வந்திருக்கிறது. நாயக பிம்பத்தை தூக்கிப்பிடிக்கும் வன்முறை மிகுந்த உலகத்திற்குள், அரச நாற்காலிக்கு நடக்கும் போராட்டன் தான் கதை.   பாகுபலிக்கு பிறகு பிரபாஸுக்கும் அவரது ரசிகர்களுக்கும் வலுவான ஆக்சன் விருந்தாக அமைந்துள்ளது சலார் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வருகிறார் ஆத்யா (ஸ்ருதி ஹாசன்). விமான நிலையத்தில் இறங்கியவுடன் அவரைக் கொல்வதற்கு ஒரு கும்பல் அவரைப் பின்தொடர்கிறது. அந்த கும்பலிடம் இருந்து யாரும் அவரைக் காப்பாற்ற முடியாது என்ற நிலையில், தேவா (பிரபாஸ்) மட்டுமே அவருக்கு உதவ முடியும் என்ற சூழ்நிலை உருவாகிறது. ஆனால் அந்த தேவா அசாமில் உள்ள டின் சுகியா எனும் தொலைதூர கிராமத்தில் தனது தாயுடன் (ஈஸ்வரி ராவ்) அமைதியாக வசித்து வருகிறார். அதைக் கண்டும் காணாதது போலச் சென்று விடுவார். தன் தாய்க்குச் செய்து கொடுத்த சத்தியத்திற்காக எல்லா…
Read More
ஃபைட் கிளப் திரை விமர்சனம்

ஃபைட் கிளப் திரை விமர்சனம்

இயக்கம் - அப்பாஸ் அன்சாரி ரஹ்மத் நடிகர்கள் - விஜய் குமார் , தயாரிப்பு - லோகேஷ் கனகராஜ் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் வழங்கும், முதல் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது “ஃபைட் கிளப்”. ரீல் குட் ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிக்க, உறியடி விஜய் குமார் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் அப்பாஸ் அன்சாரி ரஹ்மத் இயக்கியிருக்கிறார்.   வடசென்னை, லேபில் வெப்சீரிஸை தொடர்ந்து இந்த ஃபைட் கிளப் படமும் வடசென்னை பகுதியை மையமாக வைத்து அங்கு நடக்கும் வன்முறைகளிலிருந்து வெளிவர ஆசைப்படும் இளைஞர்களைப் பற்றிப்பேசுகிறது. கொலை, கஞ்சா என வன்முறைகளமாக இருக்கும் நிலத்திலிருந்து இளைஞர்களை முன்னேற்ற நினைப்பவரை கூட இருந்த கூட்டமே அரசியல் லாபத்திற்காக கொலை செய்துவிடுகிறது. அதில் ஒருவன் சிறைக்குச் செல்ல இன்னொருவன் அரசியலில் பெரிய ஆள் ஆகி விடுகிறான். நாயகன் அவனது தோழர்களும் வாலிபால் வீரர்களாக ஆசைப்படுகிறார்கள், அரசியல் கும்பல்…
Read More
ஃபைட் கிளப் அசத்தியதா?

ஃபைட் கிளப் அசத்தியதா?

  இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் வழங்கும், முதல் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது “ஃபைட் கிளப்”. ரீல் குட் ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிக்க, உறியடி விஜய் குமார் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் அப்பாஸ் அன்சாரி ரஹ்மத் இயக்கியிருக்கிறார்.   வடசென்னை, லேபில் வெப்சீரிஸை தொடர்ந்து இந்த ஃபைட் கிளப் படமும் வடசென்னை பகுதியை மையமாக வைத்து அங்கு நடக்கும் வன்முறைகளிலிருந்து வெளிவர ஆசைப்படும் இளைஞர்களைப் பற்றிப்பேசுகிறது. கொலை, கஞ்சா என வன்முறைகளமாக இருக்கும் நிலத்திலிருந்து இளைஞர்களை முன்னேற்ற நினைப்பவரை கூட இருந்த கூட்டமே அரசியல் லாபத்திற்காக கொலை செய்துவிடுகிறது. அதில் ஒருவன் சிறைக்குச் செல்ல இன்னொருவன் அரசியலில் பெரிய ஆள் ஆகி விடுகிறான். நாயகன் அவனது தோழர்களும் வாலிபால் வீரர்களாக ஆசைப்படுகிறார்கள், அரசியல் கும்பல் அதைத்தடுக்கிறது. அரசியல் லாபத்திற்காக நடக்கும் விளையாட்டில் நாயகனின் கும்பல் மாட்டிக்கொள்கிறது அதிலிருந்து மீண்டார்களா என்பதே கதை. லோகேஷ்…
Read More
அன்னபூரணி திரைவுமர்சனம் !!  ருசியோடு பசியாற்றியதா அன்னபூரணி !

அன்னபூரணி திரைவுமர்சனம் !! ருசியோடு பசியாற்றியதா அன்னபூரணி !

இயக்கம் - நிலேஷ் கிருஷ்ணா நடிகர்கள் - நயன் தாரா , சத்யராஜ், கே எஸ் ரவிக்குமார் , ஜெய் லேடி சூப்பர்ஸ்டார் நயன் தாரா நடிப்பில், அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் பெரும் நட்சத்திர பட்டாளத்துடன் வந்திருக்கும் படம். திருச்சி ஶ்ரீரங்க நாதருக்கு நெய்வேத்தியம் சமைக்கும் குடும்பத்தில் வளரும் பெண்குழந்தை ஸ்டார் ஹோட்டல் செஃப் ஆக ஆசைப்படுகிறாள் அவளது ஆசை நிறைவேறியதா என்பதே படம். பிராமணப் பெண் ஒருத்தி நான் வெஜ் சமைக்கும் ஸ்டார் ஹோட்டல் செஃப் ஆக முடியுமா ? கேட்கும் போதே பிரச்சனையை ஏற்படுத்தும் இந்த ஒன் லைன் தான் கதை. நம்ம விடுகளிள் எப்போதும் லேடீஸ்தான் சமையல் செய்றாங்க. ஆனால் பெரிய ஸ்டார் ஹோட்டல்களுல ஏன் ரொம்ப குறைவான அளவுல லேடீஸ் செஃப்பா (சமையல் கலைஞர் )இருக்காங்க" என்று அன்னபூரணி படத்தில் சத்யராஜ் கேட்கும் கேள்விக்கு பதிலாக இந்த  அன்னபூரணி  படத்தின் திரைக்கதையை அமைதிருக்கிறார்…
Read More
பார்க்கிங் திரைப்பட விமர்சனம் !!

பார்க்கிங் திரைப்பட விமர்சனம் !!

ஹரீஷ் கல்யாண் எம் எஸ் பாஸ்கர் நடிப்பில் அறிமுக இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில், வந்திருக்கும் படம் பார்க்கிங். ஒரு பார்க்கிங் பிரச்சனை இரண்டு எளிய மனிதர்களின் ஈகோவை தூண்டி விட்டால் அந்த பிரச்சனை எந்த எல்லை வரை செல்லும் என்பது தான் படம். பொதுவாக நாம் தினசரி வாழ்வில் சந்திக்கும் மனிதர்கள், அவர்களின் பிரச்சனைகள் மனிதனின் ஈகோ இதுவெல்லாம் மலையாள சினிமா போல் இங்கு வருவதில்லை என்ற ஏக்கம் இருந்து வருகிறது. அந்த ஏக்கத்தைப் போக்கும் வகையில், வந்திருக்கிறது பார்க்கிங். கல்யாண தம்பதியாக மனைவி கர்ப்பமாக இருக்க புது வீடுக்கு குடியேறுகிறார்கள் ஹரீஷ் கல்யாண் இந்துஜா தம்பதி. அந்த வீட்டில் கீழ் போர்ஷனில் ஏற்கனவே எம் எஸ் பாஸ்கர் குடும்பம் இருக்கிறது. இருவரும் நன்றாகவே பழகுகிறார்கள். ஆனால் ஹரீஷ் கல்யாண் கார் வாங்க, அதைப் பார்க்கிங் செய்வதில் ஹரீஷ் கல்யாணுக்கும் எம் எஸ் பாஸ்கருக்கும் இடையில் பிரச்சனையாக வெடிக்கிறது. அந்தப் பிரச்சனையால்…
Read More
ஜோ’ காதல் சொல்லும் படம் !!! 

ஜோ’ காதல் சொல்லும் படம் !!! 

  ரியோ நடிப்பில் புதுமுக இயக்குநரின் இயக்கத்தில் வந்திருக்கும் ரொமான்ஸ் வகைப் படம். தமிழில் இப்பொழுது காதல் படங்கள் வருவது குறைந்து விட்டது அந்த ஏக்கத்தை போக்கும் வகையில் வந்துள்ள படம் தான் ஜோ. ஜோ எனும் இளைஞனின் வாழ்வில் வரும் காதல் தோல்வியும் வெற்றியும் அது அவன் ஏற்படுத்தும் பாதிப்புகளும் தான் கதை. இரு பெண்கள் வாழ்வில் அவன் என்ன செய்கிறான் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதே படம் கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார் நாயகன் ரியோ இதே கல்லூரியில் வந்து சேர்கிறார் கேரளாவை சேர்ந்த நாயகி மாளவிகா இருவரும் ஒரே வகுப்பு என்பதால் நாயகியை பார்த்ததும் நாயகனுக்கு காதல் வர முதலில் காதலை ஏற்க மறுக்கும் நாயகி ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்கிறார்கள்.. கல்லூரி இறுதி ஆண்டு படிப்பை முடித்து கேரளாவிற்கு செல்கிறார் நாயகி மாளவிகா ஒரு கட்டத்தில் பெண் கேட்டு செல்கிறார் நாயகன் ரியோ அங்கு…
Read More
ஹாலிவுட் நெப்போலியன் எப்படி இருக்கிறார் ? 

ஹாலிவுட் நெப்போலியன் எப்படி இருக்கிறார் ? 

  ஆஸ்கார் விருது பெற்ற நடிகரான ஜோக்குவின் ஃபீனிக்ஸ் நடிப்பில், கிளாடியேட்டர் பட இயக்குநர் ரிட்லி ஸ்காட் இயக்கத்தில். பிரெஞ்சுப் பேரரசர் நெப்போலியன் போனபார்ட்டின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் விவரிக்கும் அதிரடியான பயோகிராஃபி படம் தான் இது. மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும் இப்படம், அதிகாரத்தை நோக்கிய நெப்போலியனின் போராட்ட பயணத்தைப் பற்றியும், அவர் மிகவும் காதலித்த ஜோசஃபினுடனான உறவைப் பற்றியும் விலாவாரியாக சொல்கிறது. நெப்போலியன் வராலாற்றின் நாயகன் இன்று வரையிலும் அவரின் வரலாற்றை சுற்றி ஆயிரம் வதந்திகள் இருக்கிறது. சர்ச்சைகள் இருக்கிறது. நெப்போலியன் பூமியில் செய்த விசயங்களை அத்தனை எளிதில் திரையில் கொண்டு வர முடியாது. கற்பனைக்கெட்டாத பல போர்களை நடத்தியவன். ஐரோப்பாவை நடு நடுங்க வைத்தவன். ரஷ்யாவை மாஸ்கோவை விட்டே ஓட வைத்தவன் அவனின் வாழ்க்கையை திரைகொள்ள பிரமாண்டத்துடன் அழகான கவிதை போல் சொல்கிறது இப்படம் பிரெஞ்சுப் புரட்சியின் போது, இளம் இராணுவ அதிகாரியான நெப்போலியன் போனபார்ட் தனது சாமர்த்தியத்தால்…
Read More