கடல் பேய் கதை சொல்லும் ’கிங்ஸ்டன்’ !!

கடல் பேய் கதை சொல்லும் ’கிங்ஸ்டன்’ !!

இயக்கம் - கமல் பிரகாஷ் நடிகர்கள் - ஜிவி பிரகாஷ் குமார், திவ்யா பாரதி, சேதன் , அழகம் பெருமாள், இசை - ஜிவி பிரகாஷ் குமார் தயாரிப்பு - ஜீ ஸ்டுடியோ & ஜிவி பிரகாஷ் குமார் நடிகர் ஜிவி பிரகாஷ் 25 வது படமாக அவரே தயாரித்து இசையமைத்து நடித்துள்ள படம். இது அவரது முதல் தயாரிப்பு  ஆனால்  என்ன சிறப்பு ? தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு  கடற்கரை கிராம மக்களின் வாழ்க்கையில் மையம் தான் கதை. அங்குள்ளவர்கள் மீன்பிடி தொழிலை நம்பியிருந்தாலும், அவர்களால் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல முடியவில்லை. காரணம், பேராசை பிடித்த ஒருவரது ஆன்மா அந்த கடலை ஆட்கொண்டு அங்கு வருபவர்களை கொன்று குவிப்பது தான். இதனால், அந்த ஊர் மக்கள் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதோடு, கிடைக்கும் வேலைகளை செய்கிறார்கள். சில இளைஞர்கள் கடத்தல் தொழிலில் ஈடுபடுகிறார்கள். இந்த…
Read More
டிராகன்   உண்மையில் நன்றாக இருக்கிறதா ?

டிராகன் உண்மையில் நன்றாக இருக்கிறதா ?

ஆங்கிலத்தில் ஒரு வாசகம் உண்டு, "When Unstoppable Force meets an Immovable Object" இதில் Unstoppable Force ஆக அறம் என்ற ஒன்றே இல்லாமல், அனைவரையும் ஏமாற்றி, எல்லோரையும் மிதித்துவிட்டு மேலே ஏறும் ஒருவனையும், Immovable Object ஆக அவன் செய்து வைத்த தவறுகளின் ஒட்டுமொத்த சங்கம சுவரையும் எடுத்து கொண்டால், அது தான் டிராகன். பிரதீப் ரங்கநாதன் என்ற பெயருக்கே இப்போது பல டிக்கெட்டுகள் வித்து தீருகின்றன. ஆனால் வித்து தீரும் டிக்கெட் தகுதியானதாக இருக்கிறதா என்ற கேள்விக்கு விடை சொல்லும் விதமாக தான் டிராகன் இருக்கிறது. தான் ஒரு One film Wonder அல்ல என்பதை பிரதீப் நிரூபித்து இருக்கிறார். கல்லூரி காலத்தில் படிக்காமல் அரியர் வைத்து சுற்றி கொண்டு இருந்த இளைஞன் பொய் பேச்சு, போலி சான்றிதழ் என குறுக்கு வழியின் மூலமாக தனது கோட்டையை கட்டி கொண்டு செல்ல, அவன் இதுவரை செய்த தவறின்…
Read More
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்- விமர்சனம் !!

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்- விமர்சனம் !!

இந்த படத்தின் மீது இரண்டு விஷயங்களுக்காக நம்பிக்கை இருந்தது. ஒன்று, தனுஷின் மூன்றாவது இயக்கம் என்பதனால், மற்றொன்று பருவ வயது மனிதர்களை நாயகர்களாக திரையில் பார்த்து வெகுநாள் ஆகிவிட்டது என்பதனால். ஆனால் படம் முடிந்த பிறகு, இந்த நம்பிக்கை, மூட நம்பிக்கை என்று தெரிய வந்தது. உணர்வில்லாத கதைக்கு, உயிர் கொடுக்க உயிரோடு இருக்கும் எந்த மனிதனாலும் முடியாது. அது தான் இந்த படத்தின் நிலையும். தனுஷின் பேப்பரிலயே இல்லாத ஒன்று, எப்படி திரையில் வரும். Gen Z காதல் கதை என்ற பெயரில் தனுஷ் கதை உருவாக்க நினைத்தது, அற்புதமான யோசனை. தமிழில் எந்த இயக்குனரும் இந்த genre- யை தொடாதது தமிழ் சினிமாவிற்கு பெரும் காலமாக இழப்பாக இருந்து வந்தது. ஆனால் இதை பார்த்த பிறகு தான் அவர்கள் ஏன் தொடவில்லை என்று புரிந்தது. காதல், நட்பு, காதல் பிரிவு, தவறான புரிதல் என காதல் கதையில் நிறைந்து…
Read More
எப்படி இருக்கிறது அஜித்தின் விடாமுயற்சி ?

எப்படி இருக்கிறது அஜித்தின் விடாமுயற்சி ?

இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு அஜித்குமார் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில்  திரைக்கு வந்து இருக்கும் விடாமுயற்சி படத்திற்கு ரசிகர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதை இப்படம் பூர்த்தி செய்து இருக்கிறதா?. நெடுஞ்சாலை பயணத்தின் போது காணாமல் போன மனைவியை மீட்டெடுக்க முயற்சிக்கும் கணவன்.  இது தான் படத்தி ஒன்லைன் ஒரு மாஸ் ஹீரோவுக்கான கதை இல்லையென்றாலும் அதை துணிந்து செய்திருக்கிரார் அஜித். Slow- Burn திரில்லர் வகையில் எடுக்கப்பட்டு இருக்கும் இந்த திரைப்படம் மிகவும் சீரான வேகத்தில் நகர்கிறது.  எங்கும் ஏறவும் இறங்கவும் இல்லாமல், இந்த வகையான படத்திற்கு நேர்த்தி செய்யும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. தன் மனைவியுடன் அஜர்பைஜானின் நீண்ட நெடிய சாலையில் பயணம் செய்ய தயாராகும் ஜோடி. அந்த பயணத்தின் ஆரம்பத்தில் அவர்களுக்குள் இருக்கும் மன சிக்கலில் தொடங்கும் கதை, கதாநாயகி காணாமல் போகும் இடத்தில் வந்து பரபரப்போடு நிற்கிறது. ஒரிஜினலில் இல்லாத ப்ளாஷ்பேக்கில், நாயகன்…
Read More
மழையில் நனைகிறேன் – திரை விமர்சனம் !!

மழையில் நனைகிறேன் – திரை விமர்சனம் !!

இயக்கம் : T. சுரேஷ் குமார் தயாரிப்பு : ராஜ்ஸ்ரீ வென்சர்ஸ் நடிகர்கள் : அன்சன் பால், ரெபா மோனிகா ஜான்,  'சங்கர் குரு' ராஜா, அனுபமா குமார், மேத்யூ வர்கீஸ், கிஷோர் ராஜ்குமார், வெற்றி வேல் ராஜா மற்றும் பலர். தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் காதல் கதைகள் போட்டி போட்டுக்கொண்டு வந்தது ஆனால் இப்போது இரத்தம் தெறிக்கும் கதைகளே அதிகம். அந்த வகையில் இளைப்பாறும் வகையில் வந்திருக்கிறது மழையில் நனைகிறேன் திரைப்படம். தமிழ் அடித்துதுவைக்கப்பட்ட கதை, ஆனால் அதை சுவாரஸ்யமாக தந்திருக்கிறார்களா ? வாழ்க்கையில் எந்த லட்சியமும் இல்லாத இளைஞனாக ஊதாரியாக இருக்கும் ஜீவா செபாஸ்டியன் ( அன்சன் பால்) எனும் கதையின் நாயகன்-  அமெரிக்காவிற்கு சென்று உயர்கல்வியை கற்று, அங்கேயே வேலையைத் தேடிக் கொண்டு, வாழ்க்கையை சொகுசாக வாழ வேண்டும் என லட்சிய வேட்கையுடன் இருக்கும் ஐஸ்வர்யா ( ரெபா மோனிகா ஜான்) எனும் இளம்பெண்ணை சந்திக்கிறார்.…
Read More
ஒழுக்கம் எத்தனை முக்கியம் – ராஜாகிளி  படம் பேசும் அரசியல் !!

ஒழுக்கம் எத்தனை முக்கியம் – ராஜாகிளி படம் பேசும் அரசியல் !!

தம்பி ராமையா கதை, வசனம் எழுதி இசையமைக்க அவரது மகன் உமாபதி ராமையா இயக்கியுள்ள திரைப்படம் 'ராஜாகிளி'. இந்த படத்தில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா இருவரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த வாரம் வெளியாகியிருக்கும் இந்தப்படம் ரசிகர்களைக் கவர்ந்ததா? சமூகத்தில் உழைப்பால் உயர்ந்தவர்கள், சிறு சபலத்தால் எத்தனை கீழே போய் விடுகிறார்கள், உலகம் அவர்கள் வீழ்ச்சியை எப்படி ரசிக்கிறது என்பதை சொல்லி, வாழ்வின் ஒழுக்கத்தின் அவசியத்தை பேசியிருக்கும் படம் தான் ராஜாகிளி. தமிழகத்தில் ஒரு காலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பிரபல தொழிலதிபரின் கொலை வழக்கை மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அந்த உண்மை சம்பவத்தை அப்படியே எடுக்காமல் படத்திற்கான மசாலா சேர்த்து சுவாரஸ்யமான திரைக்கதை ஆக்கியதில், தம்பி ராமையா ஜெயித்து விட்டார். மனநலம் பாதிக்கப்பட்டவர்களை பார்த்துக் கொள்ளும் ஆஸ்ரமம் நடத்தும் சமுத்திரகனி, ரோட்டில் பிச்சைக்காரனாக மனநலம் குன்றி, அலையும் தம்பி ராமையாவை அழைத்து வருகிறார். தம்பி ராமையா ஒரு காலத்தில்…
Read More
கிச்சா சுதீப்பின் மேக்ஸ் எப்படி இருக்கிறது ?

கிச்சா சுதீப்பின் மேக்ஸ் எப்படி இருக்கிறது ?

இயக்கியவர்: விஜய் கார்த்திகேயா நடிகர்கள்: சுதீப், வரலக்ஷ்மி சரத்குமார், சம்யுக்தா ஹார்னாட், சுக்ருதா வாக்லே, சுனில், சரத் லோஹிதாஸ்வா, வம்சி கிருஷ்ணா, ஆடுகளம் நரேன், பிரமோத் ஷெட்டி, ரெடின் கிங்ஸ்லி, இளவரசு இசை: பி அஜனீஷ் லோக்நாத் தயாரிப்பு: வி கிரியேஷன்ஸ் & கிச்சா கிரியேஷன்ஸ் கலைப்புலி தாணு, கிச்சா சுதீப்பை வைத்து கன்னடத்தில் தயாரித்திருக்கும் திரைப்படம். இப்படத்தை அறிமுக் இயக்குநர் விஜய் கார்த்திகேயா இயக்கியிருக்கிறார். இது முழுமையான ஹீரோ ஆக்சன் மசாலா படம் ஆனால் முழுமையாக ரசிக்க வைத்திருக்கிறார்கள். ஒரு ஹீரோவுக்கான மாஸ் ஆக்சன் படத்தில், இயக்குநர் புத்திசாலித்தனமான திரைக்கதையை மட்டும் புகுத்திவிட்டால், அது பார்ப்பவர்களுக்கு ட்ரீட் தான். அதை மிக அட்டகாசமாக இந்தப்படத்தில் நிறைவேற்றி உள்ளது படக்குழு. கதை நாயகனை வைத்து, மொன்னையான காட்சிகளின் மாஸ் காட்டாமல், கதையில் வரும் டிவிஸ்ட்டை வைத்து, புத்திசாலியான திரைக்கதை அமைத்தால் அது தான் பக்கா மாஸ். கிட்டதட்ட ஒரே இரவில் நடக்கும்…
Read More
மனிதனுக்கு நேர்மை எத்தனை முக்கியம் – திரு மாணிக்கம் விமர்சனம்!!

மனிதனுக்கு நேர்மை எத்தனை முக்கியம் – திரு மாணிக்கம் விமர்சனம்!!

தயாரிப்பு : ஜி பி ஆர் கே சினிமாஸ் நடிகர்கள் : சமுத்திரக்கனி, அனன்யா , பாரதிராஜா , கருணாகரன், இளவரசு, தம்பி ராமையா, வடிவுக்கரசி, ஸ்ரீமன், சுலீல் குமார் மற்றும் பலர். இயக்கம் : நந்தா பெரியசாமி இந்தக்கால கட்டத்தில் மனிதனின் நேர்மை என்பது எத்தனை கேலிக்குறியதாகி விட்டது என்பதை பலமாக பேசியிருக்கும் படம் திரு மாணிக்கம். சமுத்திரக்கனி மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் கேரளாவில் வாழ்ந்து வருகிறார். குடும்ப பிரச்சனை, கடன் சுமை என பல பிரச்சினை இருந்தாலும் நேர்மையாக வாழ்ந்து வருகிறார் சமுத்திரக்கனி. லாட்டரி சீட்டு விற்பனை செய்வதுதான் இவருடைய தொழில். ஒரு நாள் இவருடைய கடைக்கு வரும் பாரதிராஜா லாட்டரி சீட்டு வாங்குகிறார். அவரிடம் பணம் இல்லாததால் அவரது சீட்டை எடுத்து வைக்க சொல்லிச் செல்கிறார். கடைசியில் அந்த சீட்டுக்கு ஒன்றரை கோடி பணம் கிடைக்கிறது. பாரதிராஜாவிடம் கொண்டு சேர்க்க சமுத்திரக்கனி புறப்படுகிறார். ஆனால் மனைவி…
Read More
சரத்குமாரின் 150வது படம் ஸ்மைல் மேன் எப்படி இருக்கிறது ?

சரத்குமாரின் 150வது படம் ஸ்மைல் மேன் எப்படி இருக்கிறது ?

இயக்கம்: ஷ்யாம்-பிரவீன் நடிகர்கள்: சரத்குமார், சிஜா ரோஸ், இனியா, ஸ்ரீகுமார், சுரேஷ் மேனன், நடராஜன், ராஜ்குமார், மலைராஜன் இசை: கவாஸ்கர் அவினாஷ் தயாரிப்பு: சலில்தாஸ், அனீஷ் ஹரிதாசன், ஆனந்தன் டி தமிழின் முன்னனி நடிகராக வலம் வரும் சரத்குமார் மீண்டும் நாயகன் வேடமேற்று நடித்திருக்கும் படம், அதுவும் இது அவரது 150 வது படம். மெமரீஸ், க் படங்களை இயக்கிய ஷ்யாம் பிரவீன் கூட்டணி மிஈண்டும் திரில்லர் ஜானரில் இயக்கியிருக்கும் படம் இது சிபிசிஐடி அதிகாரியான சரத்குமார், ஸ்மைல் மேன் என்ற சைக்கோ கொலையாளியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் போது விபத்தில் சிக்கி உடல் நிலை பாதிக்கப்படுகிறார். சில மாதங்களுக்குப் பிறகு குணமடைந்தாலும் அல்சைமர் என்ற மறதிநோயால் பாதிக்கப்படுகிறார். அவரது உயரததிகாரி அந்த கொலையாளியை கொலை செய்து விட்டு காணாமல் போகிறார். சில வருடங்களுக்குப்பிறகு மீண்டும் தொடர் கொலைகள் அதே பாணியில் நடைபெற ஆரம்பிக்கிறது. கொலையாளிக்கும் தனக்கும் ஏதோ ஒரு தொடர்பு…
Read More
அரசை ஆளும் தகுதி என்ன ? முஃபாசா தி லயன் கிங் விமர்சனம் !!

அரசை ஆளும் தகுதி என்ன ? முஃபாசா தி லயன் கிங் விமர்சனம் !!

டிஸ்னி தயாரிப்பில் தி லயன் கிங் படத்தின் தொடர்ச்சியாக அப்படத்தின் முன் கதையாக வந்துள்ள படம் தான் முஃபாசா தி லயன் கிங். ராஜ பரம்பரையில் இல்லாதவன் அரசை ஆளலாமா ? என்பது தான் இப்படத்தின் அடிநாதம். தாய் தந்தையின் அரவணைப்பில் வளர்ந்து வரும் முஃபாசா ஒரு பெரும் துயரால், அவன் மண்ணை விட்டு பிரியும் சூழல் உருவாகிறது. நீரில் தத்தளிப்பவனுக்கு ஆபத்பாந்தவனாய் உதவுகிறான் இளவரசன் டாக்கா. தனக்குப் பின் இந்தக் காட்டை ஆளும் தலைவன் டாக்காதான் என்பதால், முஃபாசாவை பார்த்த கணம் முதல் வெறுக்கிறான் டாக்காவின் தந்தை ஒபாஸி. இன்னும் தன் கடந்த காலத்திலிருந்து முழுமையாய் வெளியே வராத முஃபாசா, டாக்காவின் தாய் ஈஷேவின் அரவணைப்பில் வளர்கிறான். வெள்ளை சிங்கக் கூட்டத்தின் தலைவனான கீரோஸிற்கு ஆறா வடுவை ஏற்படுத்துகிறான் முஃபாசா. அதற்குப் பழிவாங்க ஒபாஸியின் கூட்டத்திற்கு குறி வைக்கிறான் கீரோஸ். கீரோஸின் கண்களில் மண்ணைத் தூவி, தான் தொலைத்த இடத்தை…
Read More