இயக்கம் : T. சுரேஷ் குமார்
தயாரிப்பு : ராஜ்ஸ்ரீ வென்சர்ஸ்
நடிகர்கள் : அன்சன் பால், ரெபா மோனிகா ஜான், ‘சங்கர் குரு’ ராஜா, அனுபமா குமார், மேத்யூ வர்கீஸ், கிஷோர் ராஜ்குமார், வெற்றி வேல் ராஜா மற்றும் பலர்.
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் காதல் கதைகள் போட்டி போட்டுக்கொண்டு வந்தது ஆனால் இப்போது இரத்தம் தெறிக்கும் கதைகளே அதிகம். அந்த வகையில் இளைப்பாறும் வகையில் வந்திருக்கிறது மழையில் நனைகிறேன் திரைப்படம்.
தமிழ் அடித்துதுவைக்கப்பட்ட கதை, ஆனால் அதை சுவாரஸ்யமாக தந்திருக்கிறார்களா ?
வாழ்க்கையில் எந்த லட்சியமும் இல்லாத இளைஞனாக ஊதாரியாக இருக்கும் ஜீவா செபாஸ்டியன் ( அன்சன் பால்) எனும் கதையின் நாயகன்- அமெரிக்காவிற்கு சென்று உயர்கல்வியை கற்று, அங்கேயே வேலையைத் தேடிக் கொண்டு, வாழ்க்கையை சொகுசாக வாழ வேண்டும் என லட்சிய வேட்கையுடன் இருக்கும் ஐஸ்வர்யா ( ரெபா மோனிகா ஜான்) எனும் இளம்பெண்ணை சந்திக்கிறார். சந்தித்த தருணத்திலேயே காதலிக்கவும் தொடங்குகிறார். நாயகனின் காதல் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதுதான் இப்படத்தின் கதை.
ஒரு மழை நாளில் நாயகனுக் நாயகியும் சந்தித்துகொள்கிறார்கள் பார்த்தவுடன் நாயகனுக்கு காதல், நாயகிக்கு பிடிக்கவில்லை ஆனால் அவனைப்பற்றி தெரிந்த பிறகு பழக ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் ஒரு விபத்து, பெரும் பிரச்சனையை கொண்டு வருகிறது. அதிலிருந்து மீண்டு ஒன்று சேர்கிறார்களா என்பது தான் படம்.
சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தில் வில்லனாக வந்த அன்சன் பால் இதில் நாயகனாக நடித்துள்ளார். நாயகனுக்கான வாட்ட சாட்டமான தோற்றம், அதிலும் காதல் கதையில் அற்புதமாக பொருந்திப் போகிறார். துரத்தி துரத்தி காதலிப்பதும் காதலிக்காக உருகுவதும் என சிறப்பான நடிப்பை தந்துள்ளார்.
போல்டான ஹீரோயின் வேடத்தில் ரெபா மோனிகா ஜான். தன் கதாப்பத்திரம் உணர்ந்து அழுத்தமான நடிப்பை வழங்கியுள்ளார்.
கனவுக்காட்சியும், நிஜமும் மாறி வரும் போது உண்மையில் ஆச்சரியத்திற்கு பதில் குழப்பம் தான் வருகிறது.
காதல் கதையில் பிரச்ச்னைகளா இல்லை, விபத்தும் அதைத் தொடர்ந்த காட்சிகளும் அயர்ச்சியைத் தருகிறது.
காதல் கதையில் இசை தான் முக்கியம் ஆனால் இப்படத்தில் பாடல்கள் சுமார் தான். காதல் காட்சிகளிலும் பெரிதாக ஈர்க்கவில்லை.
இன்னும் கொஞ்சம் கவனம் சேர்த்து திரைக்கதையை கோர்த்திருந்தால் ஒரு நல்ல ரொமாண்டிக் மூவியாக வந்திருக்கும். மழையில் நனைகிறேன் ஏமாற்றம்.