இயக்கியவர்: விஜய் கார்த்திகேயா
நடிகர்கள்: சுதீப், வரலக்ஷ்மி சரத்குமார், சம்யுக்தா ஹார்னாட், சுக்ருதா வாக்லே, சுனில், சரத் லோஹிதாஸ்வா, வம்சி கிருஷ்ணா, ஆடுகளம் நரேன், பிரமோத் ஷெட்டி, ரெடின் கிங்ஸ்லி, இளவரசு
இசை: பி அஜனீஷ் லோக்நாத்
தயாரிப்பு: வி கிரியேஷன்ஸ் & கிச்சா கிரியேஷன்ஸ்
கலைப்புலி தாணு, கிச்சா சுதீப்பை வைத்து கன்னடத்தில் தயாரித்திருக்கும் திரைப்படம். இப்படத்தை அறிமுக் இயக்குநர் விஜய் கார்த்திகேயா இயக்கியிருக்கிறார்.
இது முழுமையான ஹீரோ ஆக்சன் மசாலா படம் ஆனால் முழுமையாக ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
ஒரு ஹீரோவுக்கான மாஸ் ஆக்சன் படத்தில், இயக்குநர் புத்திசாலித்தனமான திரைக்கதையை மட்டும் புகுத்திவிட்டால், அது பார்ப்பவர்களுக்கு ட்ரீட் தான். அதை மிக அட்டகாசமாக இந்தப்படத்தில் நிறைவேற்றி உள்ளது படக்குழு.
கதை நாயகனை வைத்து, மொன்னையான காட்சிகளின் மாஸ் காட்டாமல், கதையில் வரும் டிவிஸ்ட்டை வைத்து, புத்திசாலியான திரைக்கதை அமைத்தால் அது தான் பக்கா மாஸ்.
கிட்டதட்ட ஒரே இரவில் நடக்கும் கைதி டைப் கதை, ஒரு போலீஸ் ஸ்டேஷன் உள்ளே இருக்கும் மினிஸ்டர் ஆட்களை மீட்க போராடும் ரௌடி கேங், மினிஸ்ட்ரி கேங், அவர்களோடு போராடும் ஹீரோ. அவ்வளவு தான் ஒன் லைன்.
ஆனால் படத்தில் வில்லனும்கும் ஹீரோவுக்குமான ஆடுபுலி ஆட்டம். ஒவ்வொரு டிவிஸ்ட்டாக நகர்த்திக்கொண்டு போகும் திரைக்கதை. அசத்தலனா இண்டர்வெல். என எல்லாமே மிக மிக சுவாரஸ்யமாக அமைக்கப்பட்டிருக்கிறது.
கன்னட ஒரிஜினல் என்பதால் தெலுங்கு வாடையில், ஹீரோவுக்கு கொஞ்சம் மாஸ் தூக்கலாக எழுதப்பட்டிருக்கிறது. சின்ன சின்ன மைனஸ்களைத் தாண்டியும் படம் மிக அட்டகாசமாக இருக்கிறது.
ஆக்சன் கமர்ஷியல் ரசிகர்களுக்கான பக்காவான விருந்து.
படம் ஆரம்பித்த 10 வது நிமிடத்தில் சூடு பிடிக்கும் படம், இறுதி வரை ஜெட் வேகத்தில் பறக்கிறது. கிச்சா சுதீப்பிற்கு அவரது மாஸிற்கு பொருந்திப்போகும் அட்டகாச கேரக்டர்.மனிதர் பின்னியிருக்கிறார்.
இசை, ஒளிப்பதிவை தாண்டி கலை இயக்கம் அட்டகாசம் அந்த உலகிற்குள் நம்மை கூட்டிப்போய் விடுகிறார்கள்.
பல இடங்களில் கைதி படத்தை ஞாபகப்படுத்தினாலும் அது வேறு, இது வேறு என நம்மையே அழுத்தமாக சொல்ல வைத்தது தான் படக்குழுவின் வெற்றி.
கமர்ஷியல் பட ரசிகர்கள் தவற விடக்கூடாத படம்