நயன்தாரா மீண்டும் மலையாளத்தில் நடிக்க உள்ள படம் “லவ் ஆக்சன் டிராமா

0
334

புதிய நியமம் படத்திற்கு பிறகு நயன்தாரா மீண்டும் மலையாளத்தில் நடிக்க உள்ள படம் “லவ் ஆக்சன் டிராமா”. இந்த படத்தில் நாயகனாக நிவின் பாலி நடிக்க உள்ளார். காயம் குளம் கொச்சுண்ணி படத்தின் படப்பிடிப்பிற்கு பிறகு கடந்த ஏப்ரல் மாதத்திலே இந்த படத்தின் படப்பிடிப்பும் துவங்க இருந்தது. ஆனால் நிவின் பாலிக்கு காலில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக படப்பிடிப்பு தாமதமாகி தற்போது துவங்கியுள்ளது.

மலையாள படமான இந்த படத்தின் 90 சதவீத படப்பிடிப்பை சென்னையில் நிகழ்த்த உள்ளனர். மீதமுள்ள படப்பிடிப்பு  மட்டும் கேரளாவில் நடக்க உள்ளது. இந்த படத்தை முன்னணி இயக்குனரான வினீத் சீனிவாசனின் தம்பியான தயன் சீனிவாசன் என்பவர் இயக்க உள்ளார். மலையாள நடிகரான இவர் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். வழக்கம் போல இந்த கூட்டணியில் காமெடி நடிகர் அஜூ வர்கீஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

இது தவிர நடிகராக மட்டுமல்லாமல் இந்த படத்தின் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார் அஜூ வர்கீஸ். இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்னாலே அதிக தொகைக்கு கைப்பற்றியுள்ளது ஆசியா நெட் சேனல். மேலும் இந்த படத்தின் சிறப்பு பூஜை கடந்த ஜூலை 14இல் கொச்சியில் அஞ்சுமனை தேவி கோவிலில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து விரைவில் இந்த படத்தின்  படப்பிடிப்பை சென்னையில் துவங்கவுள்ளனர்.