மம்முட்டியின் ‘ சி.பி.ஐ. டைரிக் குறிப்பு- பாகம் 5 தயாராகப் போவது உறுதி!

0
476

இந்திய மொழிகளில் ஒரு படம் அடுத்தடுத்து அதன் தொடர் பாகங்களாக நான்கு முறை எடுக்கப்பட்டு அத்தனையும் ஹிட் அடித்தது என்றால் அது 1988ல் மலையாளத்தில் மம்முட்டி நடித்து வெளியான ஒரு சி.பி.ஐ.டைரிக்குறிப்பு படம் மட்டும்தான். இந்தப்படத்தில் சேதுராம ஐயர் என்ற சி.பி.ஐ அதிகாரி வேடத்தில் வழக்கத்திற்கு மாறான மிடுக்கான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் மம்முட்டி. சொல்லப்போனால் மம்முட்டியை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி அவருக்கு தமிழ்சினிமாவிலும் ஒரு இடத்தைப் பிடித்துக் கொடுத்தது இந்தப்படம்தான்.

இதன் அடுத்த தொடரான ஜகார்த்தா 1989ல் வெளியானது. அதன்பிறகு இதன் அடுத்தடுத்த பாகங்களாக 2004ல் சேதுராமையர் சி.பி.ஐயும் 2005ல் நேரறியான் சி.பி.ஐயும் வெளியாகின. ஒவ்வொரு பாகத்திலும் ஒவ்வொருவிதமான வழக்கை டீல் செய்வார் மம்முட்டி இதன் ஒவ்வொரு பாகங்களிலும் மம்முட்டியின் சேதுராமையர் காதாபாத்திரமும் மாறவில்லை. அவரது கெட்டப்பும் முதல் படத்தில் பார்த்த்துபோலவே தொடர்ந்தது

இந்த நான்கு படங்களுக்குமே பல ஆச்சரியமான ஒற்றுமைகள் உண்டு. இந்த நான்கு படங்களின் கதையையும் எழுதியவர் பிரபல கதாசிரியர் எஸ்.என்.சுவாமி. இந்த நான்கு படங்களையும் இயக்கியவர் டைரக்டர் கே.மது. இந்த நான்கு படங்களிலும் ஹீரோவாக மம்முட்டிதான் நடித்திருந்தார். இவருடன் சாக்கோ என்கிற கேரக்டரில் முகேசும் விக்ரம் என்கிற கேரக்டரில் ஜெகதிஸ்ரீகுமாரும் சி.பி.ஐ. அதிகாரிகளாக நான்கு படங்களிலும் சேர்ந்து நடித்திருந்தனர். இந்த நான்கு படங்களுமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.

தற்போது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தியாக இந்தத் தொடரில் ஐந்தாவது சி.பி.ஐ. கதையை ‘பிளாக் இன்வெஸ்டிகேட்டர்ஸ்’ என்ற பெயரில் படமாக எடுக்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம். இதற்கான கதையையும் எஸ்.என்.சுவாமி தான் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய நான்கு சி.பி.ஐ. கதைகளைவிட இந்தப்படம் கூடுதல் சுவராஸ்யத்துடன் இருக்குமாம். டைரக்டர் கே.மது, மம்முட்டி, முகேஷ், ஜெகதிஸ்ரீகுமார் என அதே கூட்டணிதான் இந்தப்படத்திலும் ரசிகர்களுக்கு விருந்து படைக்க தயாராகி வருகிறது.

இப்படி நீண்ட நாட்களாக இந்த சி.பி.ஐ டைரி குறிப்பு படத்தின் 5ஆம் பாகம் உருவாக இருக்கிறது என செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தி, பின் அப்படியே அமுங்கிவிடும். என்றாலும் தர்போது ஐந்தாம் பாகத்தின் படப்பிடிப்பு வரும் 2018ல் நிச்சயமாக தொடங்க இருக்கிறது என கூறியுள்ளார் எஸ்.என்.சுவாமி.ம் பார்ப்போம்