”சுய் தாகா- மேட் இன் இந்தியா ” திரைப்பட விளம்பர பிரச்சாரம் நாளை தொடக்கம்!

”சுய் தாகா- மேட் இன் இந்தியா ” திரைப்பட விளம்பர பிரச்சாரம் நாளை தொடக்கம்!

வருண் தவான் - அனுஷ்கா ஷர்மா ஆகியோர் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு  நாளை (ஆகஸ்ட் 7 ஆம் தேதி) " சுய் தாகா- மேட் இன் இந்தியா " திரைப் படத்திற்கான விளம்பர பிரச்சாரத்தை தொடங்க உள்ளனர் ! இந்த படத்தில் வருண் தவான் தையல் காரராகவும் அனுஷ்கா ஷர்மா ( EMBROI DERER ) தையல் வேலைப்பாடு செய்பவராகவும் நடித்துள்ளனர். எனவே இப்படத்திற் கான விளம்பரத்தை தொடங்க ஆகஸ்ட் 7 ஆம் தேதியைவிட சிறந்த நாளாக இருக்கப் போவதில்லை . இத்திரைப்படத்தினை நெசவாளர்களுக்கும் ,கைவினைஞர்களுக்கும் சமர்பிப்பதில் படக்குழு மிக்க மகிழ்ச்சி அடைகிறது.அதனால் இப்படத்தின் விளம்பர வேலையை ஆகஸ்ட் தேசிய கைத்தறி தினத்தன்று தொடங்குகிறோம் என தயாரிப்பாளர் மணீஷ் ஷர்மா தெரிவித்துள்ளார் . இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி தேசிய கைத்தறி தினமாக கொண்டாட மத்திய அரசு அறிவித்தது.அதே நாளில் 1905 ஆம் ஆண்டில் சுதேசி…
Read More
நானும் டைரக்டரா ஆகப் போறேன்!- ஐஸ்வர்யா ராய் அறிவிப்பு!

நானும் டைரக்டரா ஆகப் போறேன்!- ஐஸ்வர்யா ராய் அறிவிப்பு!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான குரு படத்தில் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தின் படப்பிடிப்பில் இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ராவண் படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். இப்படம் 2010-ம் ஆண்டு வெளி யானது.இப்படத்திற்கு பிறகு இருவரும் இணைந்து படங்களில் நடிக்கவில்லை. 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இருவரும் ‘குளோப் ஜாமுன்’ என்ற புதிய படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தை இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கு கிறார்.  ஃபன்னி கான் புரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா இதை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் தன்னுடைய இயக்குநர் கனவை வெளிப்படையாக அப்போது அறிவித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராய். ‘ஏ தில் ஹாய் முஷ்கில்’ படத்துக்குப் பிறகு சிறிய இடைவெளி விட்டு ஐஸ்வர்யா ராய் நடித்திருக்கும் படம் ‘ஃபன்னி கான்’. அதுல் மஞ்ச்ரேகர் இயக்கியுள்ள இந்தப்…
Read More
பாலிவுட்டில் கால்பதிக்கும் வேதிகா !

பாலிவுட்டில் கால்பதிக்கும் வேதிகா !

கோலிவுட்டில் பரதேசியில் அதர்வா முரளியை மிரட்டியும் விரட்டியும் காதலித்து அங்கம்மாவாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் வேதிகா. தமிழிலிருந்து பாலிவுட் போய் சாதித்த கதாநாயகிகளின் பட்டியலில் அவருக்கும் ஓரிடம் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது.  பாபநாசம் படமெடுத்த ஜித்து ஜோசப் இந்தியில் களமிரங்கும் கிரைம் திரில்லர் படத்தில் வேதிகா நடிக்கிறார். 2012 ல் வெளிவந்த " த பாடி " என்ற ஸ்பானிஷ் படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகிறது. இம்ரான்ஹாஸ்மி கதாநாயகனாகவும் முக்கிய வேடத்தில் ரிஷி கபூரும் நடிக்கும் இந்த படத்தில், காலகண்டி பட நடிகை ஷோபிதா துலிபாலா மற்றொரு முக்கிய வேடத்திற்கு ஒப்பந்தமாகி உள்ளார். தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு படங்களில் நடித்துள்ள வேதிகாவுக்கு 2013 ல் வெளிவந்த பாலாவின் பரதேசி படம் நல்ல புகழை தேடிதந்தது. பாலிவுட் படவாய்ப்பு குறித்து கேட்டபோது, இந்தி பட உலகில் நுழைவதற்கு நல்ல வாய்ப்பை எதிர்பார்திருந்தேன், இப்பொழுது இந்த வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி…
Read More
ஷகீலா-வின் வாழ்க்கை படமாகிறது!

ஷகீலா-வின் வாழ்க்கை படமாகிறது!

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு கவர்ச்சி பட நாயகியாக நடித்த 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷகீலா. மலையாளப் படங்களில் பெரிதும் பேசப்பட்ட இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என 110-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவரது வாழ்க்கை படமாக உருவாக இருக்கிறது. தெலுங்கு, கன்னடம் இந்தி மொழிகளில் படங்களை இயக்கிய இந்திரஜித் லங்கேஷ் என்பவர் இந்த படத்தை இயக்கவிருக்கிறார். ஷகிலா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை ரிச்சா சத்தா நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க இருக்கிறது. 16 வயதில் சினிமாவில் நுழைந்த ஷகீலாவின் சினிமா வாழ்க்கையை மையப்படுத்தியே இந்த படம் உருவாக இருக்கிறது. இந்த படம் குறித்து ரிச்சாவின் செய்தித் தொடர்பாளர் கூறும் போது, மலையாள சினிமா உலகில் பல்வேறு கவர்ச்சி படங்களில் நடித்து 90-களில் பிரபலமான நடிகையாக வலம் வந்த ஷகீலாவின் வாழ்க்கை பற்றிய…
Read More
‘பியாண்ட்  தி க்லௌட்ஸ்’  -வரும் ஏப் 20 ரிலீஸ்!

‘பியாண்ட்  தி க்லௌட்ஸ்’ -வரும் ஏப் 20 ரிலீஸ்!

டச்சிங்கான கதைகளை தன் படைப்புகளால் பேச வைத்து பலகோடி ரசிகர்களைத் தன் வசம் வைத்திருக்கும் ஈரானிய இயக்குநர் மஜித் மஜீதி, ‘பியாண்ட்  தி க்லௌட்ஸ்’ என்ற இந்தி திரைப்படத்தை தற்போது இயக்கியுள்ளார். ஈரானிய மொழியில் இல்லாமல் மஜித் மஜீதி இயக்கும் முதல் படம் இது. ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் உலகம் முழுவதும் வரும்  ஏப்ரல் 20 ம் தேதி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, புதுமுக நடிகர் இஷான் கத்தார், மலையாள நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ள இப்படம் கலாச்சாரம் மற்றும் மொழிகளின் எல்லையைக் கடந்து, சக மனிதர்களை நேசிக்கும் சென்டிமென்ட்ஸ்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மஜித் மஜீதி இயக்கத்தில் உருவான ‘பியாண்ட் தி க்லௌட்ஸ்’ படத்தின் இசை அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இயக்குநர் மஜித் மஜீதி, நடிகர்கள் இஷான் கட்டார், மாளவிகா மோகனன், கவுதம் கோஷ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தயாரிப்பாளர்கள்…
Read More
‘பியாண்ட் த க்ளவுட்ஸ் ’ டிரைலர் – ஈரானிய இயக்குநர் மஜீத்-த்துக்கு பாராட்டு மழை!

‘பியாண்ட் த க்ளவுட்ஸ் ’ டிரைலர் – ஈரானிய இயக்குநர் மஜீத்-த்துக்கு பாராட்டு மழை!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஈரானிய இயக்குநர் மஜீத் மஜீதியின் பியாண்ட் த க்ளவுட்ஸ் படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. நேற்று மும்பையில் ரசிகர்களின் முன்னிலையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதில் படத்தின் இயக்குநர் மஜீத் மஜீதி, நடிகர்கள் இஷான் கட்டார், மாளவிகா மோகனன்,கௌதம் கோஷ், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான், நாமா பிக்சர்ஸ் பட நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள் ஷரீன் மன்திரி கேடியா, கிஷோர் அரோரா மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சுஜாய் குட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். படத்தைப் பற்றியும், ஈரானிய இயக்குநர் மஜீத் மஜீதியினைப் பற்றியும் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுஜாய் குட்டி பேசுகையில்,‘இந்த படம் கலாச்சாரம் மற்றும் மொழிகளின் எல்லையைக் கடந்து, சக மனிதர்களை எப்படி நேசிக்கவேண்டும் என்பதை இயக்குநர் மஜீதியின் பார்வையில் அற்புதமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட மாளவிகா மோகனனையும், வங்காளத்தைச் சேர்ந்த…
Read More
ராணி முகர்ஜியின் ஹிச்கி -ரொம்ப ஸ்பெஷல் படம்! – ஏன் தெரியுமோ?

ராணி முகர்ஜியின் ஹிச்கி -ரொம்ப ஸ்பெஷல் படம்! – ஏன் தெரியுமோ?

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ராணி முகர்ஜி. இவருடைய நடிப்புக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இவர் நடிப்பில் தற்போது ஹிச்கி என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இவர் தமிழில் ஹேராம் படத்தில் கமல் மனைவியாக நடித்தவர் என்பது அட்சினல் தகவல்..இந்நிலையில் ராணி முகர்ஜி இந்த ஹிச்கி படத்தில்  ஒரு நரம்பு மண்டல கோளாறு, டூரெட்ஸ் நோய்க்குறியைக் கொண்டிருக்கும் நைனா மாதுர் எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார். 2008ம் ஆண்டு வெளியான ‘ஹிக்கி பிராட் கோஹன்னின்’ புகழ்பெற்ற ‘ஹால்மார்க்’ தொலைக்காட்சி சுயசரிதையை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த ஹிச்கி திரைப்படத்தின் மூலம் சமூகத்திற்கு ராணி முகர்ஜி மிக முக்கிய கருத்தினை தெரிவிக்க உள்ளார். குறிப்பாக இப்படத்தின் விளம்பரம் மற்றும் ரிலீஸை 5 மொழிகளில் செய்யது இப்படத்தினை அதிகமாக மக்களிடையே கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளார். இது குறித்து “தனக்கு ஹிச்கி திரைப்படத்தின் கதை ஒரு நடிகையாகவும் மற்றும் பொதுமக்கள் நிலையிலும் வைத்து பார்க்கும்போது…
Read More
ஜனவரி 25ம் தேதி பத்மாவதி திரைப்படம்  ரிலீஸ்!

ஜனவரி 25ம் தேதி பத்மாவதி திரைப்படம் ரிலீஸ்!

தீபிகா படுகோன் நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள பத்மாவதி திரைப்படம் 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்தூர் ராணி பத்மினியின் வாழ்க்கையுடன் தொடர்புடையதாகும். ராஜபுத்திர வம்ச மக்களை இழிவுப்படுத்தும் விதமாக பத்மாவதி திரைப்படக் காட்சிகள் உள்ளதாக ராஜ்புத் சேனா, கர்னி சேனா, சாத்ரிய சமோஜ் போன்ற அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் பல்வேறு மாநிலங்களில் இப்படத்திற்குத் தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக திரைப்படத்தின் வெளியீடு நிறுத்தி வைக்கப்பட்டது. கடும் எதிர்ப்புகள், போராட்டங்கள் மற்றும் தணிக்கை பிரச்சினை ஆகிய காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைப்பதாக வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்தது. இதையடுத்து படத்தின் வரலாற்றுத் தகவல்களை ஆய்வு செய்ய முன்னாள் அரச குடும்பத்தினர், வரலாற்று ஆய்வாளர்கள் உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு வரலாற்றுத் தகவல்களை படம் திரிபு செய்துள்ளதா என்று ஆய்வு செய்தது. பின்பு தணிக்கை வாரியத்தின் அறிவுறுத்தல்களின் பேரில் திரைப்படத்தின் பெயரை…
Read More
சல்மான் நடித்த  டைகர் ஜிந்தா ஹே டிசம்பர் 22 ல் வெளியாகிறது.

சல்மான் நடித்த டைகர் ஜிந்தா ஹே டிசம்பர் 22 ல் வெளியாகிறது.

‘டைகர் ஜிந்தா ஹே’ என்றவுடன் நம் நினைவுக்கு வருவது நெஞ்சை உறைய வைக்கும் அப்படத்தின் பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகள் தான். நம்மை பதட்டத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்று வாயை பிளந்து பார்க்க வைக்கும், பரப்பரப்பான சண்டைக் காட்சிகளை கொண்ட, பாலிவுட் ஸ்டார் சல்மான் கான் டைகராக நடிக்கும் டைகர் ஜிந்தா ஹே 2017 ஆம் ஆண்டில் வெளியாகும் ஆக்ஷன் படங்களிலேயே மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாகும். படத்தின் டைகர் கதாபாத்திரம், ஆபத்தான மற்றும் கனரக ஆயுதங்களை ஏந்தி சண்டையிடும் கதாபாத்திரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. படத்தில், சல்மான் வைத்திருக்கும் எந்திர துப்பாக்கியின் பெயர் MG 42. இதை வைத்து டைகர் எதிரிகளை துவம்சம் செய்யும் காட்சி தான் படத்தில் மிக முக்கியமான காட்சியாக உள்ளது. இது போன்ற கனரக ஆயுதங்களை கொண்டு உருவாக்கப்படும் காட்சிகள் அவ்வளவு சுலபமல்ல. MG 42 ஒரு நவீன தொழில் நுட்பத்தில் உருவான கனரக எந்திர துப்பாக்கியாகும். துப்பாக்கியின் எடை மட்டும் 25 முதல்…
Read More
ஓம் புரியின் வாழ்க்கையைச் சொல்லும் படம் தயாராகவுள்ளது

ஓம் புரியின் வாழ்க்கையைச் சொல்லும் படம் தயாராகவுள்ளது

இந்தியா, பாகிஸ்தான், பிரிட்டிஷ் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் ஓம் புரி. இந்தியாவில் உருவான படங்கள் மட்டுமன்றி இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் தயாரான படங்களிலும் நடித்து பிரபலமாவர். 1980 ஆண்டு வெளியான 'ஆக்ரோஷ்' படத்தின் தனது அபாரமான நடிப்பால் பல்வேறு விருதுகளை வென்றார். 1982ம் ஆண்டு உருவான 'காந்தி' படத்தில் சிறுகதாபாத்திரத்தில் நடித்தவர். உலகளவில் பிரிட்டிஷ் படங்களான 'My Son the Fanatic', 'East is East', 'The Parole officer' உள்ளிட்டவற்றில் நடித்து அறியப்பட்டவர். அப்படங்களைத் தொடர்ந்து 'City of Joy', 'The Ghost and the Darkness' போன்ற ஹாலிவுட் படங்களில் ஜாக் நிக்கேல்சன், வால் கில்மர், டாம் ஹாங்க்ஸ், ஜுலியா ரோபட்ஸ் உள்ளிட்ட நடிகர்களோடு நடித்துள்ளார்.பல்வேறு இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார் ஓம் புரி, இந்தி படங்களில் அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான், அக்‌ஷய்குமார் போன்ற நடிகர்களோடு நடித்துள்ளார்.…
Read More