ராணி முகர்ஜியின் ஹிச்கி -ரொம்ப ஸ்பெஷல் படம்! – ஏன் தெரியுமோ?

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ராணி முகர்ஜி. இவருடைய நடிப்புக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இவர் நடிப்பில் தற்போது ஹிச்கி என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இவர் தமிழில் ஹேராம் படத்தில் கமல் மனைவியாக நடித்தவர் என்பது அட்சினல் தகவல்..இந்நிலையில் ராணி முகர்ஜி இந்த ஹிச்கி படத்தில்  ஒரு நரம்பு மண்டல கோளாறு, டூரெட்ஸ் நோய்க்குறியைக் கொண்டிருக்கும் நைனா மாதுர் எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார். 2008ம் ஆண்டு வெளியான ‘ஹிக்கி பிராட் கோஹன்னின்’ புகழ்பெற்ற ‘ஹால்மார்க்’ தொலைக்காட்சி சுயசரிதையை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

இந்த ஹிச்கி திரைப்படத்தின் மூலம் சமூகத்திற்கு ராணி முகர்ஜி மிக முக்கிய கருத்தினை தெரிவிக்க உள்ளார். குறிப்பாக இப்படத்தின் விளம்பரம் மற்றும் ரிலீஸை 5 மொழிகளில் செய்யது இப்படத்தினை அதிகமாக மக்களிடையே கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளார். இது குறித்து “தனக்கு ஹிச்கி திரைப்படத்தின் கதை ஒரு நடிகையாகவும் மற்றும் பொதுமக்கள் நிலையிலும் வைத்து பார்க்கும்போது மிகவும் விரும்ப வைத்து உள்ளது.முடிந்தவரை இப்படத்தினை மக்களிடையே கொண்டு செல்ல முயற்சிப்பேன் ” ராணி கூறியுள்ளார்.

முன்னரே நடிகை ராணி தான் நடித்த ஹிச்கி திரைப்படம் சமூக பாகுபாடு, சமூக பழக்கவழக்கம் போன்ற கருத்துக்கள் தரும் என்று அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளார்.இத்திரைபடத்தின் கதையும், கதைக்கருவும் மக்களுக்கு பலவீனத்தை குறைத்து வாழ்க்கையில் முன்னேறும் பல நல்ல செய்திகளை தரும் எனவும் கூறியுள்ளார் . அதிலும் ராணி முகர்ஜி இத்திரைப்படத்தில் ஒரு நரம்பு மண்டல கோளாறு, டூரெட்ஸ் நோய்க்குறியைக் கொண்டிருக்கும் நிலைமையிலும் வாழ்க்கையில் எப்படி போராடி வெல்ல வேண்டுமென்ற நல்லக்கருத்தை இத்திரைப்படம் தெரிவிக்கவுள்ளதாம். அதனால் ஹிச்கி  திரைப்படம் சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை தரும் படமாக அமையும்.

இப்படம் மக்களுக்கு அவர்களது பலவீனத்தை எடுத்துச்சொல்லி வாழ்கையில் முன்னேறும் பல கருத்துக்களை விளக்கவுள்து .சமூக பாகுபாடு, சமூக ஏற்றத்தாழ்வு,சமூக பலக்கவழக்கம் போன்றவற்றை எடுத்துக்கூறி வாழ்க்கையில் முன்னேற்றமடைய தேவையான முக்கிய அம்சங்களையும் இப்படம் கொண்டுள்ளது. இத்திரைப்படத்தை சித்தார்த் P. மல்ஹோத்ரா இயக்கி , மனீஷ் ஷர்மா தயாரித்துள்ளார்.

இதையொட்டியே வாழ்க்கைக்கு தேவையான குறிக்கோள்களையும் ,நெறிமுறைகளையும் ஹிச்கி  திரைப்பபட விளம்பரத்தில் தெரிவிக்க உள்ளார்.

ஹிச்கி  திரைப்படம் பிப்ரவரி 23 அன்று வெளியிடப்பட உள்ளது.