சாதாரணமான குடும்பத்தில் அசாதாரணமாக நடக்கும் சிறு சம்பவமே  Xzy

சாதாரணமான குடும்பத்தில் அசாதாரணமாக நடக்கும் சிறு சம்பவமே Xzy

த்ரில்லர் கதைகளுக்கு எப்பொழுதும் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உண்டு. அப்படி ஒரு வரவேற்பு பெற இருக்கும் படம் அறிமுக இயக்குனர் சுதாகர் இயக்கி இருக்கும் படம் Xzy . யதார்த்தமான குடும்பங்களுக்குள் நடக்கும் குற்றங்கள்தான் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்குபவைகளாக இருக்கின்றன . நம்மை சுற்றி நடக்கும் கிரைம்களை நாம் பத்திரிக்கைகளில் அன்றாட செய்திகளாக கடந்து சென்று விடுகிறோம். மிக சர்வ சாதாரணமாக இன்று குற்றங்கள் நம் நாட்டில் நடைபெற்று வருகின்றன... அதிகாரங்களும், சட்டங்களும் , தண்டனைகளும் , மனித உரிமைகளும் மனிதர்கள் நிம்மதியாக வாழ்வதற்குத்தான் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. பெரும்பாலும் குடும்பங்களுக்குள் நடக்கும் வன்முறைகளும், குற்றங்களுக்கும் சமூகமும் ஒருவகையில் காரணமாக இருக்கின்றது. சமூகத்தில் ஏற்படும் சிறு மாற்றங்கள் கூட தனிமனித வாழ்விலும், குடும்பங்களிலும் வன்முறைகளை தூண்டும் வகையில் இருந்துவிடுவதுண்டு. அப்படி ஒரு குடும்பத்தில் ஏற்படும் வன்முறை சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லராக எப்படி மாறுகிறது என்பதுதான் Xzy . மிகச்சாதாரணமான குடும்பத்தில்…
Read More
நடிகர் விஜய் சேதுபதி கதை, திரைக்கதை, வசனத்தில் நடிக்கும் விமல்!

நடிகர் விஜய் சேதுபதி கதை, திரைக்கதை, வசனத்தில் நடிக்கும் விமல்!

விமலின் நடிப்பில் தயாராகி வெளியாக காத்திருக்கும் படங்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டே செல்கிறது. இயக்குநர் சற்குணத்தின் இயக்கத்தில் 'எங்க பாட்டன் சொத்து',  இயக்குநர் மாதேஷ் இயக்கத்தில் 'சண்டக்காரி',  ‘தர்ம பிரபு’  இயக்குநர் முத்துகுமாரின் இயக்கத்தில் 'கன்னிராசி' ஆகிய படங்கள் விமலின் நடிப்பில் உருவாகி அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டிற்கு தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில் விமல் நடித்த சில படங்கள் கொரோனா ஊரடங்கால் பாதியில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. ‘படவா’, ‘புரோக்கர்’, ‘மஞ்சள் குடை’, ‘லக்கி’ மற்றும் இயக்குநர் வேலுவின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இன்னமும் பெயரிடப்படாத படம்… ஆகிய இந்த நின்றிருக்கும் படங்களை விரைவாக முடித்து கொடுக்கவிருக்கிறார் நடிகர் விமல். இதையடுத்து இயக்குநர் சரவண சக்தி இயக்கத்தில் 'குல சாமி' என்ற அதிரடி ஆக்ஷன் படத்திலும், இயக்குநர் சுராஜின் உதவியாளர் ராஜதுரையின் இயக்கத்தில் 'விடா முயற்சி விஸ்வரூப வெற்றி' என்ற படத்திலும் நடிக்க தயாராகி வருகிறார் விமல். இதில் இந்த 'குல சாமி' படத்தின்…
Read More
காந்தக் கண்ணழகி ‘சில்க் ஸ்மிதா’ வாழ்க்கை- படமாகிறது!

காந்தக் கண்ணழகி ‘சில்க் ஸ்மிதா’ வாழ்க்கை- படமாகிறது!

1980-களிலும், 1990-களிலும் தென்னிந்திய திரைப்பட துறையில்… இயக்குநர்களாலும், தயாரிப்பாளர்களாலும், நடிகர்களாலும் தவிர்க்க முடியாத  கவர்ச்சி நடிகையாக இருந்தவர் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா. அவருக்கு முன்னால் பல கவர்ச்சி நடிகைகளை திரைப்படவுலகம் பார்த்திருக்கிறது என்றாலும்... தன்னுடைய மயக்கும் விழி களாலும், வாளிப்பான உடல் கட்டினாலும் மொத்த தென்னிந்திய ரசிகர்களையும் கட்டிப் போட்ட கவர்ச்சி  நடிகை  சில்க் ஸ்மிதா மட்டுமே. ஆந்திராவில் ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து சிறு வயதில் சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்ட ‘விஜயலட்சுமி’ என்ற ‘சில்க் ஸ்மிதா’ தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும், திரைப்பட வாழ்க்கையிலும் சந்தித்த போராட்டங்கள் ஏராளம். இப்போது கணக்கிலடங்காத திருப்பங்கள் நிறைந்த அவருடைய வாழ்க்கையை ‘அவள் அப்படித்தான்’ என்ற பெயரில் காயத்ரி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் பிரபல தயாரிப்பாளரும், இயக்குநருமான சித்ரா லட்சுமணனும், முரளி சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான எச்.முரளியும்  இணைந்து தயாரிக்கின்றனர்.  இந்தப் படத்திற்கு 'அவள் அப்படித்தான்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.  பல விளம்பரப் படங்களை…
Read More
தாதா 87 பட இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கும் புதிய படம் ‘பவுடர்’!

தாதா 87 பட இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கும் புதிய படம் ‘பவுடர்’!

சாருஹாசன் நடித்த 'தாதா 87' வெற்றிப் படத்தை தந்த இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி, தற்போது ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடிக்கும் 'பொல்லாத உலகில் பயங்கர கேம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். படத்தில் சீயான் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன், அர்ஜூமன் கதையின் நாயகனாக நடிக்கிறார். அனித்ரா நாயர்,ஆராத்யா, சாந்தினி, சான்ட்ரியா,மொட்டை ராஜேந்திரன்,மைம் கோபி ஆகியோரும் நடிக்கின்றனர். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் தற்போது பவுடர் என்ற புதிய படத்தை இன்று துவங்கியுள்ளார் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி. வித்யா பிரதீப் முதன்மை வேடத்தில் நடிக்க மனோபலா, வையாபுரி ,ஆதவன் ஆகல்யா வெங்கடேசன், ஆகியோருடன் பல அறிமுக நாயக நாயகியர்களும் நடிக்கிறார்கள். த்ரில்லர் கலந்த பிளாக் காமெடியாக படமாக தயாராகிறது. கொரொனா வைரஸூக்காக மக்கள் முகமடி அணிந்து செல்வது இந்த காலம். ஆனால் பெரும்பாலான மக்கள் பவுடர் பூசிய போலியான முகத்தோற்றத்துடன் தங்கள் அடையாளத்தை மறைத்து காலம்…
Read More
மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிக்கும்! ‘பிசாசு-2’ திரைப்படம்

மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிக்கும்! ‘பிசாசு-2’ திரைப்படம்

மிஷ்கின் இயக்கத்தில்  'பிசாசு-2' திரைப்படம் உருவாக உள்ளதாக இன்றைக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'சைக்கோ' படத்துக்குப் பிறகு 'துப்பறிவாளன்-2' படத்தை இயக்கினார் மிஷ்கின். அதில் விஷாலுடன் ஏற்பட்ட சண்டையால் அந்தப் படத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகினார். அதற்குப் பிறகு தனது அடுத்த படத்துக்கான கதைகளை எழுதி வந்தார். சிம்பு மற்றும் அருண் விஜய் ஆகியோருக்கு கதைகளைக் கூறினார். இருவருமே அதில் நடிக்கச் சம்மதம் தெரிவித்தாலும், எப்போது படப்பிடிப்பு என்பதே தெரியாமல் உள்ளது. இதனால், இதற்கிடையில் வேறொரு புதிய படமொன்றை இயக்க திட்டமிட்டார் மிஷ்கின். இன்று(செப்டம்பர் 20) தன்னுடைய பிறந்த நாளையொட்டி இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று மிஷ்கின் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அதன்படி, தன்னுடைய இயக்கத்தில் அடுத்ததாக 'பிசாசு 2' உருவாகவுள்ளதாக நேற்று நள்ளிரவில் அறிவித்தார் இயக்குநர் மிஷ்கின். 2014-ம் ஆண்டு இயக்குநர் பாலாவின் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான படம் 'பிசாசு'. இந்தப் படம் அப்போது மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது…
Read More
‘நோ என்ட்ரி’ – பரபரப்பு திகில் படம்..!

‘நோ என்ட்ரி’ – பரபரப்பு திகில் படம்..!

ஜம்போ சினிமாஸ்  நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஏ.ஸ்ரீதர் தயாரித்துள்ள திரைப்படம் ‘நோ என்ட்ரி’. இவர் ஏற்கனவே 'நீயா-2' படத்தையும் தயாரித்துள்ளவர். இந்தப் படத்தில் நாயகியாக பிரதான வேடம் ஏற்று நடித்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா. ஆண்ட்ரியாவுடன் வாகா படத்தின் நாயகி ரண்யா, மும்பை சாக்ஷி, ஜெயஸ்ரீ, சதீஷ், ஆதவ் கண்ணதாசன், டில்லி, கோகுல் 'மானாட மயிலாட' புகழ் மானஸ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு - ரமேஷ் சக்கரவர்த்தி. இசை - அஜிஸ், பாடல்கள் கு.கார்த்திக், படத் தொகுப்பு – பிரதீப் E.ராகவ், நடன இயக்கம் - மானஸ், சண்டை காட்சிகள் - ஜி.என்.முருகன், வசனம் - செந்தில்குமார்,  கதை, திரைக்கதை, இயக்கம் - ஆர்.அழகு கார்த்திக். இயக்குநர் அழகு கார்த்திக் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் உலகில் அதிக மழை பெய்யும் இடமான மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சியில் நடைபெற்றுள்ளது. படத்தைப் பற்றி இயக்குநர் ஆர்.அழகு…
Read More
ஜெண்டில்மேன் – 2  தயாராகப் போகுது!

ஜெண்டில்மேன் – 2 தயாராகப் போகுது!

இந்த சினிமா எத்துனையோ தயாரிப்பாளர்களை அடையாளம் காட்டிக் கொண்டே இருக்கிறது. இங்கே எவருக்கும் நிரந்தர உயரமில்லை என்பதைத் தெரிந்தே களமாடுவோர் பலர்.. இப்போது தன் கம்பெனி பெயர் மற்றும் பட்ஜெட்--டை மிகைப்படுத்தி பிரமாண்ட படம் என்று போடுவது பேஷனாகி விட்டது.. ஆனால் நம் தமிழ் திரையுலகில் முதன் முறையாக ஒரு தயாரிப்பாளர் படத்தின் புரமோசன்களில் தன் படத்தை போட்டுக் கொண்டது முதன் முதலில் இவர்தான். சிரித்தபடி மீசையில் கை வைத்திருக்கும் இவர் படத்தைப் பார்த்த உடனேயே சொல்லிவிடலாம் இது பிரமாண்ட படம் என்று.அது மட்டுமல்ல, தான் தயாரித்த ஜெண்டில்மேன் என்ற படத்தின் பெயரையே தனது பெயரின் அடையாளமாகவும் வைத்துக் கொண்டவர். ஜெண்டில்மேன் கே.டி.குஞ்சுமோன் என்றே பின்னாளில் அழைக்கப்பட்டார். அவர் வளர்ந்த , வீழ்ந்த கதை குறித்து முன்னரே நம் ஆந்தை சினிமா குரூப்-பில் கட்டிங் கண்ணையா விரிவான ரிப்போர்ட் கொடுத்துள்ளது நினைவிருக்கும் நம் சக நிருபர் ஒருவர் சொன்னது போல் திரைப்படம்,…
Read More
நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் வெளியிடும் ‘குதிரை வால்’ திரைப்படம்!

நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் வெளியிடும் ‘குதிரை வால்’ திரைப்படம்!

இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்சன்ஸ்’ தயாரிப்பு நிறுவனம்  ‘பரியேறும் பெருமாள்’, ‘குண்டு’ ஆகிய படங்களை தயாரித்திருந்தது வெற்றியையும், பெரும் வரவேற்பையும் பெற்றுத் தந்தது. தற்போது அடுத்தடுத்து தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டு தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில்  நடிகர் கலையரசன், அஞ்சலி பாட்டீல் இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'குதிரை வால்' என்கிற படத்தை நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. யாழி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்  விக்னேஷ் சுந்தரேசன் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். எழுத்து – ராஜேஷ், இசை - பிரதீப் & மார்டின் விசர், படத் தொகுப்பு – M.K.P.கிரிதரன், ஒளிப்பதிவு- கார்த்திக் முத்துக்குமார், கலை இயக்கம் - ராமு தங்கராஜ், ஒலிப்பதிவு - ஆண்டனி ரூபன், பாடல்கள் – உமாதேவி, இயக்கம் - மனோஜ் லியோனல் ஜாசன் & ஷ்யாம், தயாரிப்பு - யாழி பிலிம்ஸ், வெளியிடு - நீலம் புரொடக்சன்ஸ். இந்தக் ‘குதிரை வால்’ படம் ரெகுலரான…
Read More
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கும் புதிய படம் !

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கும் புதிய படம் !

பிரபல தயாரிப்பாளரான போனி கபூர் கடந்த வருடம் அமிதாப் பச்சன் நடித்த "பிங்க்" திரைப்படத்தை தமிழில் அஜித் குமார் நடிப்பில் "நேர்கொண்ட பார்வை" படத்தை தயாரித்து , பெரும் வெற்றியை பெற்று அதன் மூலம் தமிழ் திரை உலகில் தன் வருகையை பதிவாக்கி கொண்டார். அதை தொடர்ந்து அஜித் குமார் நடிப்பில் , எச் வினோத் இயக்கத்தில் 'வலிமை" என்ற தலைப்பில் நேரடி தமிழ் படம் ஒன்றும் தயாரித்து வருகிறார் என்பதும் அனைவரும் அறிந்ததே. இதை தொடர்ந்து போனி கபூர் ஹிந்தியில் பெரும் வெற்றி பெற்ற "ஆர்டிக்கல் 15" படத்தையும் தமிழில் வழங்க உள்ளார். உதயநிதி ஸ்டாலின் இந்தப் படத்தில் நாயகனாக நடிக்க ,"கனா' படம் மூலம் இயக்குனர்களின் வரிசையில் முக்கிய இடம் பிடிப்பார் என எதிர்ப்பார்க்க படும் அருண்ராஜா காமராஜா இந்த படத்தை இயக்க உள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து போனி கபூர் வழங்கும் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்…
Read More
கலைப்புலி தாணு, சூர்யா & வெற்றி மாறன் கூட்டணியில் ‘ வாடிவாசல்’

கலைப்புலி தாணு, சூர்யா & வெற்றி மாறன் கூட்டணியில் ‘ வாடிவாசல்’

‘அசுரன்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குநர் வெற்றி மாறன் இயக்கும் திரைப்படம் ‘வாடி வாசல்’. தமிழின் மூத்த எழுத்தாளர்களின் ஒருவரான சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடி வாசல்’ என்னும் கதையை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாக இருக்கிறது. இத்திரைப்படத்தை தமிழ்ச் சினிமாவின் மூத்தத் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு தனது வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் நாயகனாக சூர்யா நடிக்கவிருக்கிறார். சூர்யாவும், வெற்றிமாறனும் தாணுவுடன் இணைவது இதுதான் முதல் முறையாகும். சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு ‘வாடி வாசல்’ படத்தின் முதல் பார்வையை தயாரிப்பாளர் தாணு இன்று வெளியிட்ட கையோடு, நடிகர் சூர்யாவுக்கும்  பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்தப் படத்திற்கு R.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். கலை இயக்கம் ஜாக்கி. இயக்கம் – வெற்றி மாறன்.
Read More