01
Dec
அஜித் பட இயக்குநரின் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் ‘லெஜெண்ட்’ சரவணனின் திரைப்பயணம் அட்டகாசமாய்த் துவங்கியுள்ளது. சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் அருள் முதலில் தங்கள் நிறுவன விளமபரப் படங்களில் நடித்து வந்தார். அந்தக் கடையைவிடவும், அதற்காக எடுக்கப்பட்ட விளம்பரம் அதிக அளவில் பேசப்பட்டது. காரணம், அந்த விளம்பரத்தில் முன்னணி நடிகைகளான ஹன்சிகா, தமன்னாவுடன் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளர் சரவணன் அருள் நடித்திருந்தார். அந்த விளம்பரத்துக்கு இணையத்தில் நல்ல ரீச் கிடைத்தது. சரவணன் அருள், அடுத்தடுத்த விளம்பரங்களில் புதுப்புது கெட்டப்புகளில் வந்து அசத்தினார். கொஞ்சம் நடனமும் ஆடினார். அப்போதே அவர் தியுரையுலகில் நடிகராக விரைவில் அறிமுகமாக உள்ளார் என்று கூறப்பட்டது. அவருக்கு ஜோடியாக ஹன்ஷிகா மோத்வானி நடிக்க உள்ளதாகவும் தகவல் பரவியது. இந்நிலையில் அஜித் பட இயக்குநரின் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் ‘லெஜெண்ட்’ சரவணனின் திரைப்பயணம் அட்டகாசமாய்த் துவங்கியே விட்டது. முன்பு…
